தினகரனின் வங்கி கணக்குகளில் 1995, 1996-ஆம் ஆண்டுகளில் வெளிநாட்டில் இருந்து பெரும் தொகை டெபாசிட் செய்யப்பட்டது. இதையடுத்து 1996-ஆம் ஆண்டு தினகரன் மீது அன்னிய செலாவணி மோசடி வழக்குகள் பாய்ந்தன.
தினகரன் அப்பீல்
இது தொடர்பான விசாரணையின் முடிவில் தினகரனுக்கு ரூ25 கோடி அபராதம் விதித்தது அமலாக்கத் துறை. இந்த உத்தரவை எதிர்த்து மத்திய அமலாக்கத்துறையிடம் தினகரன் மேல்முறையீடு செய்தார்.
ரூ25 கோடி விதித்தது சரியே
ஆனால் மத்திய அமலாக்கத்துறை உயர் அதிகாரிகள் தினகரனுக்கு ரூ.25 கோடி அபராதத் தொகை விதித்தது சரியே என அதிரடி உத்தரவிட்டனர். இந்த உத்தரவை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் டிடிவி தினகரன் மேல்முறையீடு மனுத் தாக்கல் செய்தார்.>இன்று தீர்ப்பு
இதை தலைமை நீதிபதி எஸ்.கே. கவுல், நீதிபதி மகாதேவன் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் விசாரித்து வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்தது. இந்த நிலையில் தினகரனின் அப்பீல் மனு மீது தலைமை நீதிபதி தலைமையிலான பெஞ்ச் இன்று பிற்பகல் 2.15 மணிக்கு தீர்ப்பு அளிக்க இருப்பது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. tamiloneindia
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக