செவ்வாய், 3 ஜனவரி, 2017

பன்னீர்செல்வம் - சசிகலா யுத்தம் சிபி ஐ சென்றுதான் தீரும்?

முதல்வர் பதவியை விட்டு கொடுக்க முடியாது என பன்னீர் செல்வம் தரப்பில் இருந்து சசிகலாவிற்கு பதில் கொடுக்கப்பட்டதால் அதிர்ச்சியில் உறைந்துள்ளார் சசிகலா. இது குறித்து பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் கூறுகையில்,‘‘ முதல்வர் பன்னீர்செல்வம், முன்பு மாதிரி செயல்படாத முதல்வராக தற்போது இல்லை. ஜெயலலிதா மறைவு அறிவிப்பைத் தொடர்ந்து, சுறுசுறுப்பாக பணியாற்றி வருகிறார். தினந்தோறும் தலைமைச் செயலகத்துக்கு வரும் ஒரே முதல்வர் பன்னீர்செல்வம்தான் என, அனைத்து தலைமைச் செயலக ஊழியர்களும் பன்னீரை பாராட்டி மகிழ்கின்றனர். கோப்புகளையும் விரைந்து அனுப்புகிறார். தேவையானால், ஞாயிற்றுக்கிழமையும் வந்து வேலை பார்க்கிறார்.
இப்படி தன்னிச்சையாகவே முதல்வர் பன்னீர்செல்வம் செயல்படத் துவங்கியதுதான், சசிகலாத் தரப்பிற்கு கடும் எரிச்சலைக் கிளப்பி உள்ளது. தன்னால்தான், முதல்வர் பதவியில் இருக்கும் அண்ணன் பன்னீர்செல்வம், முதல்வர் பதவியில் இருந்து விலகி, சின்னம்மாவிடம் பொறுப்பை ஒப்படைக்க வேண்டும் என, நாலா பக்கத்திலும், அமைச்சர்கள் றெக்கைக் கட்டி அடிக்க ஆரம்பித்தனர்.
ஆனால், கூலாக இருக்கும் பன்னீர்செல்வம் எக்காரணம் கொண்டும், முதல்வர் பொறுப்பை மட்டும் விட்டுக் கொடுப்பதில்லை என்ற முடிவுக்கு வந்திருப்பதாகத் தெரிகிறது. இருந்தாலும், சசிகலா தரப்பில், அவரை முதல்வர் பொறுப்பில் இருந்து இறக்க, கடும் நெருக்கடி கொடுப்பதாகக் கூறப்படுகிறது.
ஒருவேளை, நெருக்கடிகள் இன்னும் கூடுதலானால், அவர், சட்டசபையில், நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரவும் கூடும். அ.தி.மு.க.,எம்.எல்.ஏ.,க்கள் அனைவரும் மொத்தமாக, அவருக்கு எதிராக வாக்களிக்கிறார்கள் என வைத்துக் கொள்வோம்.
அந்த சமயத்தில், அ.தி.மு.க.,வுக்கு அடுத்த நிலையில் உள்ள, தி.மு.க.,வைத்தான், அரசமைக்க கவர்னர் கூப்பிட்டாக வேண்டும். அவர்கள் பொறுபேற்கவில்லை என்றால், கவர்னர் ஆட்சி கொண்டு வரப்பட்டு, தேர்தலைத்தான் சந்தித்தாக வேண்டும். அப்படியொரு நிலைக்கு, சசிகலா ஒருபோதும் போக மாட்டார். இருக்கும் ஆட்சியையும் இழந்து விட்டு, அதனால் ஏற்படும் சிக்கல்களை அனுபவிக்க யார் அனுமதிப்பார்?
நம்பிக்கை ஓட்டெடுப்பில் பன்னீர்செல்வம் வெற்றி பெற்று விடுகிறார் என வைத்துக் கொள்வோம். அடுத்த ஆறு மாதங்களுக்கு, பன்னீர் மீண்டும் நம்பிக்கை ஓட்டு கோர வேண்டியதில்லை. அதனால், எப்படிப் பார்த்தாலும், பன்னீர்செல்வம், முதல்வராகத் தொடர்ந்துத்தான் ஆக வேண்டிய கட்டாயமும்; நெருக்கடியும் இரு தரப்புக்கும் ஏற்பட்டிருப்பதுதான் நிலைமை.
அதைத் தெரிந்து கொண்டுதான், அமைச்சர்கள் சிலரை பன்னீருக்கு எதிராகத் தூண்டி விட்டு, அவரை ராஜினாமா செய்யக் கோரியவர்கள், திடீர் என அமைதியாகி உள்ளனர்.
சரி பன்னீர்செல்வம், சசிகலாவுக்கு ஆதரவாக தனது பொறுப்பை ராஜினாமா செய்து விடுகிறார் என வைத்துக் கொள்வோம். பன்னீர்செல்வம், சசிகலா அமைச்சரவையில் இரண்டாம் இடத்தில் சில காலம் வைத்துக் கொள்ளப்பட்டு, பின் தூக்கி எறியப்பட்டால், பன்னீரின் நிலைமை என்னாகும்?
அப்படி பன்னீர்செல்வம், முதல்வராக இல்லாத நிலையில், மத்திய அரசு சும்மா இருக்குமா? ஏற்கனவே, சேகர் ரெட்டியிடம் தொடர்புடையவராக அறியப்பட்ட பன்னீர்செல்வத்துடனான தொடர்புகள் அனைத்தும், சேகர் ரெட்டியிடம் இருந்து பெறப்பட்ட தகவல்கள் மூலம், மத்திய அரசு அதை கையில் வைத்திருக்கும்போது, அதை வைத்து மத்திய அரசு கிடுக்கிப் பிடி போட்டால், பன்னீர்செல்வத்தால் தாங்க முடியுமா?
அதனால், ஆட்சியே போனாலும் பரவாயில்லை என்று, பன்னீர்செல்வம் முதல்வர் பதவியில் கடைசி வரை நீடித்துத்தான் ஆக வேண்டும். முதல்வராக இருக்கும் பன்னீர்செல்வம், சசிகலாவின் பாதம் தொட்டு வணங்குவது போன்ற காரியங்களில் ஈடுபடுகிறாரே? சசிகலாவை அடிக்கடி சந்தித்து, ஆட்சி, அதிகாரம் குறித்து விவாதிக்கிறாரே என்று, எல்லோரும் அவர் மீதான சந்தேகக் கேள்விகளை எழுப்புகின்றனர்.
கேள்விகள் சரிதான். ஆனால், பன்னீர் போன்ற, புத்திசாலிகள், பணிவு காட்டி வளர்ந்தவர்கள். அவர்களைப் போன்றவர்கள், இப்படித்தான், தலையும்; வாலும் காட்டிக் கொண்டிருப்பார்கள். இவ்வாறு அவர்கள் கூறினர்.
இதனால் தான் தி.மு.க.,கைகட்டி வேடிக்கை பார்த்து வருகிறது  லைவ்டே

கருத்துகள் இல்லை: