பொதுநலவாய நாடுகளின் விளையாட்டுப் போட்டி: இறுதிநாள் நிகழ்வில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கெளரவ அதிதி
இந்தியாவில் நடைபெறும் பொதுநல வாய நாடுகளின் விளையாட்டுப் போட்டியின் இறுதி நாள் நிகழ்வில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கெளரவ அதிதியாகக் கலந்துகொள்ளவுள்ளார். இந்திய அரசாங்கத்தின் அழைப்பினை ஏற்று இந்தியாவிற்கான விஜயத்தை மேற்கொள்ளும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, அந்நாட்டில் தங்கியுள்ள காலத்தில் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்குடன் இரு தரப்புப் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுவாரென ஜனாதிபதி செயலகம் தெரிவித்தது. ஜனாதிபதியின் இந்திய விஜயத்தில் வெளிவிவகார அமைச்சர் ஜீ. எல். பீரிஸ¤ம் பங்கேற்பார். அப்போது அவர், இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். எம். கிருஷ்ணா, உள்நாட்டலுவல்கள் அமைச்சர் பி. சிதம்பரம், அமைச்சர்கள் வயலார் ரவி, ஸ்ரீஆந்த்சர்மா ஸ்ரீகபில் சிபால் உட்பட இந்திய சிரேஷ்ட அமைச்சர்கள் பலருடனும் துறைசார்ந்த விடயங்கள் தொடர்பில் முக்கிய பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ளவுள்ளார். அத்துடன் 15ம் திகதி புதுடில்லியில் நடைபெறும் ஒப்சேவர் ரிசேர்ச் பவுண்டேஷன் நிகழ்விலும் அமைச்சர் சிறப்புரையாற்றவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்தது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக