அமெரிக்க வர்த்தகர்கள் யாழ்ப்பாணத்தில் முதலீடு: நிலைமையை ஆராய விஷேட குழு இன்று விஜயம்
முப்பது பேர் அடங்கிய அமெரிக்க வர்த்தகத் தூதுக்குழு நேற்று இலங்கை வந்தடைந்தது.
அமெரிக்க அரச மற்றும் தனியார் வர்த்தகப் பிரதிநிதிகளைக் கொண்ட இந்த தூதுக்குழு இன்று (12) வட மாகாணத்திற்கு, விஜயம் செய்யவு ள்ளது. யாழ்ப்பாணத்தை இன்று காலை சென்றடையும் மத்திய மற்றும் தெற்காசியாவுக்கான அமெரிக்க வர்த்தக அமைப்பின் (Unitetd State Trade Representative- USTR) பிரதிநிதி மைக்கல் மெலன் தலை மையிலான உயர்மட்ட அமெரிக்க வர்த்தக தூதுக்குழுவினருக்கும் வட மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜி. ஏ. சந்திரசிறிக்கும் இடையிலான விஷேட சந்திப்பு ஒன்று இடம்பெறவுள்ளது. யாழ்ப்பாண பொது நூலகத்தில் வட மாகாண ஆளுநர் தலைமையில் நடைபெறவுள்ள இந்த சந்திப்பின் போது வட மாகாணத்திலுள்ள முதலீட்டு வாய்ப்புக்கள் குறித்தும், வடபகுதியில் முதலீடு செய்வது குறித்தும் விரிவாக ஆராயப்படவுள்ளன. இலங்கை அரசாங்கத்தின் சார்பில் அமெரிக்காவுக்கான இலங்கை தூதுவர் ஜாலிய விக்கிரமசூரிய தலைமையில் அமெரிக்காவிலுள்ள இலங்கை தூதரகத்தின் வர்த்தக பொறு ப்பாளர் நிமல் கருணாதிலக்க, இல ங்கை வர்த்தக திணைக் களத்தின் பணிப்பாளர் நாயகம் ஜி. ரி. சேனாதீர, இலங்கை வெளி விவகார அமைச்சு, இலங்கை முதலீட்டுச் சபை ஆகியவற்றின் பிரதி நிதிகளும் இன்று யாழ்ப்பாணத்திற்குச் செல்லவுள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக