புதுச்சேரி, ஜன.3: முன்னாள் திமுக அமைச்சர் வி.எம்.சி. சிவகுமார் குண்டு வீசி மர்ம ஆசாமிகளால் கொலை செய்யப்பட்டுள்ளார்.
.
புதுச்சேரி மாநிலம், காரைக்கால் மாவட்டம் நிரவி தொகுதியிலிருந்து 4 முறை போட்டியிட்டு வெற்றிபெற்றவர் வி.எம்.சி.சிவகுமார். மூன்று முறை திமுக சார்பிலும், 2011-ல் சுயேச்சையாகவும் போட்டியிட்டு வெற்றி பெற்றவர். முந்தைய திமுக
ஆட்சியில் அமைச்சராகவும், சபாநாயகராகவும் வி.எம்.சி.சிவகுமார் பதவி வகித்துள்ளார். கடந்த ஏப்ரல் மாதம் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவை சந்தித்து அதிமுகவில் இணைந்தார். இந்நிலையில் இன்று நிரவியில் தான் கட்டி வரும் திருமண மண்டபத்தை அவர் பார்வையிட சென்றார். அப்போது, அங்கு வந்த மர்ம நபர்கள் சிலர் அவர் மீது வெடிகுண்டு வீசி தாக்குதல் நடத்தி உள்ளனர். இதில் அவர் படுகாயமடைந்து ரத்த வெள்ளத்தில் சரிந்தார்.
அண்மையில் ராமு என்ற மதுபான தொழிலதிபர் கொலை செய்யப்பட்டார். அவருடைய ஆதரவாளர்கள் இந்த படுகொலையை செய்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. முன்னாள் அமைச்சர் ஒருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் புதுச்சேரி மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். தனிப்படை அமைத்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர். படுகொலை செய்யப்பட்ட சிவகுமாரின் ஆதரவாளர்கள் அங்கு குவிந்துள்ளதால் நிரவி மற்றும் காரைக்கால் பகுதியில் பெரும் பதற்றம் நிலவி வருகிறது. விரைவில் குற்றவாளிகளை பிடித்துவிடுவோம் என காவல்துறை அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர் மாலைசுடர்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக