அதிமுக
பொதுக்குழுவில் சசிகலா அடுத்த பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டதாக
தீர்மானம் நிறைவேற்றப்பட்டு டிசம்பர் 31 ஆம் தேதி பொதுச்செயலாளராக அதிமுக அலுவலகத்தில் பதவி ஏற்றுக் கொண்டார்.பொதுக்குழுவை
முடித்து கொண்டு ஒவ்வொரு முறையும் ஜெ. போயஸ் கார்டன் வரும் பாதையில்
கூட்டம் அலைமோதும். குறிப்பாக பெண்கள் கூட்டம் அலைமோதும். ஆனால் சசிகலாவை
பொது செயலாளராக தேர்வு செய்யபட்ட போதும் சரி,பொதுச் செயலாளராக பதவி ஏற்க
போயசிலிருந்து ,அதிமுக அழுவலகம் வரையிலும் குறைவாகவே கூட்டம் இருந்தது.
அதிமுக அலுவலகம் இருக்கும் சாலையில் தொண்டர்களை விட காக்கிகளே அதிக அளவில்
குவிந்து இருந்தனர்.சசிகலா
பதவி ஏற்ற பின்னர் தமிழகம் முழுவதும் அதிமுக உறுப்பினர், அதிமுக
வாக்காளர்கள், மற்ற கட்சியை சேர்ந்தவர்கள், கட்சி சாராத மக்கள் என பிரித்து
கருத்து கணிப்பில் இறங்கினோம். அந்த கருத்து கணிப்பின் முடிவுகள் நேற்று
நமது நக்கீரன் இதழில் வெளியானது. அதில் அதிமுக உறுப்பினர்கள் 63 % பேர்
சசிகலாவை எதிர்ப்பதாக சொல்லிருந்தார்கள். அதைக் கண்டு கார்டன் தரப்பு
அதிர்ந்திருக்கிறது. நக்கீரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக