புதுடில்லி, : சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், கட்சி இரண்டாக உடைவதை தடுக்க, சமாஜ்வாதி கட்சியின் நிறுவனர், முலாயம் சிங் மற்றும் அவரது மகனும், உ.பி., முதல்வருமான, அகிலேஷ் யாதவ் சமரச பேச்சை துவக்கியுள்ளனர்.
முதல்வர் அகிலேஷ் தலைமையிலான சமாஜ்வாதி ஆட்சி அமைந்துள்ள உத்தர பிரதேசத்தில், அடுத்த சில மாதங்களில் சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. இதற்கான கட்சி வேட்பாளர்கள் பட்டியலை, கட்சித் தலைவர் முலாயம் சிங், சமீபத்தில் வெளியிட்டார். அதில், அகிலேஷ் யாதவ் ஆதரவாளர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படவில்லை.
அதைத் தொடர்ந்து, கட்சித் தலைமை பொறுப்பை, அகிலேஷ் கைப்பற்றினார்.
இதனால், இரு தரப்பும் கடுமையாக மோதிய நிலையில், முலாயமும், அகிலேஷும், நேற்று தொலைபேசியில் பேசினர். தென்னைய பெத்தா இளநீரு .. பிள்ளைய பெத்தா கண்ணீரு
முலாயம் மீண்டும் கட்சித் தலைவர் அதைத் தொடர்ந்து, நேரில் சந்தித்துபேசினர். இரண்டு மணி நேரத்துக்கும் மேலாக நடந்த, இந்த பேச்சின்போது, சமரசம் செய்து கொள்வது குறித்து பேசப்பட்டதாக கூறப்படுகிறது. அதன்படி, முலாயம் மீண்டும் கட்சித் தலைவராகவும், சிவ்பால் சிங்குக்கு, தேசிய அளவிலான ஏதாவது பதவி தருவது குறித்தும், விவாதிக்கப்பட்டுள்ளது.
மேலும், உ.பி., சட்டசபை தேர்தல் வேட்பாளர்களை, அகிலேஷ் முடிவு செய்வது குறித்தும், விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது. ஆனால், அதிகாரப்பூர்வமாக எதுவும் அறிவிக்கப்படவில்லை. சைக்கிள் சின்னம் முடக்கம்?
சமாஜ்வாதி கட்சியில் ஏற்பட்டுள்ள மோதலின் உச்சக்கட்டமாக, கட்சியின் சின்னமான, சைக்கிளை பெறுவதற்கு இரு தரப்பும் முயற்சியில் ஈடுபட்டுள்ளன.
தேர்தல் ஆணையத்துக்கு நேற்று முன்தினம் சென்ற முலாயம், கட்சி சின்னத்தை தங்களுக்கே ஒதுக்க வேண்டும் என, வலியுறுத்தியுள்ளார். அகிலேஷ் தரப்பினர், தங்களுக்கு பெரும்பாலான எம்.எல்.ஏ.,க்கள் மற்றும் தொண்டர்களின் ஆதரவு உள்ளதால், சின்னத்தை தங்களுக்கே ஒதுக்க வேண்டும் என, தேர்தல் ஆணையத்தில், நேற்று முறையிட்டனர். இரு தரப்பும் சின்னம் கோரியுள்ள நிலையில்,
அது குறித்து, இறுதி முடிவு எடுக்கும் வரை, சைக்கிள் சின்னம் முடக்கி வைக்கப்படலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது. அதே போல், கட்சியின் பெயரை பயன்படுத்த முடியாது என்பதால், வரும் தேர்தலில், இரு தரப்பும், வேறொரு பெயரில் போட்டியிடும் நிலை ஏற்படலாம். தினமலர்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக