வெள்ளி, 15 அக்டோபர், 2010

TATA to Harvard ஹார்வர்ட் பல்கலை.க்கு ரூ 220.6 கோடி நன்கொடை வழங்கிய டாடா!

ஹார்வர்டு பல்கலைக் கழக வரலாற்றில் இதுவரை யாரும் தராத அளவுக்கு ரூ 220.6 கோடியை நன்கொடையாக அளித்துள்ளது டாடா குழுமம்.

வெளிநாடுகள் மூலம் இந்த அளவு பெரும் தொகையை இப்போதுதான் முதல்முறையாகப் பெறுகிறது ஹார்வர்ட்.

அமெரிக்காவில் உள்ள ஹார்வர்டு பல்கலைக்கழகம் சர்வதேச அளவில் தரமான கல்விக்குப் புகழ்பெற்றது. 102 ஆண்டு பழமைமிக்கது.

இந்த நிறுவனத்துக்கு சில தினங்களுக்கு முன் மகிந்திரா அண்ட் மகிந்திரா குழும துணைத் தலைவர் ஆனந்த் மகிந்திரா 10 மில்லியன் டாலர் (ரூ 44.1 கோடி) நன்கொடையை வழங்கினார். தனது தாயார் இந்திரா மகிந்திராவின் நினைவாக அவர் இதனை வழங்கினார். இது மிகப்பெரி்ய நன்கொடையாக அப்போது பார்க்கப்பட்டது.

இப்போது டாடா குழுமத்தின் சர் தோரப்ஜி டாடா ட்ரஸ்ட் மற்றும் டாடா கல்வி மேம்பாட்டு அறக்கட்டளை மூலம் 50 மில்லியன் டாலர் (ரூ 220.6 கோடி) நன்கொடை வழங்கப்பட்டுள்ளது.

ஹார்வர்டு பல்கலைக்கழக வளாகத்தில் புதிய கல்வி மையம் மற்றும் குடியிருப்பு கட்டடம் கட்ட இந்தத் தொகை வழங்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்துள்ளது.

டாடா சன்ஸ் தலைவர் ரத்தன் டாடாவுக்கும் ஹார்வர்டு பல்கலைக் கழகத்துக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. 1975-ம் ஆண்டு இந்த பல்கலைக் கழகத்தின் ஸ்கூல் ஆப் பிஸினஸில் நிர்வாகவியல் படிப்பை முடித்தவர் ரத்தன் டாடா. 1995-ல் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தின் மிக உயர்ந்த சாதனையாளர் விருதினையும் அவர் பெற்றுள்ளார்.

இந்த பல்கலைக்கழகத்தின் 102 ஆண்டு கால வரலாற்றில் வெளிநாட்டு நிறுவனம் ஒன்று இவ்வளவு பெரிய தொகையை நன்கொடையாக அளிப்பது இதுவே முதல்முறை.

புதிதாக கட்டப்படும் வளாகத்துக்கு டாடா ஹால் என்று பெயர் சூட்டப்போவதாகவும், 2013-ல் இது செயல்படத் துவங்கும் என்றும் ஹார்வர்டு பல்கலைக் கழகம் அறிவித்துள்ளது.
பதிவு செய்தவர்: கேள்வி
பதிவு செய்தது: 15 Oct 2010 6:59 pm
என்னய்யா! இந்த டாடா குழுமம் பணம். நீங்க என்ன வேணா செய்யலாம் அதை செய்துடீங்க. கொஞ்சம் யோசித்து பார்த்த அந்த பணத்தை இந்தியாவிலே எவ்வளவு மாநகாராட்சி பள்ளி கூடங்கள் தலைக்கு மேலே கூரை இல்லாமல் எழுதுவதற்கு பலகை, சாக்கு, போன்ற அடிப்படையான வசதி கூட இல்லாமல் வாடும் ஆயிரக்கணக்கான பள்ளிகூடங்கள் இருக்கும் பொது எப்படி ஐயா உங்களுக்கு உலகத்திலயே மிக வசதி கொண்ட பல்கலை கழகத்துக்கு இவ்வளவு பெரிய தொகையை கொடுக்க மனசு வந்தது. நீங்கள் சேர்த்த பணம் இந்தியாவில் சேர்த்த பணம் அதை அனுபவிக்க வேண்டிய மக்கள் இந்தியர்கள்.

பதிவு செய்தவர்: karthik
பதிவு செய்தது: 15 Oct 2010 6:56 pm
Tata Institute of Fundamental Research Tata Institute of Social Sciences Indian Institute of Science Nettur Technical Training Foundation R D Tata Technical Education Centre Jamshedpur National Centre for Performing Arts Tata Management Training Centre Tata Memorial Hospital

பதிவு செய்தவர்: inian
பதிவு செய்தது: 15 Oct 2010 6:54 pm
டாக்ஸ் கட்டாமல் கணக்கை இதுபோல் சரி செய்ய டாடா,மகேந்திரா போன்றோர் ஹார்வர்டுக்கு பணம் கொடுக்க மனம் இருக்கிறது! எம் இந்தியர்கள் வறுமைக் கோட்டுக்கு கீழே தவிப்பவர்களுக்கு உதவ முன் வராதது வேடிக்கையாக இருக்கிறது! பணம் படைத்தவர்கள் தெய்வத்திற்க்கு உண்டியலிலும், இது போன்ற காரியங்களுக்கு செலவழிப்பது வேதனைக்குறியது!

பதிவு செய்தவர்: பொதுஜனம்
பதிவு செய்தது: 15 Oct 2010 6:45 pm
நம் நாட்டில் உள்ள வசதியற்ற மாணவர்களின் படிப்பிற்கு இந்த தொகையை கொடுத்து அவர்கள் வாழ்வில் ஒளி ஏற்றி இருக்கலாமே..... வெற்று பந்தாவுக்காக அயல் நாட்டிற்கு நன்கொடை கொடுப்பது ?????

பதிவு செய்தவர்: ஆசாத்
பதிவு செய்தது: 15 Oct 2010 6:39 pm
ிந்தியாவில் எத்தனையோ வறிய மானவர் கல்வியினை தொடர நிதி இல்லாது இருக்கின்றனர். இந்த மனிசர் ஹாவாய் பல்கலை கழகத்திற்கு குடுக்கின்றாரே. அதுசரி வறிய மாணவர்கலுக்கு கொடுத்தால் பேரும் புகழும் வராதே

பதிவு செய்தவர்: டுகுன்னி
பதிவு செய்தது: 15 Oct 2010 6:37 pm
டே நாதாரி. நம்ம வூர்ல காலய்ஜய் இல்லையா என்ன?

பதிவு செய்தவர்: Unmai
பதிவு செய்தது: 15 Oct 2010 6:16 pm
சும்மா கத உடுரனுங்க.. இங்க அவன் அவன் 200 or 300 million dollars கொடுகுரனுங்க.. இவன் கொடுத்தது தான் அதிகமுன்னு பொய் சொளுரானுக்ன.. இவன் இந்தியன் உனிவேர்சிட்டி உகு கொடுகவேன்டியாய்த்து தானே.. indiavil buisness. US uku donanation. பன்னாட ஹோர்வர்ட் ரிச் உனிவேர்சிட்டி தான்.

பதிவு செய்தவர்: indian
பதிவு செய்தது: 15 Oct 2010 5:59 pm
இந்திய ஆராய்ச்சி மாணவர்கள் வளர்ச்சிக்கு உதவினால் மிகவும் நன்றாக இருக்கும்.

பதிவு செய்தவர்: பிர்லா
பதிவு செய்தது: 15 Oct 2010 5:52 pm
டாட்டா பேரில் இந்தியாவில் scholarship trust ஏற்கனவே நெறைய இடங்களில் இருக்கிறது. இப்போது அவன் ஹார்வர்ட்கு கொடுக்கிறான். அவ்ளோ தான். அவன் காசு அவன் என்ன வேணும்னாலும் பண்ணலாம். இங்க தான் செலவு பண்ணனும்னு எந்த அவசியமு கெடயாது

கருத்துகள் இல்லை: