2 நாட்களில் 19 விவசாயிகள் மனமுடைந்து சாவு.
மந்திரிகளும் மக்களும் புத்தாண்டு கொண்டாட்டம்..
மனிதம் செத்துப்போச்சு. வெட்கம் கெட்ட மக்கள்.
மோடியின் நேற்றைய உரையில் பண மதிப்பிழப்பின் நோக்கங்கள், ஏற்படுத்திய விளைவுகள் என எதுவும் குறிப்பிடப்படவில்லை. இரண்டு மாதமாய் நாடும், மக்களும் அவதிப்பட்டுக்கொண்டு இருக்கும் பிரச்சினையில் ’வரும் ஆண்டில் வங்கிப்பிரச்சினைகள் சரியாகிவிடும்’ என ஜஸ்ட் லைக் தட் கடந்து, மக்களை திசை திருப்பும் வாய்ச்சவடால்களை வழக்கம் போல் அள்ளி விட்டிருக்கிறார்.
“:இந்த அரசு நேர்மையானவர்களுக்கு நண்பன், நேர்மையற்றவர்களுக்கு எதிரி” என்னும் பஞ்ச் டயலாக்குகளுக்கு ஒன்றும் குறைவில்லை.
இந்த பணப்பஞ்ச காலத்திலும் பல நூறு கோடி ருபாய் செலவில் குடும்பத் திருமணங்கள் செய்த நிதின் கட்காரி, ஜனார்த்தன ரெட்டி மீது ஒரு துரும்பைக்கூட அசைக்காத இந்த அரசின் கேவலமான நியாயங்கள் எல்லோருக்கும் தெரியும்தான்.
ஆனாலும் ஒன்றே ஒன்றை மட்டும் கேட்கத் தோன்றுகிறது. “மோடி! உங்கள் அரசுக்கு தமிழக முன்னாள் தலைமைச் செயலர் ராம மனோகர ராவ் இப்போது நண்பரா, எதிரியா?”
மற்றதை நாட்டு மக்கள் புரிந்து கொள்வார்கள்.முகநூல் பதிவு சென்னை தாமோதிரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக