மாலைமலர் :சென்னை கல்லூரி மாணவி அஸ்வினியை கத்தியால்
குத்திக் கொன்றது அவரது கணவர் எனவும், கடந்த மாதம் இருவரும் பிரிந்து
விட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
சென்னை:
சென்னை
கே.கே நகர் மீனாட்சி கல்லூரியில் பி.காம் முதலாம் ஆண்டு படித்து வந்த
அஸ்வினி என்ற மாணவி இன்று பிற்பகலில் கல்லூரி வாசலுக்கு எதிரே உள்ள
தெருவில் வைத்து அழகேசன் என்ற வாலிபரால் கத்தியால் குத்தப்பட்டார். ரத்த
வெள்ளத்தில் மயங்கி சரிந்த அஸ்வினியை அங்குள்ளவர்கள் ஆம்புலன்ஸ் மூலம்
அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
ஆனால்,
அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். பலியானா அஸ்வினிக்கு
தந்தை இல்லை, தாயார் மற்றும் உறவினர் பாதுகாப்பில் அவர் படித்து வந்தார்.
இதற்கிடையே
அஸ்வினியை கத்தியால் குத்திய அழகேசனை அங்குள்ளவர்கள் அடித்து, உடைத்து
கட்டி வைத்து போலீசில் ஒப்படைத்தனர். அவர் மதுரவாயலைச் சேர்ந்தவர் என்றும்,
சுகாதாரத்துறையில் ஒப்பந்த ஊழியராக பணியாற்றி வந்ததாகவும் கூறப்படுகிறது.
கொலை செய்யப்பட்ட இடத்தில் தடவியல் அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். அங்கு போலீசாரும் குவிக்கப்பட்டுள்ளனர்
காதலர்களான
இருவரும் கடந்த பிப்ரவரி மாதம் திருமணம் செய்துள்ளனர். பின்னர்,
அஸ்வினியின் தாயார் எதிர்ப்பு காரணமாக மதுரவாயல் காவல்நிலையத்தில் வைத்து
இருவரும் கடிதம் எழுதிக்கொடுத்து பிரிந்து சென்றதாக போலீசார் கூறியுள்ளனர்.
இதன் பின்னர், அஷ்வினி ஜாபர்கான் பேட்டையில் உள்ள தனது உறவினர்
வீட்டிலிருந்து கல்லூரிக்கு சென்று வந்துள்ளார்.
இருந்தாலும்,
அஸ்வினியை அவர் தினமும் சந்தித்து பேச முயன்றுள்ளார். அதில் தோல்வி அடைந்த
நிலையில், அவரை கொல்லும் முடியை அழகேசன் எடுத்ததாக போலீசார் தெரிவித்தனர்.
எனினும், விரிவான விசாரணைக்கு பின்னர் கூடுதல் தகவல் கிடைக்கலாம் என
எதிர்பார்க்கப்படுகிறது.
கொலை செய்யப்பட்ட இடத்தில் தடவியல் அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். அங்கு போலீசாரும் குவிக்கப்பட்டுள்ளனர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக