தினமலர் :காங்கிரஸ்,பா.ஜ, ராகுல் மவுனம், ராகுல் காந்தி , சிதம்பரம் விவகாரம், அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், ஐக்கிய முற்போக்கு கூட்டணி,கீதாஞ்சலி நிறுவனம் , முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங், ப.சிதம்பரம்,
புதுடில்லி: சிதம்பரம் விவகாரத்தில் ராகுல் மவுனம் காப்பது ஏன் ? என பா.ஜ., கேள்வி எழுப்பியுள்ளது. இது தொடர்பாக மத்திய சட்டம் மற்றும் தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் இன்று அளித்த பேட்டியில் கூறியதாவது:
கடந்த காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் பாங்குகளை தவறாக பயன்படுத்தியுள்ளனர்.
தங்கம் இறக்குமதி சலுகை திட்டத்தில் முறைகேடு நடந்துள்ளது.
இந்த திட்டத்தில் கீதாஞ்சலி நிறுவனம் முழு அளவில் பயனடைந்துள்ளது. பொருளாதார மேதை என அழைக்கப்பட்ட முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் தலைமையிலான ஆட்சியில் வங்கிகள் பலரது ஆதிக்கத்தால் சீர்குலைந்து போனது. சமீபத்திய ப.சிதம்பரம் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து ராகுல் வாய் திறக்காமல் மவுனமாக இருப்பது ஏன்? இவர் பதில் சொல்லியே ஆக வேண்டும். இவ்வாறு ரவிசங்கர் பிரசாத் கூறினார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக