புலிகளுக்கெதிரான யுத்தத்தின் போது இலங்கை மேற்கொண்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பான விடயங்களில் சர்வதேசத்தை அமைதிப்படுத்துவதில் பாரிய பங்காற்றியவர் தயான் ஜயதிலக என்பது குறிப்பிடத்தக்கது. ஆயினும் தனிப்பட்ட ரீதியில் அவர் தமிழ் மக்களின் உரிமைகள் தொடர்பில் சாதகமான அபிப்பிராயத்தைக் கொண்டிருந்தார். அதன் காரணமாக ஜனாதிபதிக்கும் அவருக்குமிடையில் ஏற்பட்ட முறுகல் காரணமாக கடந்த வருடம் அவரது பதவி பறிக்கப்பட்டது. ஆயினும் அவரது சேவை தற்போதைய நிலையில் அத்தியாவசியமாக தேவைப்படும் காரணத்தால் அவர் மீண்டும் வெளிவிவகார அமைச்சின் பணிக்கு அழைக்கப்பட்டுள்ளார். தற்போதைக்கு பிரான்சில் தூதுவராக இருக்கும் லயனல் பெர்னாண்டோ விரைவில் ஓய்வுபெறவுள்ள நிலையில் அவரது இடத்துக்கே தயான் ஜயதிலக நியமிக்கப்படவுள்ளார். அத்துடன் இத்தாலியில் இருக்கும் தற்போதைய இலங்கைத் தூதுவர் ஹேமந்த வர்ணகுலசூரிய அடுத்த மாதம் தனது பணியை நிறைவுசெய்யவுள்ள நிலையில் அவரது இடத்துக்கு கொரியாவிற்கான முன்னை நாள் தூதுவராக கடமையாற்றிய அசித பெரேரா நியமிக்கப்படவுள்ளார். சர்வதேச மட்டத்தில் வலுத்து வரும் புலம் பெயர் தமிழரின் அரசியற் செயற்பாடுகளை முடக்குவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பதே அவர்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் முதன்மைப் பணியாகும் என்றும் வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் தெரிவித்துள்ளார். |
வியாழன், 14 அக்டோபர், 2010
தயான் ஜயதிலக, பிரான்ஸ் நாட்டின் தூதுவராக விரைவில் நியமனம்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக