யாழ்.மாவட்டப் பாடசாலைகளில் கல்வி கற்ற 278 மாணவர்கள் கல்வியை இடைநிறுத்தியுள்ளனர்
யாழ்.மாவட்டப் பாடசாலைகளில் கல்வி கற்று வந்த 278மாணவர்கள் இவ்வாண்டில் மட்டும் கல்வியை தொடரமுடியாமல் இடை நிறுத்தியுள்ளதாக யாழ்.அரச அதிபர் திருமதி இமெல்டா சுகுமார் தெரிவித்துள்ளார்.சர்வதேச சிறுவர்தின விழா வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்றது. இவ்விழாவில் கலந்துகொண்டு உரையாற்றும் போது அவர் இதனை தெரிவித்தார். அவர் மேலும் உரைநிகழத்துகையில்த சிறுவர்களுக்கு சமுதாயத்தில் முன்னிலை வழங்கப்பட வேண்டும் எனவும் அத்தோடு கிராமங்களிலும் நகரங்களிலும் சிறுவர் பராமரிப்பு நிலையங்கள் ஆரம்பிக்கப்பட்டு இயங்கி வருகின்றது எனவும் தெரிவித்தார்.இருந்தபோதும் இவ்வாண்டில் மட்டும் 77சிறுவர்கள் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளார்கள். இதில் சம்பந்தப் பட்டவர்கள் வயது கூடியவர்கள் என்பது மிகவும் வேதனைக்குரிய விடயமாகும். இவைதவிர 246 சிறுவர்கள் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் என வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர். பெற்றோர் சட்டவிரோத மான முறையில் திருமணத்தில் இணைந்து கொண்டதால் 300இற்கு மேற்பட்ட சிறுவர்களுக்கு பிறப்பத்தாட்சிப் பத்திரங்கள் இல்லை .மேலும் இதில் பெற்றோர்களை இழந்த சிறுவர்களும் உள்ளடக்கப்படுகின் றார்கள். இத்தகைய நிலைக்குப் பெற்றோர்களின் அறியாமையே காரணமாகும். நல்லதொரு சமுதாயத்தை உருவாக்க வேண்டியது பெற் றோரினதும் பாடசாலை ஆசிரியர்களினதும் பணியாகும் என அவர் தனது உரையில் மேலும் தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக