சனி, 7 ஜனவரி, 2017

முதலமைச்சர் பதவியை ஏத்துக்கிறது என்னோட பத்து வருடக் கனவு... சொன்னது சின்னம்மா !

அ.தி.மு.க. தலைமையகத்தில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் பதவியை ஏற்றுக்கொண்டு விட்டு, போயஸ் தோட்டத்துக்குத் திரும்பிய சசிகலா, அங்கு தன் உறவினர்களுடன் முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.அப்போது நடந்தது என்ன என்பது குறித்து நடராஜனுக்கு வேண்டியவர்கள் நம்மிடம் விவரித்தனர்."கார்டனில் நடராஜன் சகஜமாக உலவு கிறார். நடராஜன், திவாகரன், தினகரன், டாக்டர் வெங்கடேஷ் உட்பட்ட குடும்ப உறுப்பினர்களோடு நடராஜன் ஆலோசனை நடத்தினார். அப்போது, ஓ.பன்னீர் மீது அதிருப்தியையும் சந்தேகத்தையும் சசிகலா வெளிப்படுத்தியிருக்கிறார். ’பொதுச்செயலாளர் பதவிக்கும் பன்னீர் ஆசைப்பட்டார். அவர் காட்டுறது பணிவல்ல, நடிப்பு. மத்திய அரசோடு நாம இணக்கமா நடந்துக்கிறதுன்னு வாக்குறுதி தந்திருக்கோம். ஆனாலும் அவங்க, பன்னீரை முழு கண்ட்ரோலில் வச்சு நமக்கு குடைச்சல் கொடுப்பாங்க. எனக்கு எதிரா எதிர்ப்புகளும் விமர்சனங்களும் அதிகரிச்சுகிட்டு வருது. இதைக் கட்டுப்படுத்த உங்களால முடியல’ என சசிகலா கூறியிருக்கிறார். அவர் அதிருப்தியா இப்படிச் சொல்லவும், கூட இருந்த உறவினர்களும் நடராஜனும் பன்னீரை நாங்க கவனிச்சுகிட்டுதான் இருக்கோம்னு சொல்ல, முதலமைச்சர் பதவியை ஏத்துக்கிறதுன்னு உறுதியானாங்க, சசிகலா. இது என்னோட பத்து வருடக் கனவுன்னு அவங்க சொன்னதும்தான் உறவினர்கள் எல்லாரும் நிம்மதியானாங்க..” என தோட்டத்து சங்கதியைச் சொன்னார்கள்.  நக்கீரன்

கருத்துகள் இல்லை: