ஞாயிறு, 4 மார்ச், 2018

பாஜக தேர்தல் ... EVM . கருத்து கணிப்புகள் .. பணம் ... சர்வாதிகாரம் நிச்சயமாக வந்து கொண்டிருக்கிறது


வடகிழக்கு மாகாண தேர்தல் முடிவுகளும் நான் சொன்னதை தான் காட்டுகிறது. காங்கிரஸ் மற்றும் எதிர்கட்சிகளுக்கு இதற்க்கு அப்புறமும் பிஜேபி தேர்தல் கோல்மால் பற்றிய விழி்ப்புணர்வு வரவில்லை என்றால் கட்சிகளை கலைத்து விட்டு செல்வது நன்று..
கடந்த 16 மாதத்தில் நடந்த MP, MLA இடைத்தேர்தல், உள்ளாட்சி தேர்தல்களில் 80% இடங்களில் பிஜேபி தோற்றுப்போயுள்ளது. யுனிவர்சிட்டி/ காலேஜ் தேர்தலில் பிஜேபி/ RSS மாணவர் அமைப்பு எல்லா இடங்களிலும் தோற்று இருக்கிறது. ஆனால் அவர்களுக்கு தேவைப்படும் சட்டசபை தேர்தலில் அவர்கள் வெற்றி பெற்று தான் வருகிறார்கள்.
மீடியாவை கைக்குள் வைத்து கருத்துக்கணிப்பை தனக்கு சாதமாக கொண்டுவந்து.. அப்புறம் கருத்துக்கணிப்புபடி ரிசல்ட் கொண்டுவர கிரிமினல்தனம் செய்யும் கூட்டம் தான் மோடி, அமித்ஷா & கோ.
குஜராத் தேர்தல் முடிவுக்கு சில நாட்கள் முன்னாள் நான் பதிவிட்டது.. அந்த தேர்தலில் நான் சொன்னது போல் தான் நடந்தது. இப்பவும் பாருங்கள்.. 2019 தேர்தல் கருத்து கணிப்பு'னு, மோடி அலை'னு மீடியாவை கைக்குள் போட்டு தனக்கு தேவையான கருத்துக்களை மக்கள் கருத்துக்கள்'னு சொல்லி.. அப்புறம் எலெக்க்ஷன் கமிஷின்'ன கைக்குள் வைத்து EVM உதவியுடன் கருத்துக்கணிப்பு படி வெற்றி பெற வாய்ப்பு இருக்கிறது..

பொய் சொல்வது, அந்த பொய்யை மறைக்க இன்னொரு பொய் சொல்வது.. இப்படி இதற்க்கு ஒரு முடிவே இல்லாமல் போயிட்டு இருக்கும்.. அப்புறம் அந்த பொய்யை உண்மையாக்க ஏதாவது கோல்மால், பித்தலாட்டம் செய்வது.. இப்படி தான் மோடி & கோ. அரசியல் வாழ்க்கை போயிட்டு இருக்கு.. எப்படியாது 2019ல் வெற்றி பெற வேண்டும் என்று எவ்வளவு கிரிமினல்தனம் வேண்டுமானாலும் செய்வார்கள்..
VVPAT ரெசிப்டை எண்ணி EVM மெஷின் ஓட்டு எண்ணிக்கையுடன் சரி பார்த்தால் மட்டும் தான் உண்மை தெரியவரும்.. மற்றபடி இந்த கோல்மால் கண்டுபிடிக்க முடியாது.
இன்னும் நம்பிக்கை இல்லை என்றால் கர்நாடகா தேர்தல் முடிவு வரைக்கும் பொருந்து இருந்து பாருங்கள்..
உண்மையான கள நிலவரம்: பிஜேபி காங்கிரஸ்க்கு பக்கத்தில் கூட இல்லை.. காங்கிரஸ் மாபெரும் வெற்றி பெற்றே ஆகா வேண்டும்..
எப்படி மாறும் என்று சொல்கிறேன்.. கருத்துக் கணிப்பு எப்படி வரும் என்றால்.. காங்கிரஸ், பிஜேபி இரண்டுக்கும் வாய்ப்பு இருப்பது போலவும்.. சீத்தாராமையா அரசு மீது 50% மக்கள் அதிர்ப்தியில் இருப்பது போலவும் வரும்.. தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு.. பிஜேபி.. காங்கிரஸ்சை விட ஒரு சில இடங்கள் அதிகம் பெற வாய்ப்பு இருப்பது போலவும் வரும்.. முடிவில் பிஜேபி 115-125, காங்கிரஸ் 100-105னு முடியும்.. இவ்வளவு தான் அரசியல்..
எதிர் கட்சிகள் கவனமாக இருப்பது நல்லது..
- சுவாதி

கருத்துகள் இல்லை: