சென்னை:
சசிகலா முதல்வராவது உறுதி என்பதால் அவரது கணவர் நடராஜனும் சகோதரி மகன்
தினகரனும் அமைச்சரவை பட்டியல் தயாரிப்பில் படுபிஸியாக இருக்கின்றராம்.
அதிமுக பொதுச்செயலர் பதவியை போடாத வேஷம் போட்டு கைப்பற்றிவிட்டார் சசிகலா. ஆனாலும் மன்னார்குடி தரப்பு சசிகலாவை முதல்வர் நாற்காலியில் அமரவைத்தே தீருவது என கங்கணம் கட்டிக் கொண்டு இருக்கிறது. இதற்காக முதல்வர் பன்னீர்செல்வத்திடம் சில நாட்களுக்கு முன்னரே ராஜினாமா கடிதம் வாங்கி வைத்துவிட்டது. வரும் 10 அல்லது 12-ந் தேதியன்று சசிகலாவை முதல்வர் நாற்காலியில் உட்கார வைப்பதில் படுதீவிரமாக இருக்கின்றனர்.
இதனிடையே கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள ஒரு பங்களாவில் முகாமிட்டு நடராஜனும் தினகரனும் அமைச்சர்கள் யார்? யார்? என்ற பட்டியலை தயாரித்து போயஸ் கார்டனுக்கு அனுப்பி கொண்டிருக்கிறார்களாம். அப்பட்டியலில் எடப்பாடி பழனிச்சாமிக்கு 2-வது இடம் கொடுத்து பன்னீர்செல்வத்துக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
இவர்கள் மட்டுமின்றி இளவரசியும் அவரது மகன் விவேக்கும் தங்கள் பங்குக்கு ஒரு அமைச்சரவை பட்டியலை ரெடி செய்து சசிகலாவிடம் கொடுத்து வருகிறாராம். இதனால் அமைச்சர்கள் பலரும் அதிர்ந்து போயுள்ளனராம். tamiloneindia

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக