வியாழன், 14 அக்டோபர், 2010

ஆழ ஊடுருவித் தாக்குதல் தொடர்பில் இலங்கை இராணுவம் சார்க் நாடுகளுக்கு பயிற்சி


ஆழ ஊடுருவித் தாக்குதல் மேற்கொள்ளும் யுத்த உத்தி தொடர்பில் இலங்கை இராணுவம் சார்க் நாடுகளின் படையினருக்கு பயிற்சிகளை வழங்குவதற்கு தீர்மானித்துள்ளதாக திவயின பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
இலங்கை இராணுவத்தினரின் ஆழ ஊடுருவித் தாக்கும் திறமை உலகம் முழுவதிலும் பிரபல்யம் அடைந்துள்ளதாக பத்திரிகையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
எதிர்வரும் நாட்களில் சார்க் நாடுகளைச் சேர்ந்த இராணுவ வீரர்கள் குழுக்கள், ஆழ ஊடுருவித் தாக்குதல் நடாத்தும் பயிற்சிகளை பெற்றுக் கொள்ள இலங்கைக்கு விஜயம் செய்வார்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது.
இந்தத் தாக்குதல் உத்தி தொடர்பில் அமெரிக்காவும் இலங்கையிடம் பயிற்சிகளைப் பெற்றுக் கொள்ள கவனம் செலுத்தி வருவதாக சிரேஸ்ட இராணுவ உத்தியோகத்தர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
அதேவேளை, இலங்கையில் போர் உக்கிரமாக நடைபெற்ற 2008,2009 ம் ஆண்டுக் காலப்பகுதிகளில் ஆழ ஊடுருவித் தாக்கும் திறமை படைத்த இலங்கை இராணுவம் தமிழர் செறிந்து வாழும் பிரதேசங்களில் ஊடுருவி நாடாளுமன்ற உறுப்பினர்கள், மத குருமார்கள், அரச ஊழியர்கள், அப்பாவிப் பொதுமக்கள் என பல எண்ணிக்கையானோரைப் படுகொலை செய்திருந்தமை இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.

கருத்துகள் இல்லை: