அ.தி.மு.க., பொதுச்செயலராகி உள்ள சசிகலா, திருமங்கலம் சட்டசபை தொகுதியில் போட்டியிட திட்டமிட்டுள்ளார்.
'சசிகலா
முதல்வராக வேண்டும்' என, முதலில் தீர்மானம் நிறைவேற்றிய, வருவாய்த்துறை
அமைச்சர் உதயகுமார், அவருக்காக, எம்.எல்.ஏ., பதவியை ராஜினாமா
செய்யவுள்ளார். அத்துடன், கட்சியில் பொதுச்செயலருக்கு அடுத்த இடத்திற்கு,
தினகரனை கொண்டு வர வசதியாக, அவரை ஆர்.கே.நகரில் களமிறக்க வும், முடிவு
செய்யப்பட்டுள்ளது.
முதல்வராக இருந்த ஜெயலலிதா மறைந்ததை அடுத்து, பன்னீர்செல்வம் முதல்வரானார். அதே
நேரத்தில், ஜெ., வகித்த, அ.தி.மு.க., பொதுச் செயலர் பதவிக்கு, சசிகலாவை கொண்டு வர, மன்னார்குடி குடும்பம் மேற்கொண்ட முயற்சிகளுக்கு, கை மேல் பலன் கிடைத்துள் ளது. பொதுக்குழு தீர்மானப்படி, அ.தி.மு.க., பொதுச்செயலராக, அவர் நேற்று முன்தினம் பொறுப்பேற்றார்.திருமங்கலம் பார்முலாவை திருமங்கலத்திலேயே பொய்ப்பித்து காட்ட மக்கள் தயாராக வேண்டும்,,,.செய்வீர்களா ? செய்வீர்களா?
இதையடுத்து, சசிகலாவின் கவனம், ஆட்சியின் பக்கம் திரும்பியுள்ளது. அதற்கான முயற்சிக ளும், கன கச்சிதமாக நடந்து வருகின்றன. பன்னீர்செல்வத்தை நீக்கி விட்டு, முதல்வராக பொறுப்பேற்பது குறித்து ஆலோ சிக்கும் அதே நேரத்தில், எந்த தொகுதியில் போட்டியிடுவது என்ற, ஆலோசனைகளிலும், அவர் தீவிரமாக ஈடுபட்டுள்ளார்.
'ஜெயலலிதா போட்டியிட்ட, ஆர்.கே.நகர் தொகுதி, பாதுகாப்பானது அல்ல; அங்கு போட்டி யிட்டால், வெற்றி பெறுவது கடினம்' என்ற தகவல், சசிகலாவுக்கு சென்றுள்ளது. அதனால், மிகவும் பாதுகாப்பான, எளிதாக வெற்றி பெற வாய்ப்புள்ள தொகுதிகளை தேடும் பணி நடந்தது.இதில், வருவாய்த் துறை அமைச்சர், உதயகுமார் போட்டியிட்டு வெற்றி பெற்ற, மதுரை மாவட்டம், திருமங்கலம் சட்டசபை தொகுதி தான், சரியாக இருக்கும் என்ற > முடிவுக்கு, மன்னார்குடி சொந்தங்கள் வந்துள்ளன.
'கட்சியின் பொதுச்செயலராகவும், முதல்வரா கவும், சசிகலா பொறுப்பேற்க வேண்டும்' என, முதலில் தீர்மானம் நிறைவேற்றியவர், ஜெ., பேரவை தலைவராக இருக்கும் உதயகுமார். அதனால், அவரின் எம்.எல்.ஏ., பதவியை ராஜினாமா செய்ய வைத்து, அங்கு சசிகலாவை போட்டியிட வைக்க, அவரின் உறவினர்கள் திட்டமிட்டுள்ளனர்.
அதற்கேற்ற வகையில், 'திருமங்கலம் தொகுதி யில், சசிகலாபோட்டி யிடுவதாக இருந்தால், எம்.எல்.ஏ., பதவியை ராஜினாமா செய்து, அவருக்கு வழி விடுவேன்; அது, எனக்கு கிடைக்கும் பெரும் பாக்கியம்' என, அமைச்சர் உதயகுமார், தன் ஆதரவாளர்களிட மும், சசிஉறவினர்களிடமும் கூறியுள்ளதாக தெரிகிறது.
அமைச்சர் உதயகுமார், ஜெயலலிதாவின் உண்மை விசுவாசி. ஜெ.,வை தெய்வமாக கருதினார். 'தெய்வம் நடமாடும் இடம் கோவில்; கோவிலுக்குள் யாரும் செருப்பு அணிய மாட்டர் கள்; அதனால், நானும் செருப்பு அணிவதில்லை' என, கோட்டைக்கு, செருப்பு அணியாமல் வந்தார். அதை நம்பி, ஜெயலலிதா, அவருக்கு மூன்று முறை அமைச்சர் பதவி வழங்கினார்.
ஜெயலலிதா இறந்த பின், இவரது பக்தி சசிகலா பக்கம் திரும்பியுள்ளது. 'சசிகலா முதல்வராக வேண்டும்' என, முதலில் தீர்மானம் நிறை வேற்றினார். திருமங்கலம் தொகுதியில், முக்குலத்தோர் அதிகம் உள்ளதால், சசிகலா போட்டியிடலாம் என, அவரே கார்டனுக்கு தகவல் கொடுத்துள்ளார். அதற்காக, எம்.எல்.ஏ., பதவியையும் ராஜினாமா செய்யவும் தயாராக உள்ளார்.இவ்வாறு அ.தி.மு.க., வட்டாரங்கள் தெரிவித்தன.
அதேநேரத்தில், கட்சியிலும், ஆட்சியிலும், சசிகலாவுக்கு அடுத்த நிலைக்கு, தங்களின் சொந்தங்களைத் தவிர வேறு யாரும் வந்து அக்கா மகனான தினகரனை, அடுத்த நிலைக்கு கொண்டு வர தீர்மானித்துள்ளனர். அதற்கு வசதியாக, தற்போது காலியாக உள்ள, ஆர்.கே.நகர் தொகுதியில், தினகரனை போட்டி யிட வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
ஆர்.கே.நகர் தொகுதியில், தினகரன் வெற்றி பெற்று விட்டால், அவருக்கு கட்சியிலும், ஆட்சியிலும் முக்கிய பொறுப்புகள் வழங்கப்பட உள்ளன.
திருமங்கலம் தொகுதியில், 2.60 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில், ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் முக்குலத்தோர். அத்துடன், தொகுதியில் அதிக கிராமங்கள் உள்ளதும், அ.தி.மு.க.,வுக்கு சாதகமாக கருதப்படுகிறது.இதுவரை, 1971 முதல், 12 முறை சட்டசபை தேர்தல் நடந்துள்ளது. இதில், ஏழு முறை, அ.தி.மு.க., வெற்றி பெற்றுள்ளது. 2016 தேர்தலில், அமைச்சர் உதயகுமார், 23 ஆயிரத்து, 590 ஓட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். அத்துடன், 'திருமங்கலம் பார்முலா'வும், சசிகலாவுக்கு இங்கு பெரிதும் கை கொடுக்கும் என்றும், அ.தி.மு.க.,வினர் நம்பிக்கையுடன் கூறுகின்றனர்.
புத்தாண்டான நேற்று, ஜெ., நினைவிடத்தில், அமைச்சர்கள் உதயகுமார், சேவூர் ராமச்சந்திரன், கடம்பூர் ராஜு ஆகியோர் அஞ்சலி செலுத்தினர். பின், அமைச்சர் உதயகுமார் அளித்த பேட்டி:
ஜெயலலிதாவின் நிழலாக, உடன் இருந்த சசிகலா, அனைவரின் வேண்டுகோளையும் ஏற்று, கட்சியின் பொதுச் செயலராக பொறுப்பேற்றுள்ளார். அவருக்கு, அ.தி.மு.க., வின் உண்மையான தொண்டர்கள் துணை நிற்பர்.
இன்று ஜெயலலிதா இல்லை என்ற கவலை, சசிகலா வரவால் மறைந்துள்ளது. அடுத்த கட்டமாக, ஆட்சி பொறுப்பையும் சசிகலா ஏற்று, தமிழகத்தை வழி நடத்த வேண்டும். அப்போது தான், ஜெயலலிதாவின் லட்சிய பயணம் நிறைவு பெறும். தொண்டர்களின் விருப்பத்தை ஏற்று, விரைவில் சசிகலா முதல்வர் பொறுப்பை ஏற்பார்.இவ்வாறு அவர் கூறினார்.
- நமது நிருபர் - தினமலர்

இதுகுறித்து, அ.தி.மு.க., வட்டாரங்கள் தெரிவித்ததாவது:

திருமங்கலம் பாதுகாப்பானதா
திருமங்கலம் தொகுதியில், 2.60 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில், ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் முக்குலத்தோர். அத்துடன், தொகுதியில் அதிக கிராமங்கள் உள்ளதும், அ.தி.மு.க.,வுக்கு சாதகமாக கருதப்படுகிறது.இதுவரை, 1971 முதல், 12 முறை சட்டசபை தேர்தல் நடந்துள்ளது. இதில், ஏழு முறை, அ.தி.மு.க., வெற்றி பெற்றுள்ளது. 2016 தேர்தலில், அமைச்சர் உதயகுமார், 23 ஆயிரத்து, 590 ஓட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். அத்துடன், 'திருமங்கலம் பார்முலா'வும், சசிகலாவுக்கு இங்கு பெரிதும் கை கொடுக்கும் என்றும், அ.தி.மு.க.,வினர் நம்பிக்கையுடன் கூறுகின்றனர்.
'ஜெ., இல்லாத கவலை மறைந்தது'
புத்தாண்டான நேற்று, ஜெ., நினைவிடத்தில், அமைச்சர்கள் உதயகுமார், சேவூர் ராமச்சந்திரன், கடம்பூர் ராஜு ஆகியோர் அஞ்சலி செலுத்தினர். பின், அமைச்சர் உதயகுமார் அளித்த பேட்டி:
ஜெயலலிதாவின் நிழலாக, உடன் இருந்த சசிகலா, அனைவரின் வேண்டுகோளையும் ஏற்று, கட்சியின் பொதுச் செயலராக பொறுப்பேற்றுள்ளார். அவருக்கு, அ.தி.மு.க., வின் உண்மையான தொண்டர்கள் துணை நிற்பர்.
இன்று ஜெயலலிதா இல்லை என்ற கவலை, சசிகலா வரவால் மறைந்துள்ளது. அடுத்த கட்டமாக, ஆட்சி பொறுப்பையும் சசிகலா ஏற்று, தமிழகத்தை வழி நடத்த வேண்டும். அப்போது தான், ஜெயலலிதாவின் லட்சிய பயணம் நிறைவு பெறும். தொண்டர்களின் விருப்பத்தை ஏற்று, விரைவில் சசிகலா முதல்வர் பொறுப்பை ஏற்பார்.இவ்வாறு அவர் கூறினார்.
- நமது நிருபர் - தினமலர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக