புதன், 4 ஜனவரி, 2017

திமுக இளைஞரணி பதவி…! உதயநிதி ஸ்டாலின், துரை தயாநிதி..மோதல்..?

திமுகவின் பொதுக்குழு கூட்டத்தில் ஸ்டாலின் செயல்தலைவராக அறிவிக்கப்பட்டுள்ளார். திமுக தலைவர் கலைஞர் கருணாநிதியின் உடல்நிலை சரியில்லாததாலும், அவருக்கு ஓய்வு தேவைப்படுவதாலும் கட்சியின் தலைமை பொறுப்பை ஸ்டாலின் ஏற்றுள்ளதாக கூறப்படுகிறது. திமுகவின் சட்டவிதிகளில் மாற்றம் செய்யப்பட்டு இந்த செயல் தலைவர் பதவி உருவாக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஸ்டாலின் செயல்தலைவராக அறிவிக்கப்பட்டது கருணாநிதியின் குடும்பத்தில் சலசலப்பை ஏற்படுத்தியிருப்பதாக தெரிகிறது. ஸ்டாலின் திமுக இளைஞரணி தலைவராக செயல்பட்டபோது பொருளாளராக பொறுப்பேற்றார். இப்போது பொருளாளராக இருந்து கொண்டே செயல்தலைவராகவும் செயல்படுவார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் திமுக இளைஞரணி தலைவர் பதவிக்கு அவரது குடும்பத்தில் கடும் போட்டி ஏற்பட்டிருப்பதாக தெரிகிறது. ஸ்டாலின் மகனும், நடிகருமான உதயநிதிஸ்டாலினும், அழகிரி மகன் துரை தயாநிதிக்கும் இடையே ஏற்பட்டுள்ள போட்டி காரணமாக மோதல் போக்கு துவங்கியுள்ளதாக கூறப்படுகிறது.


கலைஞருக்கு பிறகு தலைமை பொறுப்பை கைபற்றியிருக்கும் ஸ்டாலின், தனக்கு பிறகு மகன் உதயநிதிஸ்டாலினுக்கு இளைஞரணி தலைவர் பதவி வழங்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது. இந்நிலையில் ஸ்டாலினுக்கு எதிராக செயல்பட்டதாக கட்சியிலிருந்து நீக்கப்பட்ட அழகிரி, தற்போது தனது மகன் துரை தயாநிதிக்கு இளைஞரணி தலைவர் பதவியை பெற்று தர முயற்சிப்பதாக தெரிகிறது. ஸ்டாலின் மற்றும் அழகிரி இடையே வாரிசுகளுக்காக ஏற்பட்டுள்ள இந்த மோதல் போக்கு கட்சியினரிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதாக திமுக வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.  லைவ்டே

கருத்துகள் இல்லை: