Shyamsundar - Oneindia Tamil
சென்னை: கனிமொழி, வைரமுத்து, வீரமணி மீது முகாந்திரம் இருந்தால்
வழக்குப்பதிவு செய்யலாம் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு வழங்கி
இருக்கிறது.
ஆண்டாள் குறித்து வைரமுத்து தவறுதலாக கட்டுரை வாசித்தது பெரிய அளவில்
பிரச்சனையை உருவாக்கியது. இதற்கு இந்து அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து
இருந்தது
.
Can put case on Vairamuthu, Kani Mozhi, Ki Veeramani says HC
அதேபோல் திராவிடர் கழகத்தின் பொதுச்செயலாளர் கி.வீரமணி ராமாயணம், மனு
நீதியை கொளுத்த வேண்டும் என்று பேசி இருந்தார். இதற்கும் பலர் எதிர்ப்பு
தெரிவித்து இருந்தனர்.
மேலும் திமுக கட்சியை சேர்ந்த கனிமொழி பேட்டி ஒன்றில், திருப்பதியில்
பாதுகாப்பு இருக்கும் பணியாளர்களின் உரிமைகள், சம்பளம், பாதுகாப்பு
குறித்து பேட்டி அளித்து இருந்தார்.
இந்த மூன்று சம்பவங்களுக்கு எதிராகவும் சிவசேனா கட்சியின் தமிழ் மாநில
தலைவர் ராதா கிருஷ்ணன் சென்ற 3ம் தேதி புளியந்தோப்பு காவல் நிலையத்தில்
புகார் அளித்து இருந்தார்.
இதை விசாரித்து நீதிபதிகள் ''கனிமொழி, வைரமுத்து, வீரமணி மீது முகாந்திரம்
இருந்தால் வழக்குப்பதிவு செய்யலாம்.'' என்று உத்தரவு பிறப்பித்து
இருக்கிறார்கள்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக