புதன், 13 அக்டோபர், 2010

20 வருடங்களின் பின்னர் மண்டைதீவுப் பகுதியில் நெற் பயிர்ச் செய்கை


சுமார் 20 வருடங்களுக்குப் பின்னர் மண்டைதீவுப் பகுதியில் நெற்பயிர்ச் செய்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. கடந்த காலங்களில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலை காரணமாக மிகவும் பாதிக்கப்பட்ட பிரதேசமாக இன்றுவரையும் உள்ளது மண்டைதீவுக் கிராமமே. அப் பகுதிக்கு இன்றுவரை மின்சாரம்இ குடிநீர் என்பன வழங்கப்படாமல் அப் பகுதியில் வாழும் மக்கள் சொல்லொண்ணாத் துன்பங்களை அனுபவித்து வருகின்றனர். அத்துடன் விவசாயத்தை நம்பியுள்ள மக்கள் தங்களின் வாழ்வாதாரத்திற்கு பாய் இழைத்தும் அன்றாடக் கூலி வேலை செய்யும் தங்களின் வாழ்க்கையை நடத்தி வந்தனர். தற்போது யு.என்.எச்.சி.ஆர். நிறுவனம் இங்கு வாழும் மக்களின் நிலையினைக் கருத்தில் கொண்டு விவசாயம் செய்யத் தேவையான பொருட்களை வழங்கியிருந்தது. மேற்படி உதவிகளைக் கொண்டு இன்று கிராஞ்சிக்குளம் பகுதியில் சுமார் 600 பரப்புக் கொண்ட நிலத்தில் நெற் செய்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அததுடன் ஒருவருக்குரிய 20 பரப்புக்கு 60 கிலோக்கிராம் விதை நெல்லை யாழ்ப்பாண கமநல சேவைகள் திணைக்களமும் மானியத்தினை வேலணை கம நல சேவைத் திணைக்களமும் வழங்கியுள்ளன. இதனைக் கொண்டே 39 விவசாயிகள் இந்த 600 பரப்புக் கொண்ட நிலப் பரப்பில் தலா 20 பரப்புப் படி நெற் செய்கையினை ஆரம்பித்துள்ளனர். இது இவ்வாறிருக்க அடுத்த ஆண்டு மண்டைதீவு பிரதான வீதியின் அருக்கில் உள்ள வயல்களில் 200 பரப்பு நிலப் பரப்பில் நெற்செய்கையினை ஆரம்பிக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக மண்டைதீவு விவசாய சம்மேளனத் தலைவர் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை: