புதன், 4 ஜனவரி, 2017

காவிரியை தடுத்த டிஜிடல் கேடி மோடி ... ஆற்று மணலை கொள்ளை அடித்த அதிமுக - ரெட்டி... நெஞ்சு வெடித்து சாகிறான் விவசாயி

விவசாயி Poster.
நெஞ்சு வெடித்து சாகிறான் விவசாயி . . .காவிரியை தடுத்த மோடியும், ஆற்று மணலை கொள்ளையடித்த அதிமுக -ரெட்டி- ராவ் கும்பலும்தான் குற்றவாளிகள்! கொள்ளையடித்த சொத்துக்களை பறிமுதல் செய்து விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கு !

டிஜிட்டல் இந்தியா என்கிறார்கள், புயல் வந்த போது பணம் தேய்க்கும் மிஷின் வேலை செய்யவில்லை என்று பெட்ரோல் பங்கில் பெட்ரோல் போட முடியவில்லை. வளராத பழைய தொழில்நுட்பத்தை வைத்து கொண்டு மக்களை ஏமாற்றும் மோசடியை மோடி செய்கிறார். விவசாயிகளிடம் swiping machine இருக்கிறதா?. கீரை விற்கும் பாட்டியிடம் நாம் வாங்கு 10ரூபாய் கீரைக்காக swiping machine வைத்திருக்க சொல்வது அயோக்கியத்தனமில்லையா? அமைப்பு சாரா தொழிலாளர்கள் தான் நம் நாட்டில் அதிகம் இருக்கிறார்கள் அவர்களிடம் பணமில்லாமல் பரிவர்த்தனை என்பது சாத்தியமா? பெரும்பான்மை மக்கள் கையில் பணம் வைத்து கொண்டு தான் செலவு செய்கிறார்கள். நம்முடைய உரிமை கையில் பணம் வைக்க கூடாது என்று சொல்லவதற்கு இவர்கள் யார்?. நாட்டின் முன்னேற்றத்திற்காக ஒரு வேலை மட்டும் சாப்பிடு என்று சொல்வார்கள். 2008-2009 யில் பொருளாதார நெருக்கடி வந்த போது எல்லா நாடும் திவால் ஆனாது. இந்தியா மட்டும் தான் தப்பித்து கொண்டது காரணம் மக்களின் கையில் இருந்த சேமிப்பு தான் என பல பொருளாதார நிபுணர்கள் கூறினார்கள்.

இப்போது அதைப் பிடுங்கிவிட்டார் மோடி ருப்புப் பண கிரிமினல் சேகர் ரெட்டியை உருவாக்கிய அரசை எதிர்த்து மக்கள் அதிகாரம் சார்பாக 27.12.16 அன்று வேலூர் தலைமை தபால் நிலையம் அருகில் ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.
ஆர்பாட்டத்திற்கு தலைமை தாங்கிய தோழர் மோகன்  தலைமையுரையில் பாலாற்றில் மணல் எடுத்து சேர்த்தது தான் சேகர் ரெட்டியிடமுள்ள கோடிக்கணக்கான கருப்பு பணம். இவர்களை போன்ற கொள்ளையர்களை பிடிக்க வக்கில்லாமல் சாதாரண உழைக்கும் மக்கள் எல்லோரையும் வதைக்கிறது இந்த மோடி அரசு என்று பேசினார்.
வழக்கறிஞர் பாலு தனது கண்டன உரையில் மணல் கொள்ளை கண்டித்தும் பணமதிப்பிழப்பு என்பதே ஒரு ஏமாற்று என்பதை சுட்டிக்காட்டிப்பேசினார்.
பாலாறு பாதுகாப்பு குழுவை சேர்ந்த தோழர் விக்னேஷ் :
சேகர் ரெட்டி என்பவன் ஒரு புரோக்கர், கரிகாலன் என்ற மணல் கொள்ளைடிக்கும் கும்பல் போலீசு உட்பட ஒவ்வொருவருக்கும் 10000 ரூபாய் பணம் கொடுக்கிறான். மூன்று அடி தான் மணல் அள்ள வேண்டும் என்று இருக்கிறது. ஆனால் கணக்கு வழக்கில்லாமல் பல அடி மண்ணை தோண்டி எடுக்கிறான். நம் ஊரில் காவேரியா ஓடுகிறது. வேலூரில் இருப்பது பாலாறு ஒன்று தான்.  அதில் மணலை அள்ளி ஒன்றும் இல்லாமல் செய்து விட்டனர்.
vellore-peoples-power-protest3ரிசர்வ் வங்கியில் பணம் இல்லை அதனால் மக்களிடம் இருக்கும் பணத்தை கொள்ளையடித்து பணக்காரனிடம் கொடுத்து அவனை வாழ வைக்க தான் இந்த பணமதிப்பிழப்பு திட்டம். ஏழையும் பணக்காரனும் சமம் என்று பேசினால் மாவோயிஸ்ட், தீவிரவாதி என்கிறான். இந்த பணமதிப்பிழப்பு திட்டத்தை அறிவித்தால் நாட்டில் கலவரம் வரும் என உச்சநீதிமன்றம் தெரிவித்தது. அதற்கு முப்படையும் தயார் நிலையில் வைக்கிறான்.
மக்களை கோமாளியாக மாற்றும் திட்டம் தான் இது. இந்த திட்டமே பன்னாட்டு கம்பெனிகள் கொள்ளையடிப்பதற்காக தான் அறிவிக்கப்பட்டுள்ளது. ஓ.பி.எஸ் போன்றோரின் உதவியால் தான் இங்கு மணல் கொள்ளையடிக்கப்படுகிறது. அதைத்தடுக்காமல் கருப்புப்பணத்தை ஒழிப்பது என்பதெல்லாம் ஏமாற்று. இவர்களை அம்பலப்படுத்த வங்கிகளின் வாசலில் நிற்பவர்கள் தெருவில் இறங்கி போராட வரவேண்டும். மக்கள் தெருவில் இறங்கி போராடுவது தான் இதற்கு ஒரே தீர்வு என்று பேசினார்.
மக்கள் அதிகாரம் மண்டல ஒருங்கிணைப்பாளர் தோழர் வெற்றிவேல் செழியன் :
நரேந்திர மோடியின் அரசின் கருப்புப்பண ஒழிப்பு என்ற அறிவிப்பு மக்களை வாட்டி வதைக்கிறது. மோடி அரசு உண்மையிலேயே கருப்பு பணத்தை ஒழித்தால் நாம் கஷ்டத்தை தாங்கி கொள்ளலாம். ஆனால் மோடியின் இந்த நடவடிக்கையோ சிறுகடை வியாபாரிகள், சிறு வணிகர்கள், தொழிலாளர்கள், மாதம் சம்பளம் வாங்கும், அன்றாடங்காய்ச்சிகள் ஆக உள்ள சாதாரண உழைக்கும் மக்களிடம் உள்ள சேமிப்பை வழிப்பறி செய்து முதலாளிகளுக்கு தாரைவார்க்கிறது.
vellore-peoples-power-protest2மோடி யார்? பிரதமர் என்றால் நமக்காக வேலை செய்பவர் என்று நம்மில் சிலர் தவறாக புரிந்து வைத்து கொண்டிருக்கிறோம். ஆக பெரும்பான்மையாக உள்ள மக்களுக்கு எதிரானவர் தான் மோடி. கார்ப்பரேட் முதலாளிகளுக்காக இந்தியாவை சுரண்டுவதற்கு அரிதாரம் பூசி கொண்டிருப்பவர் தான் மோடி. அதற்கு ஊடகங்கள் மூலம் கோடிக்கணக்கில் விளம்பரம் செய்து அவர்களுக்கு அடிமை சேவகம் செய்ய உருவாக்கப்பட்டவர் தான் மோடி.
தேர்தலில் நாம் ஓட்டு போட்டதால் மோடி நமக்கு வேலை செய்வார் என்று நினைத்தால் நாம் தாம் முட்டாள். கார்ப்பரேட் முதலாளிகளுக்கு சிறந்த அடிமை சேவை செய்யும் ஆள் தான் மோடி. மோடி எடுக்கும் ஒவ்வொரு நடவடிக்கையும் மக்களுக்கு எதிரானது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
மோடி ஆட்சிக்கு வந்தவுடன் சுவிட்ஸர்லாந்தில் இருந்து 70 லட்சம் கோடியை கொண்டு வந்து நாட்டில் உள்ள அனைவரின் வங்கி கணக்கிலும் 15 லட்சம் போடுவதாக கூறினார். ஆனால் இப்போது நம்முடைய பணத்தை தூக்கி முதலாளிக்கு தருகிறார். ’சொன்னது என்னாச்சு?’ என கேட்டால் தேர்தலுக்காக சொன்னோம் என திமிராக பேசுகிறார்கள். இவர்கள் எடுக்கும் எந்த நடவடிக்கையும் முதலாளியின் நலனுக்காக என்று சொல்ல மாட்டார்கள். மக்கள் நலன் என்ற பெயரில் தான் கொண்டு வருவார்கள்.
மறுகாலனியாக்க கொள்கையான தனியார்மயமாக்கலை அமுல்படுத்தி லாபமாக இயங்கும் பொதுத்துறை நிறுவனங்களை, வங்கிகளை தனியாருக்கு தாரை வார்த்தார்கள். சேலம் ஸ்டீல் கம்பெனி 1000 கோடி வருமானத்தோடு லாபகரமாக இயங்கிய நிறுவனத்தை தனியாருக்கு தூக்கி கொடுத்தார்கள். இரயில்வே துறையை நவீனமாக்குவது என்ற பெயரில் தனியார்மயத்தை புகுத்துகிறார்கள். விவசாயத்தை முற்றிலுமாக அழிக்கும் வேலையை செய்கிறார்கள்.
வங்கியில் வராக்கடனை write off  என்ற பெயரில் 7016 கோடி தள்ளுபடி செய்தார்களே! அது யாருடைய பணம்? மோடியின் பணமா? பி.ஜே.பியின் பணமா? முதலாளிகளின் பணமா? இல்லை மக்களின் பணம். தங்கள் உழைப்பில் மக்கள் சிறுக சிறுக சேர்த்த பணத்தை தான் முதலாளிக்கு கடனாக மீண்டும் அள்ளிக் கொடுக்கவே பணமதிப்பிழப்பு என்ற பெயரில் மோசடி செய்கிறார்கள். இதற்கு எதிராக யாரிடம் முறையிட முடியும்?
vellore-peoples-power-protest4சீட்டு கம்பெனி எப்படி ஆசை வார்த்தை காட்டி மோசடி செய்யுமோ அது போல மக்களிடம் கருப்பு பணத்தை ஒழிப்பதாக ஆசை காட்டி மோசடி செய்கிறது மோடி அரசு. கருப்பு பணம் யாரிடம் இருக்கிறது? சேகர் ரெட்டி போன்ற ஆட்களிடமும் தான் இருக்கிறது. ஜனார்த்தன ரெட்டி 650 கோடிக்கு மகள் திருமணத்தை செய்கிறான், மக்கள் 2000 ரூ பணம் எடுக்க தவித்துக் கொண்டிருக்கும் போது இது வக்கிரமில்லையா? இந்த திருமணத்திற்கு வருமான வரித்துறை, பி.ஜே.பி, நபர்கள் விருந்து சாப்பிட வரிசையில் நிற்கிறார்கள். இவன் 650 கோடியை எந்த ஏ.டி.எம்மில், எந்த பேங்க் வாசலில் நின்று எடுத்தான். இந்த ஜனார்த்தன் ரெட்டி யார்? ஆந்திராவில் இரும்பு கனிம வளத்தை சூறையாடியவன். கர்நாடகத்தில் அமைச்சராக இருந்தவன். இயற்கையை கொள்ளையடிக்கும் இப்படிப்பட்ட மாபியா கும்பலிடம் தான் கருப்பு பணம் இருக்கிறது. இது மோடி அரசுக்கு தெரியாதா? அம்பானி, அதானியை ஏன் பிடிக்கவில்லை.?
உள்ளூர் காவல் நிலையத்திற்கு எவன் கிரிமினல் என்று நன்றாக தெரியும். அது போல வருமான வரித்துறைக்கு எவன் எவ்வளவு பணம் வைத்திருக்கிறான் என்று நன்றாக தெரியும். வருமான வரித்துறையே லஞ்சம் வாங்குகிறது. இவர்கள் நேர்மையாக இருப்பது போல நாடகம் ஆடுகிறார்கள்.
கருப்பு பணம் என்பது மூட்டைக்கட்டி வீட்டில் குழித்தோண்டி பணத்தை பதுக்கியா வைத்துள்ளார்கள். ஆற்றில் உள்ள மணல் முழுவதையும் ஒட்ட சுரண்டியும் கருப்பு பணம் சேர்ந்துள்ளது. இயற்கை வளங்களை சட்டத்திற்கு புறம்பாக எடுப்பதன் மூலமும் கருப்பு பணம் உருவாகிறது. வேலூரில் மணற்கொள்ளையில் கோடிக்கணக்கான பணம் புழங்குகிறது. சேகர் ரெட்டிக்கு அரசு துறையை சேர்ந்தவர்கள் அனைவரும் மாவட்ட ஆட்சியர் வரையிலும் வெளிப்படையாக ஆதரவு தருகிறார்கள். பலமுறை மனு கொடுத்தும் பலமுறை போராடியும் மணல் கொள்ளையை தடுக்க முடியவில்லை. காவேரிப்பாக்கம் என்னும் ஊரில் மக்கள் மணல் கொள்ளையை எதிர்த்து போராடும் போது மக்களை அடித்து கைது செய்தது போலீஸ். மக்கள் தொடர்ச்சியாக போராடினார்கள் மணல் அள்ளும் வண்டியை மக்கள் சிறைப்பிடித்தார்கள். அதை மக்களிடம் இருந்து பிடிங்கி போலீஸ்காரர்கள் மணற் கொள்ளையர்களிடமே தந்தார்கள். இதற்கு எதிராக யாரிடம் எங்கே போய் முறையிட முடியும்?
டிஜிட்டல் இந்தியா என்கிறார்கள், புயல் வந்த போது பணம் தேய்க்கும் மிஷின் வேலை செய்யவில்லை என்று பெட்ரோல் பங்கில் பெட்ரோல் போட முடியவில்லை. வளராத பழைய தொழில்நுட்பத்தை வைத்து கொண்டு மக்களை ஏமாற்றும் மோசடியை மோடி செய்கிறார். விவசாயிகளிடம் swiping machine இருக்கிறதா?. கீரை விற்கும் பாட்டியிடம் நாம் வாங்கு 10ரூபாய் கீரைக்காக swiping machine வைத்திருக்க சொல்வது அயோக்கியத்தனமில்லையா? அமைப்பு சாரா தொழிலாளர்கள் தான் நம் நாட்டில் அதிகம் இருக்கிறார்கள் அவர்களிடம் பணமில்லாமல் பரிவர்த்தனை என்பது சாத்தியமா? பெரும்பான்மை மக்கள் கையில் பணம் வைத்து கொண்டு தான் செலவு செய்கிறார்கள். நம்முடைய உரிமை கையில் பணம் வைக்க கூடாது என்று சொல்லவதற்கு இவர்கள் யார்?. நாட்டின் முன்னேற்றத்திற்காக ஒரு வேலை மட்டும் சாப்பிடு என்று சொல்வார்கள். 2008-2009 யில் பொருளாதார நெருக்கடி வந்த போது எல்லா நாடும் திவால் ஆனாது. இந்தியா மட்டும் தான் தப்பித்து கொண்டது காரணம் மக்களின் கையில்  இருந்த சேமிப்பு தான் என பல பொருளாதார நிபுணர்கள் கூறினார்கள். இப்போது அதைப் பிடுங்கிவிட்டார் மோடி.
பாகிஸ்தான், காஷ்மீர், சீனா என போர் பதற்றத்தை உருவாக்கி  நாட்டுப்பற்று என்ற நாடகத்தை தொடர்ந்து அரங்கேற்றும் மோடி. அறிவித்த திட்டமெல்லாம் என்னாச்சு. தோல்வியில் முடிந்தது. அதை மறைக்கவே மக்களை திசைத்திருப்பவே இந்த அறிவிப்பு.
சேகர் ரெட்டியை கைது செய்து ’ஏ’ கிளாஸ் பிரிவில் சிறைசாலையில் வைத்துள்ளார்கள். ஆயிரக்கணக்கான கோடிகள் மோசடி செய்த கருப்புப் பண கொள்ளையனுக்கு டி.வி, ஏ.சியோடு சிறையில் வசதி. இவன் என்ன விடுதலை போராட்ட வீரனா? உயர் பதவியில் இருந்த ராம்மோகன் ராவ் ஊழலில் பிடிப்பட்டுள்ளான். அவனை காத்திருப்போர் பட்டியலில் வைத்துள்ளதாக அரசு அறிவிக்கிறது. வீதியில் நிறுத்தி தண்டனை கொடுக்க வேண்டாமா இவர்களுக்கு? பொருளாதார தீவிரவாதிகள் தான் இவர்கள். அரசாங்கம் என்பது யாருக்காக இருக்கு? தவறு செய்தால் தண்டனை இல்லை. குற்றம் செய்பவர்களே அவர்கள் தான் யாரை கொண்டு அவர்களை தண்டிப்பது? இந்த ஒட்டுமொத்த அரசு கட்டமைப்பும் மக்களுக்கு எதிரானதாக மாறிவிட்டது. மணல் கொள்ளை, ஊழல், லஞ்சம் என அழுகி நாறுகிறது. இதை நம்பி இனி பயனில்லை. நீதிமன்றம் சென்றோ, மனு கொடுத்தோ, எந்த பிரச்சனையையும் தீர்க்க முடியாது. அனைவரும் சேர்ந்து அழுகிப்போன எதிர்நிலை சக்தியாகிப்போன இந்தக் கட்டமைப்பை வீழ்த்துவதுதான் தீர்வு என்று பேசினார்.
தகவல்:
மக்கள் அதிகாரம், சென்னை மண்டலம்,
காவிரியை தடுத்த மோடியும், ஆற்று மணலை கொள்ளையடித்த
அதிமுக -ரெட்டி- ராவ் கும்பலும்தான் குற்றவாளிகள்!
கொள்ளையடித்த சொத்துக்களை பறிமுதல் செய்து
விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கு !
தகவல் :
மக்கள் அதிகாரம்,
சென்னை மண்டலம்.
தொடர்புக்கு – 91768 01656.வினவு

கருத்துகள் இல்லை: