வியாழன், 5 ஜனவரி, 2017

திமுக பொதுக்குழு அன்றும் இன்றும்: கொஞ்சம் கொஞ்சமாக அதிமுக பாணிக்கு மாறும் திமுக

tamilthehindu  :  கொள்கைகளை உரு வாக்கும் அமைப்பு, கட்சியின் தலைமை நிர்வாகிகளைத் தேர்வு செய்து அங்கீகரிக்கும் அமைப்பு, காலத் தேவைகளுக்கு ஏற்ப கட்சி அமைப்பில் மாற்றங்களையும் சட்ட திருத்தங்களையும் மேற் கொள்ளும் வானளாவிய அதி காரம் கொண்ட மையம் - இது தான் திமுக பொதுக்குழு.
இதற்கு முன்பு அண்ணா மறை வுக்குப் பிறகு 1969-ல் நடந்த பொதுக்குழு கூட்டத்தில் கருணா நிதிக்காக கட்சித் தலைவர் பதவி உருவாக்கப்பட்டு தலைவருக்கு சிறப்பு அதிகாரங்கள் அளிக்கப் பட்டபோது கட்சி விதிகளில் முக் கிய சட்டத் திருத்தம் கொண்டு வரப்பட்டது. அதற்குப் பிறகும் பல சமயங்களில் சட்டத்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்றாலும், நேற்றைய பொதுக் குழுவில் ஸ்டாலினை செயல் தலைவராக்கிய சட்டத்திருத்தம் முக்கியமான ஒன்றாக பார்க் கப்படுகிறது.
இதுவரை நடந்த திமுக பொதுக்குழு கூட்டங்களில், ‘திராவிட முன்னேற்றக் கழகம் வெறும் அரசியல் ரீதியான இயக்கமோ ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றுவதற்காக மட்டுமே தொடங்கப்பட்ட இயக்கமோ அல்ல. இது ஒரு சமுதாய இயக்கம். இது தமிழர்கள் நல னையும் தமிழ் கலாச்சாரத்தையும் பண்பாட்டையும் கட்டிக்காக்க வும் தமிழர்களின் உரிமைகளை மீட்டு எடுக்கவும் தமிழர்களின் சுயமரியாதையை பேணிக் காக்கவும் தொடர்ந்து போராடி வரும் இயக்கம்’ என்கிற கருத்துக் களை மறக்காமல் பதிவு செய்து வந்திருக்கிறார் திமுக பொதுச்செயலாளர் அன்பழகன்.
அவருடைய பேச்சின் ஊடாக இன மானம், சுயமரியாதை இந்தச் சொற்கள் அடிக்கடி வந்து போகும். ஆனால், நேற்றைய பொதுக் குழுவில், இனமான பேராசிரியர் என திமுக-வினரால் வர்ணிக்கப்படும் அன்பழகனின் உரையில் இவை அனைத்தும் மிஸ்ஸிங். ஸ்டாலினின் அருமை பெருமைகளைச் சொல்லி அவரை செயல்தலைவர் பத விக்கு வழிமொழிவதோடு தனது பேச்சை முடித்துக் கொண்டார்.
பொதுக்குழுவில் கலந்து கொண்ட திமுக மூத்த தலை வர்கள் சிலர் இதை சுட்டிக்காட்டி நம்மிடம் ஆதங்கத்தோடு பேசி னார்கள். அவர்கள் கூறியது இங்கே:
கருத்து சுதந்திரம்
முன்பெல்லாம் திமுக பொதுக் குழு, செயற்குழு கூட்டங்களில் கட்சி எடுக்கும் முடிவுகள் குறித்து ஆதரித்தும் எதிர்த்தும் கடுமையான விமர்சனங்கள் எடுத்துவைக்கப்படும். அது போன்ற சமயங்களில் எதிர் கருத்து சொல்பவர்களை சுதந்திர மாக பேசவைத்து அத்தனைக் கும் தனக்கே உரிய பாணியில் பதில் சொல்வார் கருணாநிதி. பொதுக்குழுவில் தலைமைக்கு எதிராக பேசிவிட்டார் என்பதற் காக யார் மீதும் ஒழுங்கு நட வடிக்கை எடுக்கப்பட்டதில்லை. இதுதான் உட்கட்சி ஜனநாய கத்தை மதிக்கும் கட்சி என்ற பெயரை திமுக-வுக்கு தந்தது.
வைகோ திமுக-வில் இருந்த கடைசி நாட்களில் நடந்த செயற் குழு கூட்டத்தில் பெரியார், அண்ணாவின் கொள்கைகளை இருட்டடிப்பு செய்வதாக தலைமைக்கு எதிராகவே குற்றம் சாட்டினார் வைகோ. அவர் மட்டுமல்ல, முரசொலி மாறன், க.சுப்பு, மதுராந்தகம் ஆறுமுகம், கோ.சி.மணி, கோட்டூர் ராஜசேகர் இப்படி பலபேர் தலைமையின் முடிவுகளை எதிர்த்திருக் கிறார்கள். சிலநேரங்களில் எதிர் வாதங்களுக்கு மதிப்பளித்து பொதுக்குழு தனது முடிவை மறுபரிசீலனை செய்தும் இருக் கிறது.
1972 பொதுக்குழுவில்..
1972-ம் ஆண்டு பொதுக்குழு கூட்டம் திருப்பரங்குன்றம் அருகே தென்பரங்குன்றத்தில் கூடியது. அப்போது எம்.ஜி.ஆர். திமுக-வில் இருந்தார். அந்த நேரத்தில் எம்.ஜி.ஆருக்கு ஆதர வாக கட்சிக்குள் அணி சேர்த்த வந்தவாசி விஸ்வநாதன் (முன் னாள் அமைச்சர்) போன்றவர்கள், ‘கட்சிக்கு புதிய தலைவரை தேர்வு செய்ய வேண்டும்’ என குரல் எழுப்பினார்கள்.
அதிமுகவைப் போல்..
இத்தகைய ஜனநாயக பதிவுகளைக் கொண்ட திமுக பொதுக்குழு நேற்றைய தினம் சுவடு தெரியாமல் கூடிக் கலைந்திருக்கிறது. கருணாநிதி செயல்படமுடியாத நிலையில் இருப்பதால் ஸ்டாலினை செயல் தலைவராக்குவது காலத் தின் கட்டாயம்தான். ஆனால், அதற்காக கூட்டப்பட்ட பொதுக் குழு கூட்டம் நடத்தி முடிக்கப் பட்ட விதத்தையும் அதற்காக எடுக்கப்பட்ட முன்னெடுப்புகளையும் பார்த்தால் திமுக-வும் கொஞ்சம் கொஞ்சமாக அதிமுக பாணிக்கு மாறிக் கொண் டிருக்கிறதோ என அச்சப்படாமல் இருக்க முடியவில்லை என்று அந்த மூத்த தலைவர்கள் தெரிவித்தனர்.

கருத்துகள் இல்லை: