கனடாவின் ஆர் சீ எம் பி பொலிஸ் பிரிவு ஒன்றை இலங்கையில் ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாக கனேடிய அரச தரப்பு செய்திகள் தெரிவிக்கின்றன. ரொறன்டோ ஸ்டார் இணையதளம் இந்த செய்தியை வெளியிட்டுள்ளது. |
இலங்கையில் இருந்து கனடா செல்லும் தமிழ் அகதிகளை கட்டுப்படுத்தும் பொருட்டு இலங்கை அரசாங்கத்துடன் இணைந்து இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பொலிஸ் பிரிவின் முதற் செயற்பாடாகவே, தாய்லாந்தில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னர் 155 இலங்கை அகதிகள் கைது செய்யப்பட்டமை கருதப்படுகிறது. இதேவேளை இலங்கையில் அச்சமான சூழ்நிலை இருப்பதாக கனடாவுக்கு வரும் இலங்கை அகதிகள் கூறுவதில் உண்மை இல்லை என இலங்கையின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜி எல் பீரிஸ் தெரிவித்துள்ளார் கனடாவுக்கு வரும் இலங்கைக்கு வரும் அகதிகள், பொருளாதாரத்தை மையமாககொண்டு வரும் அகதிகள் என தெரிவித்துள்ள அவர், கனடா, அவுஸ்திரேலியா பின்பற்றும் நடைமுறையை பின்பற்றவேண்டும் என கேட்டுள்ளார். கொழும்பிலுள்ள கனடிய உயர்ஸ்தானிகராலயம் அண்மையில் மேற்கொண்ட ஆய்வானது அமைச்சர் கூறியிருப்பதில் சில உண்மையிருப்பதை நிரூபிப்பதாக அமைந்துள்ளது. இலங்கையில் உள்நாட்டு யுத்தம் முடிவுக்கு வந்து ஒரு வருடத்தில் அமைதி திரும்பியிருக்கிறது. ஆயினும், தமிழர்கள் இலங்கையை விட்டு தொடர்ந்து வெளியேறி வருகின்றனர். 2009 மே இல் இலங்கையில் உள்நாட்டு யுத்தம் முடிவுக்கு வந்த பின்னர் கனடாவில் புகலிடம் வழங்கப்பட்ட இலங்கைத் தமிழர்களின் கோப்புகளை கொழும்பிலுள்ள கனடிய உயர்ஸ்தானிகராலயம் ஆய்வு செய்தது. இவற்றில் அரைவாசிக்கு மேற்பட்ட அகதிகள் இலங்கைக்குத் திரும்பி வந்துள்ளனர். கனடிய பிரஜாவுரிமையும் கடவுச்சீட்டுகளையும் பெற்றுக்கொண்ட பின்னர் அவர்கள் இலங்கைக்குத் திரும்பி வந்திருக்கின்றார்கள். இந்த விடயமானது நிச்சயமாக சிந்திக்க வேண்டியதொன்றாகும் என்று கனடிய குடிவரவுத்துறை அமைச்சர் ஜாஸன் கெனோய் அண்மையில் புதுடில்லியில் வைத்து "த ஸ்ரார்" க்கு அளித்த பேட்டியில் கூறியிருந்தார். பாதுகாப்பான அந்தஸ்தைப் பெற்றுக்கொண்ட பலர் தமது சொந்த நாட்டுக்குத் திரும்பி வந்துள்ளனர். எமது புகலிட முறைமையானது பரந்தளவில் துஷ்பிரயோகப்படுத்தப்படுகிறதென நாம் நம்புகிறோம் என்றும் அவர் கூறியிருந்தார். கனடாவிற்கு குடியேற்றவாசிகள் செல்வதைத் தடுக்கும் புதிய முயற்சியாக கொழும்பில் கனடா அலுவலகமொன்றை திறக்கவுள்ளதாக அதிகாரிகள் கூறியுள்ளனர். |
சனி, 16 அக்டோபர், 2010
RCMP in Lanka .கனடாவின் பொலிஸ் பிரிவு இலங்கையில் நிறுவப்படவுள்ளது
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக