ஞாயிறு, 1 ஜனவரி, 2017

காங்கிரஸ் அதிமுக கூட்டணி ? அதிசயம் ஆனால் உண்மை என்கிறார்களே? நல்லது .. திமுகவுக்கு நல்லது

காங்கிரசுடன் கூட்டு வைக்க அ.தி.மு.க., வியூகம்? ராவ் 'ரெய்டு' விவகாரத்தை முறியடிக்க முயற்சி. பா.ஜ.,விடம், சில ஆண்டுகளாக நெருக்கம் காட்டி வந்த, அ.தி.மு.க., மெதுவாக தன் பாதையை, காங்., பக்கம் திருப்பத் துவங்கி உள்ளது. தமிழகத்தில், கான்ட்ராக்டர் சேகர் ரெட்டி மற்றும் முன்னாள் தலைமை செயலர் ராமமோகன ராவ் வீடுகளில் நடந்த வருமான வரி சோதனையை யும், அது தொடர்பான வழக்குகளையும், காங்கிரசில் உள்ள மூத்த வழக்கறிஞர்கள் மூலம் முறியடிக்கவும், அ.தி.மு.க., மேலிடம் திட்டமிட்டுள்ளது. முன்னாள் பிரதமர் ராஜிவ், காங்., தலைவராக இருந்த போது, தமிழகத்தில், அ.தி.மு.க., - காங்., இடையேயான கூட்டணி நன்றாக இருந்தது. ஜெ., - ராஜிவ் இடையே, நல்ல நட்புறவும் நிலவியது.  தமிழ் நாட்டில் காங்கிரஸ் என்ன அப்பா டக்கர் கட்சியா? பாவம் திமுக, இவர்களால் எத்தனை தொகுதிகள் தோற்றார்கள் என்று தெரியும். தமிழ் நாடு காங்கிரஸ் கட்சியில் எத்தனை குரூப் உள்ளது என்று எல்லோருக்கும் தெரியும்


ஆனால், ராஜிவ் மறைவுக்கு பின், காங்., தலைவராக சோனியா பதவியேற்ற பின், இந்த இரு கட்சிகளின் கூட்டணியில் விரிசல் ஏற்பட்டது; கொள்கை ரீதியான கருத்து வேறுபாடுகளும் அதிகரித்தன. அ.தி.மு.க., பிரசார மேடைகளில், 'சோனியாவை வெளிநாட்டுக்காரர்' என, வர்ணிக்கும் அளவுக்கு பகை வளர்ந்தது. அதே நேரத்தில், பா.ஜ.,வுடனும், அ.தி.மு.க., அதிக நெருக்கம் காட்டவில்லை. மத்தியில், பா.ஜ., ஆட்சியை பிடித்த போதும், வாஜ்பாய் தலைமையிலான, தே.ஜ., கூட்டணி ஆட்சியின் போதும், இரு கட்சிகளுக்கும் இடையேயான உறவு, பட்டும் படாமல் தான் இருந்தது.

ஏன் ஒரு கட்டத்தில், வாஜ்பாய் தலைமையிலான ஆட்சி கவிழவும், அ.தி.மு.க.,வே காரணமாக அமைந்தது ஆனால், 2014ல், மோடி தலைமை யிலான, பா.ஜ., அரசு, மத்தியில் அமைந்த பின், அ.தி.மு.க., தலைமையுடன் நட்பு பாராட்டியது. ஜெ., உயிருடன் இருந்திருந்தால், இரு கட்சிகளுக்கும் இடையே, எதிர்வரும் தேர்தல்களில் கூட்டணி அமைவதற்கான வாய்ப்புகளும் உருவாகின.

இந்த நட்பின் அடிப்படையிலேயே, பிரதமர் மோடி உட்பட, பா.ஜ., தலைவர்கள் பலர், ஜெ.,யின் இறுதிச் சடங்கில் பங்கேற்றனர். ஆனால், ஜெ., மறைவுக்குப் பின், தமிழகத்தில் அடுத்தடுத்து நடைபெறும் சம்பவங்களும், வருமான வரி சோதனைகளும், பா.ஜ., மீது, அ.தி.மு.க.,வுக்கு கோபத்தை ஏற்படுத்தி உள்ளன.

குறிப்பாக, அ.தி.மு.க.,வின் பொதுச் செயலராக, நேற்று பொறுப்பேற்றுள்ள, சசிகலாவின் குடும்பத் தினருக்கு மிகவும் வேண்டியவரான, கான்ட்ராக்டர் சேகர் ரெட்டி வீடுகளில் நடந்த அதிரடி சோதனை, தமிழக அரசின் தலைமை செயலராக இருந்த, ராமமோகன ராவின் வீட்டில் நடந்த சோதனை போன்றவை, அ.தி.மு.க., மேலிடத்தை அதிர்ச்சிக்கு ஆளாக்கின.

மத்திய அரசின் துாண்டுதலில் தான், சோதனைகள் நடைபெற்று உள்ளன என்ற கோபமும் உருவாகி யுள்ளது. அதுமட்டுமின்றி, அ.தி.மு.க., தலைமை பொறுப்புக்கும், அரசின் முக்கிய பதவிக்கும், சசிகலாவோ அல்லது அவரது உறவினர்களோ வந்து விடக்கூடாது என்ற எண்ணத்திலும், முதல்வர் பன்னீர்செல்வத்தையே, முதல்வராக நீடிக்கச் செய்ய வேண்டும்என்ற திட்டத்திலும், இந்த சோதனைகள் நடைபெற்றதாக, சசிகலாவின் உறவினர்கள் கருதுகின்றனர்.

இதனால், பா.ஜ.,வை நம்பி இனி அரசியல் செய்ய முடியாது என்ற முடிவுக்கு, சசிகலாவின் மன்னார் குடி சொந்தங்கள் வந்துள்ளன. எனவே, காங்கிரசை நோக்கி தங்கள் பாதையை திருப்பியுள்ளன. அதற்கு அச்சாரமாக, தமிழக காங்., தலைவர் திருநாவுக்கரசருடன், சசிகலாவின் உறவினர் கள் அதிக நெருக்கம் காட்டி வருகின்றனர்.

திட்டம்இது குறித்து, அ.தி.மு.க., மேலிடத்துடன் நெருங்கிய தொடர்பில் உள்ள, டில்லி காங்., வட்டாரங்கள் கூறியதாவது:தன் நெருங்கிய உறவினர்கள் மூலம், காங்., தலைமையிடம் பேச்சு நடத்த, அ.தி.மு.க.,வின் தற்போதைய தலைமை வியூகம் வகுக்க துவங்கி விட்டது.

முதற்கட்டமாக, ராமமோகன ராவ் வீட்டில் நடந்த வருமான வரி சோதனையை முறியடிக்கும் வகையில், 'ராவ் நேர்மையான வர்' என, காங்., தலைவர்கள் மூலம் சொல்ல வைக்கும் முயற்சிகளில், அ.தி.மு.க., களமிறங்கி உள்ளது. கான்ட்ராக்டர் சேகர் ரெட்டி வழக்கிலும், காங்கிரசில் உள்ள பிரபலமான வழக்கறிஞர்களை ஆஜராக வைத்து, அதை முறியடிக்க திட்டமிட்டுள்ளது.

ஏற்கனவே, ஜெ.,வுக்கு அஞ்சலி செலுத்த வந்த, காங்., துணைத் தலைவர் ராகுலுடன், சசிகலாவின் நெருங்கிய உறவினர் ஒருவர் நெடுநேரம் பேசி கொண்டிருந்ததை,
பலரும் பார்த்துள்ளனர். எனவே, இனி வரும் காலங்களில், அ.தி.மு.க., - காங்., நெருக்கம் அதிகரிக்க, அதிக வாய்ப்பு உண்டு.இவ்வாறு அந்த வட்டாரங்கள் கூறின.

- நமது நிருபர் -dinamalar

கருத்துகள் இல்லை: