ஜெயலலிதாவைப் போலவே பொட்டு வைத்து, கொண்டை போட்டுவரும் சசிகலா, அவரைப் போலவே ஒரு கருத்துக்கணிப்பை சசிகலா நடத்தியிருக்கிறார். அதில் அவருக்கு பாதகமான முடிவுகளே தொண்டர்களிடமும் பொதுமக்களிடமும் வெளிப்பட்டுள்ளன என்கிறார்கள். இந்நிலையில் அமைச்சரவையிலும் மாற்றம் நடக்கலாம் எனக் கூறப்படுகிறது.
தற்போது அமைச்சர்களாக இருப்பவர்களில் ஆறு பேரை நீக்கிவிட்டு, அவர்களுக்குப் பதிலாக மூன்று பேரை அமைச்சராக ஆக்கவும் சசிகலா முடிவுசெய்துள்ளார்.
உணவுத்துறை அமைச்சர் ஆர்.காமராஜ், சுகாதாரத் துறை விஜயபாஸ்கர், சுற்றுச்சூழல் அமைச்சர் கே.சி.கருப்பண்ணன் ஆகியோர் நீக்கப்பட்டியலில் இருப்பதாகக் கூறப்படுகிறது. மேலும் மூன்று பேரின் விவரங்கள் மாறிக்கொண்டே இருக்கிறது. புதிதாக முன்னாள் அமைச்சர்கள் செங்கோட்டையன், செந்தில்பாலாஜி மற்றும் அண்மையில் தஞ்சை இடைத்தேர்தலில் வென்ற ரங்கசாமி ஆகியோர் அமைச்சரவையில் சேர்க்கப்படுவார்கள் என்றும் தகவல் தெரிவிக்கின்றன. நக்கீரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக