போலி சந்தனக் கட்டைகளைக் காட்டி லட்சக் கணக்கில் வசூல் செய்து மோசடியில் ஈடுபட்ட வனத்துறை ஊழியர் உட்பட 8 பேர் கைது செய்யப்பட்டனர்.
உடுமலை அருகே சந்தன மரங்களை வெட்டி பழனி வழியாக ஒரு கும்பல் கடத்தி வருவதாக வனத்துறைக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து வனத்துறையினர் மற்றும் போலீசார், மாறுவேடத்தில் சென்று வனப்பகுதியில் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது அவர்களை வியாபாரிகள் என நினைத்து, சந்தனக் கட்டைகள் என காண்பித்து மோசடி கும்பல் பண பேரம் நடத்தியுள்ளது. இதையடுத்து மறைந்திருந்த போலீசார் வனத்துறை ஊழியர் ஒருவர் உட்பட 8 பேரை பிடித்தனர். மேலும் இவர்கள் பயன்படுத்திய இரண்டு இரு சக்கர வாகனங்கள், மரக்கட்டைகள் போன்றவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். தப்பி ஓடிய 2 பேரையும் பிடிக்க போலீசார் தீவிர பணியில் ஈடுபட்டுள்ளனர்.
அவர்களிடம் நடத்திய விசாரணையில் சாதாரண மரங்களை சந்தனக் கட்டைகள் எனக் கூறி விற்பனை செய்தது தெரிய வந்தது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக