செவ்வாய், 6 மார்ச், 2018

எச் ராஜா :பெரியார் சிலை உடைக்கப்படும் .... அரசியல் தலைவர்கள் கடும் கண்டனம்


தினத்தந்தி :எச்.ராஜா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அரசியல் கட்சி தலைவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
சென்னை; திரிபுராவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆட்சி முடிவுக்குவந்து பா.ஜனதா ஆட்சியை கைப்பற்றி உள்ளது. பாரதீய ஜனதா வெற்றிப்பெற்றதை அடுத்து அங்கு வன்முறை சம்பவங்கள் வெடித்து உள்ளது. திரிபுராவில் லெனின் சிலைகளும் உடைக்கப்படுகிறது.
எச்.ராஜாவை குண்டர் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் - மு.க. ஸ்டாலின் வலியுறுத்தல்" வேண்டும் - மு.க. ஸ்டாலின் வலியுறுத்தல்"
;
இதனை குறிப்பிட்டு தன்னுடைய முகநூல் பதிவில் கருத்து வெளியிட்ட பா.ஜனதா தேசிய செயலாளர் எச்.ராஜா, லெனின் சிலை உடைக்கப்பட்டது திரிபுராவில் இன்று. திரிபுராவில் லெனின் சிலை. நாளை தமிழகத்தில் சாதி வெறியர் ஈ.வே.ரா சிலை (பெரியார்)’ என்று கூறியிருந்தார். இந்த கருத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பல்வேறு தரப்பில் எதிர்ப்பு எழுந்தது. பின்னர் அவர் தனது கருத்தை முகநூலில் இருந்து நீக்கிவிட்டார். இந்த நிலையில் எச்.ராஜா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் வலியுறுத்தி உள்ளனர். இது குறித்து தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், பெரியாரின் சிலையை தொட்டுப்பார்க்கும் அளவுக்கு எவருக்கும் தகுதி கிடையாது. பா.ஜ.க. முன்னணி தலைவர்களில் ஒருவரான எச்.ராஜா தொடர்ந்து வன்முறையை தூண்டக்கூடிய வகையில், அடிக்கடி இதுபோன்ற கருத்துகளை பேசி வருகிறார். அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என்பது தான் என்னுடைய கருத்து என்றார். 
<;பெரியார் பற்றி ராஜா பேசியதை தமிழ்நாட்டில் யாரும் ஏற்கவோ, ரசிக்கவோ மாட்டார்கள். ராஜா இதுபோன்ற தரமற்ற பேச்சுக்களை நிறுத்திக்கொள்ள வேண்டும். அது தான் அவருக்கும், அவருடைய கட்சிக்கும் நல்லது. ராஜாவின் பேச்சுக்கு தமிழக காங்கிரஸ் சார்பில் எனது கடும் கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறேன் என காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் கூறிஉள்ளார். . எச்.ராஜா நாவடக்கத்துடன் பேச வேண்டும்; இல்லை என்றால் எதிர்விளைவை சந்திக்க நேரும் என கே.பி.முனுசாமி கூறிஉள்ளார். பொறுப்பற்ற வகையில் கருத்து சொல்வதை ஹெச்.ராஜா மாற்றிக்கொள்ள வேண்டும். மக்களின் உணர்வுகளை காயப்படுத்தி, வன்முறையை தூண்டும் வகையில் கருத்து சொல்பவர்களை சட்ட நடவடிக்கைக்கு உள்ளாக்க வேண்டும் என டிடிவி தினகரன் கூறிஉள்ளார்.

 கவிஞர் வைரமுத்து வெளியிட்டு உள்ள தகவலில், “பெரியார் சிலை உடைக்கப்பட வேண்டும் என்ற எண்ணமே உடைக்கப்பட வேண்டும், பெரியார் சிலையில் கைவைத்தால் தேனீக்கூட்டில் கைவைத்த கதையாகிவிடும்,” என கூறிஉள்ளார். 

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், பகிரங்கமாக வன்முறையை தூண்டும் விதத்தில் பேசி இருக்கும் பா.ஜ.க. தேசிய செயலாளர் எச்.ராஜாவை தமிழக அரசு உடனடியாக கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி உள்ளார்.&n

கருத்துகள் இல்லை: