

போனி ஸ்ரீதேவிக்கு சர்பிரைஸ் கொடுக்க விரும்பினார். அன்று மாலை தான் துபாய் செல்வதை போனி ஸ்ரீதேவியிடம் கூறவில்லை. 24ம் தேதி மதியம் 3.30 மணிக்கு கிளம்பிய விமானத்தில் துபாய் சென்றார் போனி.
மாலை 6.20 மணிக்கு போனி ஸ்ரீதேவி தங்கியிருந்த ஹோட்டலை அடைந்தார். டூப்ளிகேட் சாவியை வைத்து கதவை திறந்தார் போனி. அவர் துபாய்க்கு வருவார் என்று தனக்கு தோன்றியதாக ஸ்ரீதேவி தெரிவித்துள்ளார்.
போனி தனது மனைவியை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்துவிட்டு பேசிக் கொண்டிருந்திருக்கிறார். டின்னருக்கு செல்வதற்காக குளிக்க ஸ்ரீதேவி பாத்ரூமுக்கு செல்ல போனி வேறு அறைக்கு சென்றுள்ளார். பாத்ரூம் பாத்ரூம் 15-20 நிமிடங்கள் ஆகியும் ஸ்ரீதேவி வெளியே வராததால் போனி கபூர் ஜான், ஜான் என்று அழைத்தும் பதில் இல்லை. ஆனால் குழாய் திறந்து தண்ணீர் ஓடும் சப்தம் மட்டும் கேட்டுள்ளது.
போனி கபூர் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது குளியல் தொட்டியில் ஸ்ரீதேவி மூச்சு பேச்சு இன்றி கிடந்துள்ளார். ஸ்ரீதேவியின் மரணம் குறித்த மர்மம் தொடரும். ஆனால் அவருக்கு நெருக்கமானவர்களுக்கு அது முக்கியம் இல்லை. அவர்கள் அன்பு வைத்திருந்த ஸ்ரீதேவி இறந்துவிட்டார் என்றார் கோமல்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக