வெள்ளி, 15 அக்டோபர், 2010

இந்து – பௌத்த ஆய்வரங்கு : பேராசிரியர் பத்மநாதன் ஜப்பான் பயணம்!

கிழக்கு மற்றும் தென்கிழக்காசிய நாடுகளின் நாகரிக மேம்பாட்டில் இந்து சமயமும் பௌத்த சமயமும் கொண்டிருந்த பங்கு எனும் தலைப்பில் ஜப்பானில் நடைபெறுகின்ற ஆய்வரங்கில் கிழக்கு பல்கலைக்கழகத்து கலை,பண்பாட்டு பீடத்து ஆலோசகர் பேராசிரியர் சி. பத்மநாதன் கலந்து கொள்ளவுள்ளார்.

இலங்கையில் இந்து சமயம் தொடர்பாகவும் வரலாற்று ரீதியாக இந்து சமயத்திற்கும் பௌத்த சமயத்திற்கும் இடையில் ஏற்பட்ட பரஸ்பர சமய பண்பாட்டு தொடர்புகள் ரீதியாகவும் பேராசிரியர் பத்மநாதனின் ஆய்வுக்கருத்துக்கள் இடம்பெறும்.
குறிப்பாக நவீன காலத்துக்கு முற்பட்ட விடயங்களில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
ஜப்பானின் தலைநகரிலுள்ள டோக்கியோ, ஒசாக்கா ஆகிய இரு பல்கலைக்கழகங்களிலும் எதிர்வரும் 17 ஆம் திகதி முதல் 25 ஆம் திகதி வரை நடைபெறவுள்ள ஆய்வுக் கருத்தரங்குகளில் ஜப்பானிய மகா சங்கப் பிரதிநிதிகளும் பல்கலைக்கழக அறிஞர்களும் அரசாங்க அதிகாரிகளும் கலந்து கொள்ளவுள்ளனர்.
இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தும் குழுவில் பேராசிரியர் சி. பத்மநாதனுடன் ருகுணு பல்கலைக்கழகத்தின் உபதுணைவேந்தரும் இலங்கை அரசாங்கத்தின் சார்பில் அமைச்சர் தினேஸ்குணவர்த்தனவும் கலந்து கொள்ளவுள்ளார்கள்.
இந்நிகழ்வுக்கு ஜப்பான் நிறுவனமும் ஜப்பான் கொங்கஞ்சி நிறுவனமும் இணைந்து அனுசரணை வழங்குகின்றன.

கருத்துகள் இல்லை: