புதன், 7 மார்ச், 2018

கோவையில் பாஜக அலுவலகம் மீது பெட்ரோல் குண்டுகள் வீச்சு : சிசிடிவி காட்சிகளை வைத்து விசாரணை

தினகரன் : கோவை: கோவை மாவட்டம் சித்தாபுதூரில் உள்ள பாஜக அலுவலகம் மீது 2 பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இன்று அதிகாலை பெட்ரோல் குண்டுவீசி, ஆட்டோவில் தப்பியோடிய மர்மநபர்களை போலீசார் வலை வீசி தேடிவருகின்றனர்.  பெட்ரோல் குண்டு வீசப்படும் காட்சிகள் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. சிசிடிவி சிசிடிவி காட்சிகளை வைத்து ஆட்டோவில் வந்த மர்ம நபர்கள் யார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து விசாரிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.


நேற்று பெரியார் சிலை உடைக்கப்படும் என்ற பதிவை எச்.ராஜா தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டார். இதற்கு அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் பல்வேறு தரப்பினரிடம் கடும் கண்டனம் தெரிவித்தனர். இதனையடுத்து முகநூல் பக்கத்தில் தனது கருத்தை நீக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

தலைமை அலுவலகத்திற்கு கூடுதல் போலீஸ் பாதுகாப்பு

கோவையில் உள்ள பாஜக அலுவலகம் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் சென்னை பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்திற்கு கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை: