ஜெயலலிதாவும் - சசிகலாவும் வாங்கி குவித்த நிலங்கள்
திரும்ப கிடைக்குமா என விவசாயிகள் ஏக்கம்
திருநெல்வேலி: ஏக்கருக்கு, 2,000 ரூபாய்க்கு வாங்கப்பட்ட
ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங் கள், ஜெ., இறந்ததை அடுத்து, தங்களுக்கு திரும்ப
கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பில் விவசாயிகள் உள்ளனர்.<
கடந்த
1991 - 96 அ.தி.மு.க., ஆட்சியில், முதல்வர் ஜெயலலிதா, சசிகலா பெயர்களில்,
தமிழகம் முழுவதும் ஏராளமான சொத்துக்கள் வாங்கி குவிக்கப்பட்டன.
அவர்கள்
வாங்கி குவித்த சொத்து பட்டியலில், துாத்துக்குடி மாவட்டம், கருங்குளம்
அருகே சேரகுளம், வல்லகுளம், மீரான்குளம், அரசர்குளம் உள்ளிட்ட இடங்களில்,
969 ஏக்கர் நிலங்களும் அடக்கம். வானம் பார்த்த பூமியான
இந்த பகுதியில், ரோட்டின் இருபுறங்களிலும், வாங்கி குவிக்கப்பட்ட இந்த நிலங்கள், தற்போது, வேலியிடப்பட்டு தரிசாக கிடக்கின்றன. நில அபகரிப்பு போலீஸ் பிரிவு ஒன்ன அ தி மு க அரசு ஆரம்பிச்சுதே ? திருடனே போலீஸ் ஸ்டேஷன் ஆரம்பிச்ச மாதிரி இல்ல இருக்கு ?
அடித்து பிடுங்கிய நிலங்கள்தான் தரிசாக கிடக்கிறது என்றால் அந்த அக்கிரமக்காரர்கள் வாழ்வும் தரிசாக போய்விட்டதே .விதி வலியதுதான்
வல்லகுளத்தைச் சேர்ந்த வைகுண்டம், 60, என்பவர்கூறியதாவது:
எங்களுக்கு பூர்வீகமாக, இந்த பகுதியில் நிறைய நிலங்கள் இருந்தன; விவசாயம் செய்து வந்தோம். மழையில்லாத காலங்களில் கொள்ளு பயறு வகைகளை சாகுபடி செய்தோம். கடந்த, 1995ல் ஜெயலலிதா, சசிகலாவிற்கு நிலம் வேண்டும் என கூறி, கருங்குளத்தைச் சேர்ந்த ஒரு புரோக்கர் மூலம், நிலம் வாங்கினர். சசிகலா வருவார் என கூறி, அந்த இடத்தில் மாடி கட்டடம் எல்லாம் கட்டினர்.
அப்போது, எங்கள் தந்தை ராமகிருஷ்ணன் பெயரில் தான் நிலம் இருந்தது. இந்தபகுதி முழுவதும் பலரிடமும் நிலம் வாங்கினர். பெரும்பாலும் நாடார்கள், யாதவர்களிடம், அடிமாட்டு விலைக்கு வாங்கினர். ஏக்கருக்கு வெறும், 2,000 ரூபாய் வீதம் எங்களிடம், 40 ஏக்கர் வாங்கினர். சுற்று வட்டாரம் முழுக்க ஆயிரக்கணக்கான ஏக்கர்களை வாங்கினர். ஆனால், சும்மா தான் போட்டுள்ளனர். இந்த இடத்தில், 'எம்.பி. சுகர்' என்ற போர்டு மட்டும் உள்ளது.
கிட்டத்தட்ட, 20 ஆண்டுகளுக்கும் மேலாக வெறுமனே கிடக்கும் நிலத்தை, எங்களுக்கு திரும்ப அளித்தால், மீண்டும் விவசாய பணி களை துவங்கி, வாழ்க்கை நடத்துவோம். அந்த அம்மா தான் இறந்து விட்டாரே... அந்த நிலங்கள் எங்களுக்கு மீண்டும் கிடைத்தால், விவசாயம் செய்வதற்கு ஏதுவாக இருக்கும். இவ்வாறு அவர் கூறினார். தினமலர்

அடிமாட்டு விலை :

விவசாயம் :

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக