நாடு கடந்த தமிழீழத்தார்
தமக்குள் களையெடுப்புக்களை நடத்தப் போகின்றார்களாம்
நாடு கடந்த தமிழீழம் என்று புலம் பெயர் நாடுகளில் தமக்குள் தாமே தேர்தல் நடாத்தி தாமே உறுப்பினர்களை தெரிவு செய்து கொண்டனர். இதற்காக பல ஆயிரம் டாலர்களையும் செலவிட்டனர். இதற்கு பின்புலமாக மேற்குலகமும் மறைமுகமாக நிற்கின்றது என்பதை வரலாறு என்றோ ஒருநாள் நிரூபித்து நிற்கும். நாடு கடந்த தமிழீழ முன் மொழிவை வைத்தவர் பிரபாகரனின் முளம் தள் இட்ட மரணத்தின் பின்னான தமிழீழ விடுதலைப் புலிகளின் தற்போதைய தலைவர் கேபி ஆவார். இவர் தற்போது இலங்கை அரசின் விருந்தாளியாக இருப்பது வேறு விடயம். கேபி இலங்கை அரசின் விருந்தாளியாக்கப்பட்ட பின்பு 'அமெரிக்க' உருத்திரகுமாரன் தலைவர் பொறுப்பை உத்தியோகபற்றற்ற முறையில் ஏற்றுக் கொண்டார்.
இதனைத் தொடர்ந்து தேர்தல், பிரதம பதவி என்று எல்லாவற்றையும் தானே ஏற்றுக் கொண்டார். பதவி, பணத்திற்கு அலையும் இக் கூட்டத்திற்குள் தற்போது பலத்த குத்து வெட்டு. தொடர்ந்து இரு குழுக்களாக பிரிந்து கொண்டனர். இரு குழுக்களும் ஒருவரையொருவர் துரோகிகள் என்று சொல்லி கொள்கின்றனர். இப்ப என்னடாவென்றால் ஒரு குழு மற்ற குழுவை கை நீட்டி களையெடுக்கப் போகின்றார்கள் என்று புறப்பட்டு விட்டனர். இதன் தொடர்ச்சியாக கனடாவில் தமிழ் கடைகளின் சுவர்களில் களையெடுப்பு பற்றிய சுவரொட்டிகளும், துரோகிகளின் பெயர் விபரமும் வெளியாகியுள்ளது. இது நல்ல கூத்துதான். புலியும் புலியும் சண்டையாம்... களையெடுப்பாம்.... மனிதர்கள் நாங்கள் விலத்தி நின்று பார்ப்போம்.
25 வருடங்களாக இவர்களைப்பற்றி நாங்கள் கூறி வருவதை கேட்காமல் தொடர்ந்தும் பகுத்தறிவின்றி இவர்கள் பின்னால் திரியும் ஒரு கூட்டம் இந்த களையெடுப்பு 'யுத்தம்’ இன் பிறகாவது உண்மை நிலையை உணருவார்களா? என்று பார்ப்போம். ஏமாளிகளாக நீங்கள் இருக்கும் வரை ஏமாற்றுபவர்கள் இருந்து கொண்டுதான் இருக்கப் போகின்றார்கள். ஈழத்திலிருக்கும் தமிழ் மக்கள் யாரும் இந்த நாடு கடந்த தமிழீழம், தேர்தல், பிரதம மந்தரி, தொடர்ந்த குத்து வெட்டு எதனையும் பற்றியும் அக்கறைப்படுவதும் இல்லை, காதில் போட்டுக் கொள்ளதும் இல்லையாம்.
(தானா மூனா)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக