வடக்கில் இஸ்லாமிய கலை விழா
யாழ்ப்பாணம் கோப்பாய் ஆசிரிய கலாசாலையின் முஸ்லிம் மஸ்லிஸ் ஏற்பாடு செய்த இஸ்லாமிய கலை விழா கலாசாலையின் ரதி லக்ஷ்மி மண்டபத்தில் வெகு விமர்சையாக இடம்பெற்றது. கலாசாலை அதிபர் வே.கா.கணபதிப்பிள்ளை தலைமையில் இடம் பெற்ற இந்நிகழ்வில் அதிதிகளாக கைத்தொழில் வர்த்தக அபிவிருத்தி அமைச்சர் ரிஷாத் பதியுத்தீன், வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஹூனைஸ் பாறூக் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்நிகழ்வின் போது ஆசிரிய மாணவி சுஜானா எழுதிய செதுக்கப்படாத சிற்பங்கள் கவிதைத் தொகுதி ஒன்றும் வெளியிட்டு வைக்கப்பட்டது. இந்நூலின் முதற்பிரதியை நூலாசிரியரின் தாயாருக்கு அமைச்சர் ரிஷாத் பதியுத்தீன் வழங்கி வைத்தார். இங்கு மாணவ ஆசிரியர்களின் வில்லுப்பாட்டு, நடனம், பாடல், நாடகம் உட்பட பல்வேறு கலை நிகழ்ச்சிகளும் இடம்பெற்றன. அத்துடன் இதன்போது அதிதிகளுடன், கலாசாலை அதிபர் மற்றும் ஆசிரியர்களும் கௌரவிக்கப்பட்டனர். 30 வருடங்களின் பின்னர் யாழில் இஸ்லாமிய கலை விழா இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக