Pitchaimuthu Sudhagar :
தமிழக
மண்ணில் நீட் (NEET) தேர்வு திணிக்கப்படாமல் இருந்திருந்தால் இந்நேரம்
அவள் தமிழக மருத்துவ கல்லூரி ஒன்றில் முதலாம் ஆண்டில் தன் சக வகுப்பு
தோழர்களோடு தன் பிறந்த நாளை கொண்டாடி இருப்பாள்.
ஐந்து ஆண்டுகள் கழித்து, வானம் பார்த்த பூமியாய் கிடக்கும், வறட்சி நிறைந்த அரியலூர் பகுதிக்கு ஒரு மருத்துவர் கிடைத்திருப்பார்.
யார் கண்டார்? இந்த தேசத்தின் பிரதிநிதியாக வெளிநாடு ஒன்றில் உலகின் புகழ்பெற்ற மருத்துவராக இருந்திருப்பாள்.
அவள் தனக்காக கோடிக்கணக்கான சகோதர, சகோதரிகளை மட்டும் எடுத்துக் கொண்டு காற்றின் கோசங்களை கலைக்க முடியாத வெகு தொலைவிற்கு சென்று விட்டாள்.
இப்போதும் அவளது குழந்தைமை நிறைந்த முகமும், மிரட்சி விலகாத கண்களும் மட்டும் என் முன் வந்து நிற்கிறது.
மார்ச் 5 ஆம் திகதி, நம்மால் கைவிடப்பட்ட டாக்டர் அனிதாவின் பிறந்த நாள் இன்று. Happy Birthday Dr Anitha. நீட் என்னும் மாய மானை தமிழக மண்ணில் இருந்து விரைவில் அடித்து விரட்டுவோம்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக