புதன், 13 அக்டோபர், 2010

துரோகிப் பட்டம் புலிகளே புலிகளைப் பற்றி கூறுகின்றார்கள்

நிசாந்தன் : புலிகளே புலிகளைப் பற்றி கூறுகின்றார்கள் மீண்டும் துரோகிப் பட்டம் சூட்டி கொலை வெறியாட தயாராகும் நாடுகடந்த தமிழீழக்காரர் நாடுகடந்த தமிழீழ அரசை சிதைக்க சிறிலங்கா திட்டம்: கைக் கூலிகளாக கனடா உலகத்தமிழர் இயக்க ஊழியர்கள் சிலர்! நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் இரண்டாவது அமர்வில் நடந்தது என்ன? ஏன் வெளியேறினோம்?” என்னும் தலைப்பில் “மக்கள் பிரதிநிதிகளின் மனம் திறந்த அறிக்கை” எனக் குறிப்பிடும் ஒரு அறிக்கை ரொறன்ரோவில் இருந்து வெளியாகும் பல பத்திரிகைகளில் இந்த வாரம் வெள்ளிக் கிழமையன்று வெளியாகிய அதிசயத்தை எமது உடன்பிறப்புகளாகிய தமிழ் மக்கள் யாவரும் அறிவர்.
2 குறிப்பிடப்பட்டுள்ள இந்த விடயத்தைச் சுருக்கமாகக் கூறுவதானால் தமிழ் மக்களுக்குத் தற்போது இருக்கும் ஒரேயொரு வழியாக விளங்கும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்திற்கு யாப்பு எழுதியவர்களே இந்த அமைப்பிலும் தங்களுடைய ஆதிக்கத்தைத் தொடர்ந்து செலுத்தலாம் என எண்ணியிருந்த திட்டம் தடம்புரண்டதால் இந்தப் புனிதமான அமைப்பை கொச்சைப்படுத்தி அதனை முற்றாக அழிப்பதற்கு மேற்கொண்ட நடவடிக்கையே இது எனக் குறிப்பிடலாம். இந்த மடலைத் தொடர்ந்து வாசிப்பதன் மூலம் தமிழ் மக்களாகிய நீங்கள் இந்த நாடகத்தின் பின்னணி, அதன் சூத்திரதாரிகள், அவர்களின் திட்டம், இதனால் தமிழ் மக்களுக்கு ஏற்படவிருக்கும் பாதிப்புகள் ஆகிய விடயங்களை அறிந்து கொள்ளலாம்.


 3 நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் என்னும் திட்டம் ஆரம்பிக்கப்பட்ட சமயம் அதனை ஆதரிக்காத மக்களின் பணத்துடன் தலைமறைவாகிய உலகத் தமிழர் இயக்கத்தினர், இந்தத் திட்டத்திற்கு மக்கள் மக்கள் மத்தியில் ஆதரவு அதிகரிப்பதை அவதானித்த பின்னர் அந்தத் திட்டத்தை ஆதரிப்பதைப் போலப் பாசாங்கு செய்து அதனை முற்றுமுழுதாகக் கைப்பற்றி தங்களுடைய கட்டுப்பாட்டிற்குக் கீழ் கொண்டு வருவதற்குத் திட்டமிட்டனர். இந்த அரசாங்கப் பதவிகளுக்குப் போட்டியிடுவதற்கு 15 வேட்பாளர்களை உலகத் தமிழர் இயக்கத்தின் மும்மூர்த்திகளான தமிழும், கமலும், அருமையும் தெரிவு செய்தனர். இந்தப் 15 வேட்பாளர்களின் கட்டுப்பணமான 45,000 டொலர்களையும் இவர்கள் மக்களுடைய பணத்தில் இருந்து சுரேன் என்பவர் மூலம் செலுத்தினர். இப்படியாகக் கடமைப் பட்டவர்கள் யாருடைய கைப்பொம்மையாகச் செயற்படுவார்கள் என்பதைக் குறிப்பிடத் தேவையில்லை. அந்த விடயத்திற்கு பின்னர் வருவோம்.


 4 நடைபெற்ற ஆரம்பக் கூட்டங்களில் இந்தத் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்திற்கு யாப்பு எழுதவேண்டிய தேவை எழுந்தது. இதற்கு ஒரு குழுவும் நியமிக்கப்பட்டது. அந்தக் குழுவிற்குத் தலைமைதாங்கி அந்த யாப்பை எழுதியவர்கள் யார் என்பதை அறிந்தால் ஆச்சரியப்படுவீர்கள். அவர்கள் வேறு யாருமல்ல. இடம்பெற்ற வெளிநடப்பிற்குத் தலைமைதாங்கிய திருச்செல்வமும் நோர்வே பிரதிநிதியான முரளி என்பவருமே அவர்கள். இவர்களுடைய திருகுதாழங்களைப் பின்னர் பார்ப்போம்.

5 உருத்திரகுமாரனை அசைக்க முடியாதென்பதை உணர்ந்த உலகத் தமிழர் இயக்கத் தலைவர்கள் சபாநாயகர் பதவியையும், பிரதிப் பிரதம மந்திரிப் பதவிகளையும், அமைச்சர்களை நியமிக்கும் அதிகாரத்தையும் கைப்பற்றினால் தாம் நினைத்தவாறு நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தை ஆட்டிப் படைக்கலாம் எனத் திட்டமிட்டனர். தமிழும், கமலும், அருமை என்பவரும் சகல கனடியப் பிரதிநிதிகளையும் அழைத்தார்கள். சகலரையும் அழைத்தது ஒரே நேரத்தில் அல்ல, ஒவ்வொருதரையும் தனித்தனியாக அழைத்து சபாநாயகர் பதவிக்கு திருச்செல்வத்தையும், அமெரிக்கக் கண்டத்திற்கு ஒதுக்கப்பட்ட பிரிதிப் பிரதம மந்திரிப் பதவிக்கு பாலன் இரத்தினம் என்பவரையும் ஆதரிக்குமாறு குறினர்.

இந்த பாலன் இரத்தினம் என்பவர் அருமை என்பவருடைய சகலன். இவ்வாறு அழைக்கப்பட்ட பிரதிநிதிகளில் ஒருவர் இந்த இரண்டு பேருக்கும் மக்கள் மத்தியில் ஆதரவில்லை எனக் குறிப்பிட்டு ஈசனுக்கு சபாநாயகர் பதவியைக் கொடுக்குமாற்று கேட்டதற்குக் கமல், “படிப்பறிவில்லாதவருக்கு எப்படி அந்தப் பதவியைக் கொடுப்பது” எனச் சொன்னதற்கு அந்தப் பிரதிநிதி அப்படியானால் தனக்கு அந்தப் பதவியைத் தருமாறு கேட்டுள்ளார். அதற்கு கமல், “கவலைப்பட வேண்டாம். நாங்கள் சொல்பவர்களை ஆதரியுங்கள். உங்களுக்கு ஒரு அமைச்சர் பதவி தருகின்றோம்” எனக் கூறியுள்ளார். தாம் நினைத்தவர்களுக்கு தாம் விரும்பும் பதவியை வழங்கமுடியும் என்னும் இறுமாப்பில் இந்த மும்மூர்த்திகளும் அப்போது இருந்தனர். ஆனால் அவர்களுடைய திட்டம் பலிக்கவே இல்லை. அதன் விளைவாக இவர்கள் மேற்கொண்ட செயற்பாடுகளையும் கேலிக்கூத்துகளையும் பின்னர் பார்க்கலாம்.

 6 மூன்று பிரதிப் பிரதம மந்திரிகளை நியமிக்க வேண்டும் என்னும் பிரேரணை சபையினரால் ஏற்றுக் கொள்ளப்பட்டது. இந்த நிகழ்ச்சிகளை நடைபெற்றுக் கொண்டிருந்த சமயம் சபைத் தலைவருக்கு அனுசரணை வழங்கிக் கொண்டிருந்த முரளி என்பவர் தாம் தயாரித்த யாப்பில் குறிப்பிடப் பட்டிருந்த கட்டுப்பாடுகளை எடுத்து விளக்கி பிரேரணைகளைச் சமர்ப்பிப்பதற்கு வழங்கப்பட்டிருந்த காலக்கெடுவையும் குறிப்பிட்டு அந்தத் திகதிக்குப் பின்னர் கிடைக்கப் பெற்ற பிரேரணைகள் நிகழ்ச்சி நிரலில் சேர்க்கப்படாமல் நிராகரிக்கப்பட்டதையும் ஆணித்தரமாக அறிவித்திருந்தார். இப்படிக் கூறிய அதே முரளி பின்னர் எவ்வாறு நடந்து கொண்டார் என்பது உங்களுக்கு பெரிய ஆச்சரியத்தை ஏற்படுத்தப் போகின்றது.

7 இந்த வெளிநடப்புச் செய்த குழுவினர் பிரதிப் பிரதம மந்திரிப் பதவிகள் அங்கத்தவர்களால் தெரிவு செய்யப்பட வேண்டும் எனவும் அதைப் போலவே அமைச்சர்களும் பிரதிநிதிகளால் தெரிவு செய்யப்பட வேண்டும் என்னும் பிரேரணைகளை முன்வைத்தனர். இந்தப் பிரேரணைகள் சட்டத்திற்கு மாத்திரமல்ல, முரளி என்பவர் முன்னர் கூறியதற்கும் முரணானதாக இருந்த விடயம் முக்கியமாகக் குறிப்பிடப்பட வேண்டியது. நாடாளுமன்றத்தினால் அமைச்சர்கள் தெரிவு செய்யப்படுவதாக நீங்கள் எங்காவது கேள்விப்பட்டதுண்டா?உலகத்தில் எங்குமே நடைபெறாத ஒன்றை இவர்கள் சபையில் திணிக்கப்பார்த்தார்கள். அதற்கு புதிய பிரேரணை ஒன்றையும் சமர்ப்பிப்பதற்கு முயற்சி செய்தனர். யார் அப்படிச் செய்தார்கள்? வழங்கப்பட்ட காலக்கெடுவிற்குப் பின்னர் சமர்ப்பிக்கப்படும் பிரேரணைகள் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாதென அடித்துக் கூறிய முரளி என்பவரே இந்தக் குழுவினருக்குத் தலைவரைப் போலச் செயற்பட்டார் என்பதுதான் விந்தையிலும் விந்தை.

8 தமிழ் மக்களின் ஆயுதப் போராட்டம் ஆதிக்க நாடுகள் பலவற்றின் சதியால் தோற்கடிக்கப்பட்ட பின்னர், நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தை அமைத்து அதன் மூலம் எமது உரிமைகளுக்காகப் போராடுவதைவிட வேறு வழிகள் எதுவுமே தமிழ் மக்களுக்கு இல்லை என்பது சகல மக்களாலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒரு விடயம். அதனைக் கொச்சப்படுத்தி அழித்து ஒழிப்பதற்குத் திட்டமிட்டுள்ள இந்தக் குழுவினர் பழியை மற்றவர்கள் மீது போடும் முயற்சியில் இப்பொழுது ஈடுபட்டுள்ளனர். “தனி ஒரு மனிதனின் கையில் அதிகாரத்தைக் கொடுத்ததால் கருணா மூலம் கிழக்கை இழந்தோம்” எனக் குறிப்பிட்டதான் மூலம் அவர்கள் தேசியத்தை மாத்திரமல்ல எமது தேசியத் தலைவரையே கொச்சைப்படுத்தியதை வெளிப்படையாகக் காணக்கூடியதாக இருக்கின்றது.

9 உலகத் தமிழர் பத்திரிகையில் வெளியாகியுள்ள இந்த வசனங்கள்தானா உங்களுடைய தற்போதைய நிலைப்பாடு என வெளிநடப்புச் செய்த இந்தக் குழுவினரை நாம் கேட்டுக் கொள்ளும் அதே நேரம் புனிதமான நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தை நீங்கள் முற்றுமுழுதாகக் கைகழுவி விட்டுவிட்டீர்களா என்பதைத் திட்டவட்டமாக அறிவிக்குமாறும் உங்களைக் கேட்டுக் கொள்கிறோம். இவர்களை மாத்திரமல்ல, இவர்களைப் போன்ற சகலரையும் இனங்கண்டு களையெடுக்க வேண்டிய கடமை இப்பொழுது தமிழ் மக்களாகிய உங்களுக்கு ஏற்பட்டுள்ளது.

 10 இவர்களை நாம் வெளிப்படையாகவே சில கேள்விகளைக் கேட்க விரும்புகின்றோம். அது சரி, நீங்கள் வெளிநடப்புச் செய்துவிட்டீர்கள். இனிமேல் என்ன செய்வதற்கு உத்தேசம்? நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தை ஆதரிக்கப் போகின்றீர்களா அல்லது இல்லையா? உங்களுக்கு மிரட்டல்களும் கொலை அச்சுறுத்ல்களும் விடப்பட்டதால் வெளிநடப்புச் செய்ததாகக் குறிப்பிட்ட உங்களுடைய ஆதரவாளர்கள் ஒரே வரிசையில் வீற்றிருந்த பின்னர் ஒன்றாகவே எழுந்து வெளிநடப்புச் செய்தார்களே. இந்தத் தீர்மானத்தை நீங்கள் தங்கியிருந்த விடுதியில் ஏற்கனைவே எடுத்திருந்ததை இது எடுத்துக் காட்டவில்லையா? எமக்காகவே போராடி உயிர்த்தியாகங்களைச் செய்த எமது 39,000த்திற்கும் மேற்பட்ட போராளிகளுக்கும் சிங்களப் படையினரால் அநியாயமாகப் படுகொலை செய்யப்பட்ட பல்லாயிரக் கணக்கான எமது உடன்பிறப்புகளுக்கும் நீங்கள் செய்யும் நன்றிக்கடன் இதுதானா?
 மக்கள் கொடுத்த பணத்தில் உல்லாச வாழ்க்கை நடத்திக் கொண்டிருப்பதும் அல்லாமல் அந்தப் பணத்தை வழங்கிய மக்களை ஏமாற்றுவதற்கு அவர்களுடைய பணத்தையே செலவு செய்கின்றனர் இந்தக் குழுவினர் என்பதை மக்கள் அறிந்து கொள்ள வேண்டியது இன்றைய காலகட்டத்தின் முக்கியமான தேவையாகின்றது. மக்களின் பணத்தைக் கொண்டு செய்யப்பட்ட முதலீடுகளின் விபரங்களும் அவற்றை அனுபவித்துக் கொண்டிருப்பவர்களுடைய பெயர்ப் பட்டியலும் வெகுவிரைவில் வெளிவரும் என்பதை இந்தத் தருணத்தில் அறிவிக்கும் அதே நேரம் தயவு செய்து உங்களுடைய பித்தலாட்டங்களைக் கைவிட்டு இனிமேலாவது உங்களுடைய கையிருப்பில் இருக்கும் மக்களுடைய பணத்தை வாடிவதங்கிக் கொண்டிருக்கும் எமது மக்களுக்கு வழங்கி போகுமிடத்திற்காவது புண்ணியத்தைத் தேடுங்கள்

கருத்துகள் இல்லை: