தினமலர் :போலீசார், துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொள்ளும் சம்பவம் அதிகரித்து வருவது
காவல்துறை வட்டாரத்தை அதிர வைத்துள்ளது. இவற்றை தடுக்க போலீசாருக்கு, மன உறுதியை வளர்க்கும் பயிற்சி அளிக்க உத்தரவிடப்பட்டு உள்ளது.
இன்று அதிகாலை சென்னை அயனாவரம் காவல்நிலை எஸ்.ஐ. சதீஷ்குமார், துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். கடந்த ஞாயின்று ஆயுதப்படை போலீஸ்காரர் அருண்ராஜ் என்பவர் மெரினாவில் ஜெ., நினைவிடத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த போது துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். இதன் மூலம் கடந்த ஒரு வாரத்தில் இரு தற்கொலை சம்பவங்கள் நடந்துள்ளது
தற்கொலை சம்பவம் இதுவரை
* திருச்சி மாவட்ட, ஆயுதப்படை பிரிவில், ஏட்டாக பணியாற்றியவர், ஆனந்தராஜ், 42. இவர், 2011ல், குடும்ப பிரச்னை காரணமாக, மனைவி கண் முன், துப்பாக்கியால் சுட்டு பலியானார்
* அதே ஆண்டு, சேலத்தில், கொலை, கற்பழிப்பு என, 18க்கும் மேற்பட்ட வழக்குகளில் சிக்கிய, கைதி ஜெய்சங்கர் என்பவனை தப்பவிட்ட, ஆயுதப்படை காவலர், சின்னசாமி, 25, கோவையில், துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்தார்
* மதுரை மாவட்டத்தைச் சேர்ந்தவர், கருப்பாயி, 31. இவர், திருமங்கலம், பேரையூர் அருகே உள்ள, நாகனாகுளம் காவல் நிலையத்தில், போலீசாக பணியாற்றி வந்தார். தாய்மாமனும், ராணுவ வீரருமான, பெத்தணசாமியை திருமணம் செய்தார்; குழந்தை இல்லை. மன அழுத்தத்தில் இருந்த கருப்பாயி, 2015ல், இரவு பணியில் இருந்த போது, துப்பாக்கியால் சுட்டு பலியானார்
* மதுரை மாவட்டம், வாடிப்பட்டியைச் சேர்ந்தவர், கோபிநாத், 23. சென்னை புறநகர்போலீஸ் கமிஷனர் அலுவலகம் செயல்பட்டு வந்த, பரங்கிமலையில், ஆயுத கிடங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்தார்.
பணிச்சுமை காரணமாக, 2016 டிசம்பரில்,துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.
* சென்னை, மெரினா கடற்கரையில், ஜெ., நினைவிடத்தில், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த, மதுரை மாவட்டம், பெருங்குடியைச் சேர்ந்த, அருண்ராஜ், 27, துப்பாக்கியால் சுட்டு பலியானார். இவரது உயிரை பறித்த தோட்டா, இன்னனும் கிடைக்கவில்லை.
* சென்னை அயனாவரம் போலீஸ் நிலையத்தில் எஸ்.ஐ.யாக இருந்த தஞ்சை திருவிடைமருதூரை சேர்ந்த சதீஷ்குமார், 28 துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக