டெல்லி:
தெலுங்கு நடிகரும், முன்னாள் மத்திய அமைச்சரும், பாஜகவைச் சேர்ந்தவருமான
கிருஷ்ணம் ராஜு தமிழக ஆளுநராக நியமிக்கப்படலாம் என்று தகவல்கள்
வெளியாகியுள்ளன.
ஆந்திராவைச் சேர்ந்த ரோசய்யா தமிழக ஆளுநராக இருந்து வந்தார். அவரது பதவிக்காலம் முடிந்து நீண்ட காலமாகியும் கூட இன்னும் புதிய ஆளுநரை நியமிக்காமல் உள்ளது மத்திய அரசு. தற்காலிக ஆளுநராக ஆந்திராவைச் சேர்ந்தவரான மகாராஷ்டிர மாநில ஆளுநர் வித்யாசாகர் ராவ் பொறுப்பு வகித்து வருகிறார். இந்த நிலையில் புதிய ஆளுநராக ஆந்திராவைச் சேர்ந்தவரும், நடிகருமான, முன்னாள் மத்திய அமைச்சருமான கிருஷ்ணம் ராஜுவை நியமிக்க மத்திய அரசு முடிவு செய்திருப்பதாக ஆந்திர ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.
கடந்த தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியின்போது மத்திய அமைச்சராக இருந்தவர் கிருஷ்ணம் ராஜு. இதுகுறித்து அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாகும் என்று தெரிகிறது.
அடுத்தடுத்து ஆந்திராவைச் சேர்ந்தவர்களையே குறி வைத்து தமிழக ஆளுநராக்குவது சலசலப்பை ஏற்படுத்தும் என்று தெரிகிறது. முன்னதாக கர்நாடக பாஜக தலைவரான சங்கரமூர்த்தி ஆளுநராக நியமிக்கப்படலாம் என்று பேசப்பட்டது. ஆனால் அதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியதைத் தொடர்ந்து ஆந்திராவைச் சேர்ந்த நடிகரை ஆளுநராக்க பாஜக தீர்மானித்திருப்பதாக தெரிகிறது. tamiloneindia

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக