திங்கள், 5 மார்ச், 2018

கமலஹாசன் : தினகரனின் ஊழல்களை அம்பலபடுத்துங்கள்... மோடியின் ஊழகள் ஓகேவா ?

கமல்ஹாசன் மீது வழக்குPrabha Oneindia Tamil  ; சென்னை: தினகரனின் ஊழல்களை அம்பலப்படுத்தி அவருக்கு இருப்பதாக சொல்லப்படும் செல்வாக்கை தகருங்கள் என மக்கள் நீதி மய்ய நிர்வாகிகளுக்கு கமல்ஹாசன் அதிரடியாக உத்தரவிட்டுள்ளாராம்.
தினகரனுக்கு எதிராக அதிரடியான திட்டங்களை வகுத்து வருகிறார் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் நடிகர் கமலஹாசன். ' சந்தர்ப்பவாதத்தையே முழுநேரத் தொழிலாகக் கொண்டு இயங்குகிறது சசிகலா குடும்பம். அவர்களுடைய முகத்திரையை வெளிக்காட்ட வேண்டும்' எனக் கொதித்தார் கமல் என்கின்றனர் மய்யத்தின் நிர்வாகிகள்.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் வெற்றியில் இருந்தே கமலுக்கும் தினகரனுக்கும் இடையில் மோதல் முற்றத் தொடங்கிவிட்டது. ஆர்.கே.நகர் தேர்தல் முடிவுகள் வெளியான நேரத்தில், அமெரிக்காவில் விஸ்வரூபம்-2 படத்தின் இறுதிக்கட்ட பணிகளில் இருந்த கமல், ஆர்.கே. நகர் தொகுதி மக்கள் வாக்களிப்பதற்கு பணம் வாங்கியது திருடனிடம் பிச்சை எடுத்ததற்கு சமம். ரூ20,000 ரூபாய்க்கான டோக்கனாக ரூ20 ரூபாய் நோட்டையே கொடுத்து ஜெயிச்சார் பார்யா? என்ற பார் புகழும் பாராட்டும் குறிப்பிடத்தக்கது' எனப் பதிவிட்டிருந்தார்.


தினகரனின் செல்வாக்கு சிதைப்பு

கமல்ஹாசன் மீது வழக்கு

இதனையடுத்து, கோவை நீதிமன்றத்தில் கமல் மீது வழக்கும் தொடரப்பட்டது. அந்த வழக்கின் மனுவில், ' ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் டி.டி.வி.தினகரன் 80 ஆயிரத்திற்கும் அதிகமான ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றார். இதனால் மக்களிடம் மதிப்பும் மரியாதையும் ஏற்பட்டு உள்ளது. ஆனால், நடிகர் கமல்ஹாசன் திருடனிடம் பிச்சை எடுப்பது போன்ற ஒரு கேவலம் எங்கும் உண்டா என எனது கட்சிக்காரருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் தெரிவித்து உள்ளார். இதனை பார்த்து எனது நண்பர்கள் என்னை கிண்டல் செய்கிறார்கள். இது மனவேதனை அளிக்கிறது. எனவே கமல்ஹாசன் மீது இந்திய தண்டனை சட்ட பிரிவு 500, 501-ன்படி தண்டிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்' எனக் குறிப்பிட்டிருந்தார் மனுதாரர்.


வெற்றிவேல் உள்நோக்கம்

வெற்றிவேல் உள்நோக்கம்இந்நிலையில், அரசுக்கு எதிராக தினகரன் ஆதரவாளர்கள் கோட்டையில் பத்திரிகையாளர்களை சந்தித்து ஊழல் குற்றச்சாட்டு கூறியது தொடர்பாக, மய்யத்தின் நிர்வாகிகள் விவாதித்துள்ளனர். இதைப் பற்றி நம்மிடம் பேசிய நிர்வாகி ஒருவர், " பணநாயகத்தை முன்னிறுத்தி தேர்தலில் வெற்றி பெறுவதை கமல் ஒருபோதும் விரும்புவதில்லை. ஜெயலலிதா மரணத்துக்குப் பிறகு சசிகலா குடும்பத்தின் ஒவ்வொரு நடவடிக்கைகளையும் கவனித்து வருகிறார். வெற்றிவேல் கொடுத்த புகார் குறித்துப் பேசிய கமல், ' அரசிடம் பேரம் நடத்துவதற்காகவே இப்படியொரு புகாரைக் கூறுகின்றனர்.


தினகரன் ஊழல்களை அம்பலப்படுத்துவோம்

ஊழல்வாதிகளையும் மக்களை பணத்துக்கு விலை பேசுகிறவர்களையும் தோலுரித்துக் காட்ட வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது' எனப் பேசினார். தினகரனின் ஒவ்வொரு செயல்பாடுகளைப் பற்றியும் விரிவான தகவலை சேகரிக்கச் சொல்லியிருக்கிறார். 'தினகரனின் நோக்கத்தைவிட, நமது நோக்கம் மக்களுக்கானது' என்பதை உணர்த்தும் வகையில் செயல்பட இருக்கிறார் கமல்" என்றார் விரிவாக.


தினகரனின் செல்வாக்கு சிதைப்பு

'மோடி எதிர்ப்பின் மூலம் சிறுபான்மை மக்களின் வாக்குகள், தன்பக்கம் இருப்பதாகப் பேசிக் கொண்டு வருகிறார் தினகரன். கூடவே, சொந்த சமுதாயத்தின் வாக்குகள் அனைத்தும் சசிகலா குடும்பத்துக்கே இருப்பது போன்ற தோற்றத்தையும் காண்பிக்கின்றனர். இதனை முறியடிக்கும் வகையில் ராமநாதபுரத்தில் இருந்து அரசியல் பயணத்தைத் தொடங்கினார் கமல். இஸ்லாமியர்களும் சசிகலா சமூகத்தினரும் கணிசமாக இருக்கும் பகுதி அது. கமலின் வருகையால் தினகரன் நம்பியுள்ள இந்த வாக்குகள் சிதற வேண்டும் என்பதுதான் மய்யத்தின் நோக்கம். அதனை நோக்கிய பயணத்தைத் துரிதப்படுத்தி வருகிறோம்' எனவும் விவரிக்கின்றனர் மய்யத்தின் நிர்வாகிகள்.

கருத்துகள் இல்லை: