சனி, 7 ஜனவரி, 2017

நாஞ்சில் சம்பத் மீண்டும் அதிமுகவுக்கு ..அரசியல்ல (விபசாரத்தில) இதெல்லாம் சகஜமப்பா?

நாஞ்சில் சம்பத் :‘மீடியாவுல நான் பேசிட்டேன். இப்போ மீண்டும் அதிமுகவுக்கு திரும்பி வந்தா எல்லோரும் தப்பா பேசுவாங்களே என்று பம்மினார், அதற்கு நடராசன் :… ‘எவ்வளவு நாள் பேசுவாங்க. எல்லாம் ஒரு நாள். அதுக்குப்பிறகு வேற வேலையை பார்க்கப் போயிடுவாங்க? நீங்க எதிர்பார்க்காத பெரிய ஒரு பரிசு தருவோம் என்றார் .   வாயெல்லாம் பல்லாக நாஞ்சில் சம்பத்து தனது அரசியல் விபசாரத்துக்கு அதிமுகவே சிறந்த இடம் மீண்டும் ஜோதியில் ஐக்கியம் ஆனார் . வைகோவுடன் தொழிலில் போட்டி போடுவார்? 
அலுவலகத்தில் வைஃபை ஆனில் இருந்தது. வாட்ஸ் அப் ஆன்லைனில் வந்தது. “திடீரென பல்டி அடித்துவிட்டார் நாஞ்சில் சம்பத். சசிகலா தலைமையை ஏற்க முடியாது எனச் சொல்லிவந்தவர் இன்று, திடீரென சசிகலாவை சந்தித்தார். சசிகலாவுக்காக தமிழ்நாடு முழுக்க பிரச்சாரம் மேற்கொள்ளப்போவதாகவும் சொல்லியிருக்கிறார். கடந்த 3ஆம் தேதி காலை அதிமுக-விலிருந்து கொடுக்கப்பட்ட இன்னோவா காரை கட்சியின் தலைமை அலுவலகத்தில் ஒப்படைத்தார். அதற்கும் அவர் நேரில் செல்லவில்லை. தனது நண்பர் மூலமாக அந்தக் காரை கொடுத்து அனுப்பினார். சொந்த ஊரிலிருந்து கிளம்பி வந்தவர்,
சென்னைக்கு வராமல் செங்கல்பட்டு அருகில் ஒரு ஹோட்டலில் தங்கியிருந்தார் நாஞ்சில் சம்பத். அதாவது, 3ஆம் தேதி காரை கொடுத்து அனுப்பிவிட்டு செங்கல்பட்டில் இருந்தபடிதான் மீடியா ஆட்களை தனித்தனியாக கூப்பிட்டுப் பேசினார். ஒவ்வொரு டி.வி.க்கும் தனித்தனியாக பேட்டி கொடுத்தார். “எனக்கு சசிகலாவை தெரியாது. நான் அவரை சந்தித்ததும் இல்லை. அதிமுக தலைமையை ஏற்பதற்கான தகுதி சசிகலாவுக்கு இருக்கிறதா என்பதும் எனக்குத் தெரியாது. திமுக-விலிருந்து அழைப்பு வந்தால் அங்கே போவேன்” என்றும் பகிரங்கமாகவே சொன்னார். இது, அதிமுக வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. சம்பத் பேட்டி ஒளிபரப்பாகிக் கொண்டிருந்த நேரத்தில், அவர் எங்கேயிருக்கிறார் என அதிமுக மேலிடம் அவரை தேட ஆரம்பித்தது. அவரது செல்போனும் ஸ்விட்ச் ஆஃப் செய்யப்பட்டிருந்தது.
அந்த நேரத்தில் கார்டனுக்கு போன் செய்த நடராஜன், ‘என்ன நடக்குது? சம்பத் ஏதேதோ பேசிட்டு இருக்காரு. எல்லோரும் அமைதியா இருக்கீங்க… அவரைப் பேசி சமாதானப்படுத்த முடியாதா?’ என கோபத்துடன் கேட்டாராம். ‘அவரைத் தொடர்புகொள்ளவே முடியல’ என கார்டனிலிருந்து சொல்லியிருக்கிறார்கள். அதன் பிறகு, நடராஜன் தனக்கு நெருக்கமான சிலரை விட்டு விசாரித்திருக்கிறார். அவர்கள் மூலமாக சம்பத்துடன் போனில் பேசிய நடராஜன், ‘நீங்க எங்கே வேணும்னாலும் போங்க சம்பத். அதுக்கு முன்னாடி நான் உங்களைப் பார்க்கணும். நான் செங்கல்பட்டு வரவா? நீங்க தஞ்சாவூர் வர்றீங்களா?’ எனக் கேட்டாராம். அதிர்ந்துபோன சம்பத், ‘நானே அங்கே வர்றேண்ணா..’ எனச் சொல்லிவிட்டு மறுநாள் காலை அதாவது, 4ஆம் தேதி தஞ்சாவூர் போயிருக்கிறார். அங்கே வைத்துதான் இருவரும் பேசியிருக்கிறார்கள்.

‘நீங்க பேசினதைப் பார்த்து நான் ஆடிப்போயிட்டேன். நீங்கெல்லாம் பக்கத்துல இருக்கீங்க என்ற தைரியத்துலதான் நான் எதையும் கண்டுக்காம இருக்கேன். நீங்க இப்படிப் பேசினா எப்படி? என்னை உங்களுக்குத் தெரியாதா? நீங்க எதுவா இருந்தாலும் என்கிட்ட பேசியிருக்கலாமே? உங்களுக்கு என்ன வேணுமோ அதை செய்யத் தயாராக இருக்கோம். உங்கள மாதிரி ஒருவரை கட்சியைவிட்டுப் போறதுல எனக்குத் துளியும் விருப்பம் இல்ல. கொஞ்சநாள் பொறுத்துக்கோங்க. பதவியேற்பு விழா எல்லாம் முடியட்டும். நீங்க எதிர்பார்க்காத நல்லது உங்களுக்கு நடக்கும். என் பேச்சில் நம்பிக்கையிருந்தால், நீங்க போய் சசியை பாருங்க… நான் சொல்றேன்!’ என்று பேசியதாகச் சொல்கிறார்கள் விவரமறிந்தவர்கள்.
‘மீடியாவுல நான் பேசிட்டேன். இப்போ இப்படி ஒரு முடிவை எடுத்தால் எல்லோரும் தப்பா பேசுவாங்க…’ என தயக்கத்துடன் சம்பத் சொல்ல… ‘எவ்வளவு நாள் பேசுவாங்க. எல்லாம் ஒரு நாள். அதுக்குப்பிறகு வேற வேலையை பார்க்கப் போயிடுவாங்க. பேசுறவங்க யாரும் உங்களுக்கு எந்த நல்லதும் செய்யப் போறது இல்ல’ என, நடராஜன் பேசிப்பேசி சம்பத்தை சமாதானப்படுத்தியிருக்கிறார். அடுத்த நாளே சசிகலாவை சந்திக்கச் சொல்லியிருக்கிறார் நடராஜன். ஆனால் சம்பத், ‘இரண்டு நாட்கள் ஆகட்டும். நான் பார்க்கிறேன். நேற்று அப்படி பேசிட்டு இன்றைக்கு போய்ப் பார்த்தால், அது ரொம்பவும் சங்கடமா இருக்கும்’ எனச் சொல்லி தள்ளிப் போட்டிருக்கிறார். அதன்பிறகு, தொடர்ந்து மூன்று நாட்களுமே போனில் பேசி, அவரை ஃபாலோ அப் செய்தபடியே இருந்தாராம் நடராஜன்.
இன்று காலை சசிகலா – சம்பத் சந்திப்பு நிகழ்ந்துவிட்டது. ‘சின்னம்மாவின் ஆணைகளை நிறைவேற்ற தமிழகம் முழுக்க பிரச்சாரம் செய்வேன்’ எனச் சொல்லி அதிரவைத்துவிட்டார் சம்பத்.” என்று முடிந்தது அந்த மெசேஜ்.
“அரசியல்ல இதெல்லாம் சகஜம்தானே!” என கமெண்ட் அடித்த ஃபேஸ்புக், தொடர்ந்து ஸ்டேட்டஸ் ஒன்றுக்கு போஸ்ட் கொடுத்துவிட்டு சைன் அவுட் ஆனது. இதோ அந்த ஸ்டேட்டஸ்.
“சசிகலாவுக்கு இப்போது ஆஸ்தான ஜோதிடர் சூட்கேஸ் ஜோதிடர் என அன்போடு அழைக்கப்படும் ஜமால் என்பதை நாம் முன்பே மின்னம்பலத்தில் எழுதியிருக்கிறோம். கார்டனாக இருந்தாலும் சரி.. தலைமைச் செயலகமாக இருந்தாலும் சரி நினைத்த நேரத்தில் உள்ளே சென்று ஜெயலலிதாவையே சந்தித்து ஜோதிடம் சொன்னவர். அவர்தான், சசிகலா பொதுச் செயலாளராக எந்த தேதியில் ஆகவேண்டும் என்று நாள் குறித்துக் கொடுத்தவர். அவர் லேட்டஸ்ட்டாக சசிகலாவின் ஜாதகத்தை அலசி ஆராய்ந்துவிட்டு, ‘இப்போது முதல்வராக பதவி ஏற்க வேண்டாம். ஹிந்திக்காரங்களால் சில சிக்கல் வர வாய்ப்பு இருக்கிறது’ என்று திடீர் முட்டுக்கட்டைப் போட்டு இருக்கிறார். இந்த தகவல் நடராஜன் கவனத்துக்கு கொண்டு போயிருக்கிறது கார்டன் தரப்பு. அதற்கு நடராஜன், ‘எப்படி இருந்தாலும் சலசலப்பு வருவது தவிர்க்க முடியாது. நாம தள்ளிப்போடும் வரை சிக்கல் அதிகமாகிட்டுத்தான் போகும். அதனால எதைப்பற்றியும் யோசிக்க வேண்டாம்’ என சொல்லிவிட்டாராம் நடராஜன். ஜோதிடர் சொல்வதை கேட்பாரா… கணவர் சொல்வதை கேட்பாரா? என்ன செய்யப் போகிறார் சசிகலா என்பது இன்னும் சில தினங்களில் தெரியும்!” என்று முடிந்தது அந்த ஸ்டேட்டஸ்.  மின்னம்பலம்

கருத்துகள் இல்லை: