செவ்வாய், 3 ஜனவரி, 2017

2 ம் இடம் வேண்டுமா அல்லது ஜெயிலா? பன்னீரை பணியவைத்த மன்னார்குடி பேரரசன் நடராஜன் .

நண்பர்களே மீண்டும் லைவ் டே வணக்கம். ஜெ. உடல்நலம் பாதிக்கப் பட்டு மருத்துவமனையில் இருந்த போது டிசம்பர் 10 ஆம் தேதி வாக்கில் ஒரு செய்தி வெளியிட்டோம். அதாவது நடராஜன் போயஸ் தோட்டத்தில் தென்படுகிறார் என்று. அது உண்மை என்பது போன்ற நிகழ்வுகள் தான் இப்போது போயஸ் தோட்டத்தில் நடக்கும் நிகழ்வுகள் அனைத்துமே இருக்கிறது என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள். நேற்று அவசரமாக முதல்வர் பன்னீரும் மாவட்டச் செயலாளர்களும் போயஸ் கார்டன் வரவைக்கப்பட்டனர். அந்த மீட்டிங்கில் சசிதான் முதல்வர். ஒழுங்கா சரின்னு சொல்லிட்டுப் போங்க என்பது போன்ற மிரட்டல் பாணி அரசியல் தான் நடந்தது என்கிறார்கள். இந்த அதிரடி அரசியல் நடராஜன் ஸ்டைல். இதே போன்ற அதிரடிகள் ஜெ., முதல்வர் ஆனபோதும் நடந்தது. நன்றாக நினைவு படுத்திப்பாருங்கள் எம்ஜிஆர் இறந்து, ராஜீவ் இறந்து, தமிழகம் இதே போன்ற ஒரு இடியாப்பச் சிக்கலில் இருந்தது. கலைஞர் மிக துடிப்போடு இருந்த காலகட்டம்.13 வருட வனவாசம் முடிந்து அப்போது தான் ஆட்சிப் பொறுப்பில் இருந்தார். ராஜீவ் மரணத்தை அப்படியே லபக்கி அனுதாப அலையில் அதிரடியாக ஜெ.,வை முதல்வர் ஆக்கியதில் நடராஜன் பங்கு அளப்பரியது.


அரசனைக் காக்க வீரனைப் பழி கொடு என்பது ஒரு பழமொழி. அப்படித் தான் பலரைப் பலி கொடுத்து ஜெ., வை முதல்வர் நாற்காலியில் உட்கார வைத்தார். இப்போது அதே பாணி அரசியல் தான் நடக்கிறது. அரசியைக் காக்க முதல்வரை பலி கொடுக்க தயாராகிவிட்டார் நடராஜன். முதல்வர் பன்னீரின் பல உள் விஷயங்கள், ராம மோகனராவ், அவரது மகன், பன்னீரின் மகன், இவர்கள் அனைவரும் சேர்ந்தே பல தில்லாலங்கடி வேலைகள் செய்தனர் என்பது வார ஏடுகளின் குற்றச்சாட்டு. குறிப்பாக ஒரு பத்திரிகை தெள்ளத்தெளிவாக யார் யாருடன் கூட்டு, பன்னீர் தம்பி செய்த பல விவகாரங்கள் போன்ற அனைத்தும் டெல்லி வரை ஆதார பூர்வமாக வைத்திருகிறார்கள் என்றே எழுதி இருக்கிறது. டெல்லியை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம், நீ இரண்டாம் இடத்தில இரு. முதல்வர் பதவியில் இருந்து ஓடிப் போயிரு. இல்லை என்றால் மீதிக் காலத்தை கழிக்க வேண்டும் என்பது தான் அங்கு நேற்று நடந்திருக்கிறது என்கிறார்கள். எப்படியும் ஓரிரு நாட்களில் முதல்வர் பன்னீர் ராஜினாமா செய்து விட்டு ஒதுங்கிக் கொள்வார் அதன் பின் மன்னார்குடிப் பேரரசு தமிழ்நாட்டில் உதயமாகும்.   லைவ்டே

கருத்துகள் இல்லை: