மின்னம்பலம்: சென்னை
உத்தண்டி கடற்கரை அருகே விதிகளை மீறி பங்களா கட்டியதாகக் கூறி நடிகை ரம்யா
கிருஷ்ணன் உட்பட 138 விஐபிகளுக்கு மாநகராட்சி நோட்டீஸ் அனுப்பச் சென்னை
உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை உத்தண்டி கடற்கரையில் தனக்கு பங்களா கட்ட மாநகராட்சி இடம் தரவில்லை; எனவே பங்களா கட்ட அனுமதி தர வேண்டும் என்றும் அரசு விதிகளை மீறி பலர் அப்பகுதியில் பங்களா கட்டியுள்ளதாகவும் சென்னையைச் சேர்ந்த ரங்கநாதன் என்பவர் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு இன்று (மார்ச் 6) நீதிபதிகள் வேணுகோபால், வைத்தியலிங்கம் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது “கடற்கரை அருகே கட்டப்பட்ட ஆடம்பர பங்களாக்கள் அரசு விதிகளை மீறி கட்டப்பட்டுள்ளனவா” என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
இதற்கு, 138 கட்டிடங்கள் விதிமுறைகளை மீறி கட்டப்பட்டுள்ளதாக சிம்டிஏ, மாநகராட்சி அதிகாரிகள் பதில் அளித்தனர்.
அதன்படி நடிகரும் மக்கள் நீதி மய்யம் தலைவருமான கமல்ஹாசன், நடிகை ரம்யா கிருஷ்ணன் உட்பட 138 பேருக்கு நோட்டீஸ் அனுப்பச் சென்னை மாநகராட்சிக்கு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக