கொழும்பு நகரை தாய்வான் மற்றும் ஹொங்ஹொங் நாடுகளுக்கு விற்க அரசாங்கம் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க குற்றஞ்சாட்டியுள்ளார். |
இலங்கை அரசாங்கம், கொழும்பு நகரை நிர்வகிப்பதற்கு 5 பேர் கொண்டு அதிகார சபை ஒன்றை அமைக்கவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். கொழும்பில் உள்ள பல காணிகளை தாய்வான் மற்றும் ஹொங்கொங் ஆகிய நாடுகளின் நிறுவனங்களுக்கு பகிர்ந்தளிக்கும் வகையில் இந்த அதிகாரசபை செயற்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். கொழும்பு நகர சபையை எதிர்காலத்தில் ஐக்கிய தேசிய கட்சி தேர்தலி;ல் கைப்பற்ற முடியாதவாறே இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார். இதேவேளை கொழும்பில் உள்ள தமிழ் முஸ்லிம் மக்களின் வாக்குகளை சிதறடிக்கும் நடவடிக்கைகளையும் அரசாங்கம் மேற்கொண்டு வருவதாக ரணில் குற்றம் சுமத்தியுள்ளார். எனினும் அரசாங்கம் இதனை மறுத்துள்ளது. ஐக்கியதேசியக்கட்சியின் குற்றச்சாட்டை மறுத்துள்ள அரசாங்கம், இது வீணே கற்பனை என்றும் குறிப்பிட்டுள்ளது. |
செவ்வாய், 12 அக்டோபர், 2010
கொழும்பு நகரை தாய்வானுக்கு விற்க அரசாங்கம் முயற்சி: ரணில்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக