சனி, 7 ஜனவரி, 2017

மு.க. அழகிரி மீண்டும் தி.மு.க.வில் இணைவாரா? தி.மு.க.வின் நிலைப்பாடு என்ன?

Alagiri remember school daysசென்னை சேத்துபட்டு எம்.சி.சி.பள்ளியில் 1967-ம் ஆண்டு படித்த மாணவர்களின் நெகிழ்ச்சியான சந்திப்பில், திமுக முன்னாள் அமைச்சர் மு.க. அழகிரி கலந்து கொண்டு, தனது பசுமையான நினைவுகளை பகிர்ந்து கொண்டார்.
பள்ளிப் பருவம் என்பது ஒவ்வொரு வாழ்விலும் வசந்த காலம் எனலாம். 'மீண்டும் பள்ளிக்கு போகலாம்... நம்மை நாம் அங்கு தேடலாம்...' எனும் தங்கர் பச்சானின் 'பள்ளிக்கூடம்' படத்தில் வரும் இந்த வரிகளில் ஒளிந்து கிடப்பது, நம் ஒவ்வொருவரின் பள்ளி பருவ நினைவுகளும் தான் அந்த வகையில், சென்னை சேத்துப்பட்டு எம்.சி.சி. பள்ளியில் 50 ஆண்டுகளுக்கு முன்பு படித்த மாணவர்களின் சந்திப்பு இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் 1967- ஆம் எஸ்.எஸ்.எல்.சி. படித்த மாணவர்கள் பலர் கலந்துகொண்டு தங்களது பழைய நினைவுகளை ஒருவருக்கொருவர் பகிர்ந்துகொண்டு மகிழ்ந்தனர்.
இதற்காக ஆஸ்திரேலியா, லண்டன் உள்பட பல வெளிநாடுகளில் பணிபுரிபவர்கள் உள்பட 250 பேர் வந்திருந்தனர். இதில் அந்த பள்ளியின் முன்னாள் மாணவரான, மு.க.அழகிரி கலந்து கொண்டார். அப்போது பள்ளியில் படித்த போது நிகழ்ந்த சம்பவங்களை நினைவு கூர்ந்தனர்.


Alagiri remember school days

பின்னர் பள்ளியை சுற்றிப்பார்த்து, ஓடியாடி விளையாடிய இடங்களை ஒருவருக்கொருவர் சொல்லி மகிழ்ந்தனர். இதனிடையே தற்போது அந்த பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகளை சந்தித்து மு.க. அழகிரி தனது வாழ்த்துக்களை தெரிவித்துகொண்டார்சென்னை: அரசியலுக்கு வருவேன் என நான் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை என்று முன்னாள் மத்திய அமைச்சர் மு.க. அழகிரி நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

சென்னை சேத்துப்பட்டில் உள்ள சென்னை எம்.சி.சி. மேல் நிலைப்பள்ளியில் 1967-ஆம் ஆண்டு பயின்ற முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.:
மு.க. அழகிரி மீண்டும் தி.மு.க.வில் இணைவாரா என்பதுதான். இதில் தி.மு.க.வின் நிலைப்பாடு என்ன?  இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பள்ளியின் முன்னாள் மாணவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான மு.க.அழகிரி பேசுகையில், என் வாழ்நாளில் இப்படிப்பட்ட ஒரு நிகழ்ச்சி நடக்கும் என நான் நினைத்ததே இல்லை. எனது வாழ்வில் அரசியல் உள்ளிட்ட சூழ்நிலைகளில் பல அதிர்ச்சிகளை சந்தித்திருக்கிறேன்.

அவற்றையெல்லாம் கடந்து இன்று உங்கள் முன்னாள் நிற்பதற்கு இங்கு அமர்ந்திருக்கும் எனது ஆசிரியர்களே காரணம். இன்று நீங்கள் கொடுத்திருக்கும் இன்ப அதிர்ச்சி இனி எனக்கு மீண்டும் எப்போது கிடைக்கும்?. இதை யாராலும் தர முடியாது.
கபாலி பட வசனத்தில் சொல்ல வேண்டுமானால் இந்த கணம் -மகிழ்ச்சி-. நமது தாய், தந்தை நம்மை ஆளாக்கியிருக்கலாம். ஆனால் நாம் எங்கிருந்து வந்தோம் யாரால் பயிற்றுவிக்கப்பட்டோம் என்பதை மறக்கவே கூடாது. நான் மத்திய அமைச்சராகி முதல் கையெழுத்துபோடும் போது எனது பள்ளியின் ஆசிரியர்களை நினைவு கூர்ந்தேன் என்றார் அழகிரி. இந்த நிகழ்ச்சியில் அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா, லண்டன் உள்பட பல வெளிநாடுகளில் பணிபுரிபவர்கள் உள்பட 250 பேர் கலந்துகொண்டனர் tamiloneindia

கருத்துகள் இல்லை: