சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவிக்கும் போது எச்சரிக்கையுடன் பேசுமாறு, காங்கிரஸ் பொதுச்செயலர் ராகுலுக்கு, பா.ஜ., எம்.பி., மேனகா அறிவுரை கூறியுள்ளார்.
ஆர்.எஸ்.எஸ்., அமைப்பையும், சிமி பயங்கரவாத இயக்கத்தையும் காங்கிரஸ் பொதுச்செயலர் ராகுல், சில நாட்களுக்கு ஒப்பிட்டு கருத்து தெரிவித்திருந்தார். இந்த கருத்துக்கு பா.ஜ., கடும் ஆட்சேபம் தெரிவித்தது.
இந்நிலையில், உத்தர பிரதேசத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் பார்வையிட்டு, ஆய்வு செய்து வரும் பா.ஜ., எம்.பி., மேனகா செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் கூறியதாவது: ஆர்.எஸ்.எஸ்., அமைப்பையும், சிமி பயங்கரவாத இயக்கத்தையும் ஒப்பிட்டு ராகுல் கூறிய கருத்து குழந்தைதனமானது. இதுபோன்ற சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவிக்கும்போது, வார்த்தைகளில் கவனம் தேவை. இனி அவர் மிகுந்த எச்சரிக்கையுடன் கருத்துக்களை கூற வேண்டும் என்றார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக