"கம்யூனிஸ்டுகள், தி.மு.க.,வை ஏற்றுக்கொள்ளும் காலம் வரும். இப்போதுள்ள கம்யூனிஸ்டுகள், கம்யூனிசத்திற்கு எதிராக உள்ளனர். நான் கம்யூனிசத்திற்கு எதிரானவன் இல்லை' என முதல்வர் கருணாநிதி, நாகையில் பேசினார்.
நாகையில் மாவட்ட தி.மு.க., சார்பில் பொதுக்கூட்டம் நடந்தது. விஜயன் எம்.பி., தலைமை தாங்கினார். அமைச்சர்கள் கோ.சி.மணி, துரைமுருகன், பொன்முடி, வேலு, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், உபயதுல்லா, மதிவாணன், பெரியகருப்பன், மத்திய அமைச்சர் பழனிமாணிக்கம், முன்னாள் அமைச்சர் டி.ஆர்.பாலு உட்பட பலர் கலந்து கொண்டனர்.கூட்டத்தில் முதல்வர் கருணாநிதி பேசியதாவது:நாகை மாவட்டத்தில் விவசாயிகளுக்காக நிலச்சுவான்தாரர்களை எதிர்த்து போராட்டம் நடத்தியவன் தான் கருணாநிதி. விவசாயிகளுக்கு நலன் தரும் நல்ல பல திட்டங்களைச் செயல்படுத்தியவன் கருணாநிதி. கம்யூனிசம் என்பது வேறு, கம்யூனிஸ்டுகள் என்பவர்கள் வேறு. ரஷ்யாவில் உருவான கம்யூனிஸ்டுகள் ஏழைகளை, தொழிலாளர் வர்க்கத்தை உயர்த்துவதற்காக பாடுபட்டவர்கள். இப்போதுள்ள கம்யூனிஸ்டுகள், கம்யூனிசத்திற்கு எதிரானவர்களாக உள்ளனர். கம்யூனிஸ்டுகள் தி.மு.க.,வை ஏற்றுக்கொள்ளும் காலம் வரும்.சிறுதாவூர் பிரச்னையில் நடவடிக்கை எடுக்க மனு கொடுத்தவர்கள், நடவடிக்கை எடுக்கும் போது ஆதரவாக இருப்பர் என்று நினைத்தால், நடவடிக்கை எடுக்கத் துவங்கிய 10 நாட்களிலேயே சிறுதாவூர் பக்கம் நின்று கொண்டு தி.மு.க., ஆட்சிக்கு வரக்கூடாது என்கின்றனர்.
கூட்டணி வரலாம், போகலாம். கூட்டணி என்பது நிலையானது கிடையாது. கூட்டணி, கொள்கை அடிப்படையில் சேருவர். சோனியாவை அரசியலை விட்டே விலக்க வேண்டும் என்று மதவாத கட்சிகள் முயற்சித்தபோது, தெற்கில் இருந்து வடக்கில் நேசக்கரம் நீட்டப்பட்டது. சோனியா பதிபக்தி இல்லாதவர் என்று சொன்னவர்கள் எல்லாம் டில்லி பக்கம் பேசும் விசித்திரமெல்லாம் நடக்கிறது. டில்லியில் உள்ளவர்கள் கண்மூடித்தனமான பச்சைக் குழந்தைகள் இல்லை; வரலாறு தெரிந்தவர்கள். எதிர்க்கட்சியினருக்கு துதிபாடுபவர்கள் ஏமாந்து போவர்.தி.மு.க.,வை ஒழிப்பதற்காக அடியெடுத்து வைத்தால் அவர்கள் நொறுங்கிப் போய் விடுவர். அரசியலில் தி.மு.க., சந்திக்காத தொல்லைகள் இல்லை, பார்க்காத சிறைச்சாலைகள் இல்லை. தமிழனுக்கு தீங்கு என்றால் தீங்கை தடுக்க உயிரை கொடுத்த வரலாறு தி.மு.க.,வுக்கு உண்டு.
தி.மு.க.,வினர் எதையும் இழப்போம். ஆனால், சுயமரியாதையை இழக்க மாட்டோம். தி.மு.க.,வின் வளர்ச்சி திராவிட இயக்கத்தின் வளர்ச்சி. திராவிட கலாசாரத்தை இந்தியா முழுவதற்கும் வளர்ப்போம். நான் மறைந்த பிறகு என்னுடைய குழந்தைகள், பேரன், பேத்திகள் இந்த இயக்கத்தை காப்பாற்றுவர் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.இவ்வாறு முதல்வர் கருணாநிதி பேசினார்.
பொதுக்கூட்டம் துளிகள் : * தி.மு.க., பொதுக்கூட்டத்தில் முதல்வர் பேச்சை கேட்க வந்த தொண்டர்கள், கூட்டம் நடந்த 3 கி.மீ., தூரத்தில் உள்ள புதுச்சேரி மாநில எல்லையான வாஞ்சூரில் உள்ள, "ஒயின் ஷாப்'களுக்கு படையெடுத்ததால் வாஞ்சூர் பகுதி களைகட்டியது.
* எம்.எல்.ஏ.,க்கள் மீது எம்.பி., கோபம்:பொதுக்கூட்டத்திற்கான பணிகள் விஜயன் எம்.பி., மற்றும் அவரது ஆதரவாளர்கள் மேற்பார்வையில் நடக்க, மாவட்டத்தில் உள்ள தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் யாரும் தலை காட்டாத நிலையில் ஆத்திரமடைந்த விஜயன் எம்.பி., வேட்டியை மடித்துக் கட்டிக் கொண்டு, எம்.எல்.ஏ.,க்களை வசை பாடியபடி பணிகளை நேற்று மாலை வரை துரிதப்படுத்திக் கொண்டிருந்தார்.
* மேடையில் உட்கார்ந்திருந்த தலைவர்கள், மைதானத்திற்கு வெளியில் சாலைகளில் நிற்கும் தொண்டர்களை பார்க்கும் வகையில் இரண்டு எல்.இ.டி., "டிவி' வைக்கப்பட்டிருந்தது.
* பொதுக்கூட்ட மைதானத்தையொட்டியுள்ள அரசு மண்ணெண்ணெய் விற்பனை மையத்திற்கான மின்சாரம் கடந்த 8ம் தேதி முதல் துண்டிக்கப்பட்டு விற்பனை நிறுத்தப்பட்டதால், பொதுமக்கள் அதிருப்தியடைந்தனர்.
* வியாபாரிகள் எரிச்சல் : முதல்வர் கருணாநிதி வருகையையொட்டி, நகர் முழுவதும் சாலையின் இருபுறத்திலும் வியாபார கடைகளை மறைத்து சவுக்கு கட்டைகளில் கொடி கம்பங்கள், கட்-அவுட்கள், டியூப் லைட்கள், சாலைகளை ஆக்கிரமித்து அலங்கார வளைவுகளை வைத்ததால் வியாபாரிகள் எரிச்சலடைந்தனர்.
கைப்புள்ள - njTamilnadu,இந்தியா
2010-10-11 12:31:52 IST
சேகர் நீங்க என்ன தான் கத்தினாலும் கதறுனாலும் இந்த பசங்க பணமா வாங்கி இனாம ஒட்டு போடுவாங்க ! நாம கழுத மாத்ரி கத்துனாலும் வரத்து என்னமோ மஞ்சத்துண்டு தான்.பேசாம சாப்பிட்டு தூங்குங்க ! வரட்டா...
தூத்துக்குடியான் - chennai,இந்தியா
2010-10-11 12:18:45 IST
பதி பக்தியை குறைகூறியவர் டில்லி நோக்கி படை எடுக்கின்றனர் என்கிறார் கலைஞர். 1978 ம ஆண்டு அன்னை இந்திரா மதுரை மாநகருக்கு பிரதமர் பதவி இழந்து MP பதவி இழந்து காங்கிரஸ் தலைவி ஆக வந்தபோது திமுகவினர் நடத்திய கலவரத்தால் ரத்தம் வந்ததைக்கூட மாசு படக்கூறி மகிழ்ந்தவர் தானே இவர். இந்திரா காந்தியை சாக்கடை மொழியில் வசனம் முரசொலியில் அப்போது வந்ததை நாங்கள் யாரும் மறக்க வில்லை, மறக்கவும் முடியாது. மீசை வைக்காத முசோலினி, இடிஅமீன், ஹிட்லர் என இன்னும் எழுத முடியாத வார்த்தைகளால் வர்ணித்து வசை பாடியவர் இவர். மைனாரிட்டி அரசாக இருப்பதால் தள்ளாத வயதிலும் விமானநிலையம் சென்று சோனியாவை வரவேற்றார். முழு பலம் இருந்தால் இவர் கூரை மேல் போட்ட பாதரசம். இவர் கொள்கை எல்லாம் சர்க்காரியா குழு சொன்னது போல விஞ்ஞான முறையில் ஊழல் புரிவது மக்கள் நலம் மக்கள் நலம் என்பார் தம் மக்கள் நலம் ஒன்றே தான் பெரிது என்பார் மகளை மடையர்களாக எண்ணி பேசுகிறார் கோடிக்கணக்கான என் உடன் பிறப்புகள் கழகத்தை காப்பர் என்று சொல்ல முடியவில்லை. பேரன் பேத்தி காப்பாற்று வார்களாம் . இன்னும் ஆறே மாதம் ஆட்சி மாறும் இவர்கள் அடித்த கொள்ளை வெளிவரும்....
பெரியார் - சென்னை,இந்தியா
2010-10-11 11:23:07 IST
எந்த ஒரு சாம்ராஜ்யமும் அரசர்கள் காலத்திலேயே நூறு வருடம் வழி வழியாக தாண்டியதில்லை. வரலாறே இதற்கு சாட்சி. இதற்கு திருவாருர்காரரும் அவரது குடும்பமும் விலக்கில்லை....
மறத் தமிழன் - சென்னை,இந்தியா
2010-10-11 11:18:44 IST
ஐயா மஞ்சள் துண்டு, நீயும் ஒரு கம்யூனிஸ்ட், நீயும் ஒரு காங்கிரஸ்வாதி, நீயும் ஒரு தலித்... இப்படி அனைத்து கட்சிக்கும் உரிமை கொண்டாடினால் எப்படி? உடனே எதிர் கட்சி எல்லாம் உன்னுடன் கூட்டணி வைக்க நான் முந்தி நீ முந்தி என்று வந்து நிற்பார்களா? இப்படி எல்லாம் சொல்லிக்கொண்டு போனால் என்ன? ஒரு நல்ல காமெடி செய்தி பார்த்த அனுபவம் தான் எங்களுக்கு. தினமும் உன் காமெடி அறிக்கை எங்களுக்கு கிச்சு கிச்சு முட்டுது. ஹி ஹி ஹி ஹி ஹி...........
சு. சத்திய அருணாசலம் - திருநெல்வேலி,இந்தியா
2010-10-11 10:44:48 IST
நான் தான் கம்யூனிஸ்ட் காரன், நான் தான் பெரியார் வழி நடப்பவன், நான் தான் அண்ணா கொள்கை கடைபிடிப்பவன். நான் தான் திராவிட கொள்கையை கடைபிடிப்பவன். நான் தான்..... நான் தான் .... நான் தான்..... நான் தான் .......
மூர்த்தி - நாகப்பட்டினம்,இந்தியா
2010-10-11 10:42:44 IST
அது என்னய்யா பொதுக்கூட்டம் துளிகள்? தி.மு.க கூட்டத்துக்கு மட்டும் இது போன்ற தலைப்பு? மற்ற கட்சி கூட்டத்திலேல்லாம் நடக்காத ஒன்றா நடந்து விட்டது? உமது குசும்புக்கு அளவே இல்லாமல் போய் விட்டது....
கணேஷ் க - அகமதாபாத்,இந்தியா
2010-10-11 10:20:54 IST
நீங்க கம்யுனிசத்திற்கு எதிரான ஆள். இல்லை என்றால் கம்யுனிஸ்ட் கட்சியில் சேர வேண்டியது தானே....
Vaithianathan - Muscat,ஓமன்
2010-10-11 10:08:03 IST
அப்போ இவருடைய மகன்,பேரன், பேத்திகள் மேல் தான் நம்பிக்கை வைத்துள்ளார். மற்ற இரண்டாம் கட்ட தலைவர்கள் மேல் இவருக்கு நம்பிக்கை இல்லாததையே காட்டுகிறது. அவர்களெல்லாம் இப்போ என்ன செய்ய போகிறார்கள். சூடு சொரணை இருந்தால் கட்சியை விட்டு போய் விடுவார்கள். ஐய்யா கோ.சி.மணி, துரைமுருகன், பொன்முடி, வேலு, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், உபயதுல்லா, மதிவாணன், பெரியகருப்பன், மத்திய அமைச்சர் பழனிமாணிக்கம், முன்னாள் அமைச்சர் டி.ஆர்.பாலு நீங்களெல்லாம் என்ன செய்ய போறீங்க....
umas - salem,இந்தியா
2010-10-11 09:54:17 IST
எந்த அரசியல் கட்சி கூட்டம் நடத்தினாலும் ஏற்படும் அசொகரியும் தான் இங்கும் நடந்து உள்ளது....
joseph - chennai,இந்தியா
2010-10-11 09:52:32 IST
நான் மறைந்த பிறகு என்னுடைய குழந்தைகள், பேரன், பேத்திகள் இந்த இயக்கத்தை காப்பாற்றுவர் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.இவ்வாறு முதல்வர் கருணாநிதி பேசினார்.What a cruel and selfish speech. For this Anna started dmk party. This time if we do not elect jayalalitha even god cannot save tamil nadu. Best way is to support jaya from now onwards....
சென்னை pokkiri - chennai,இந்தியா
2010-10-11 09:44:37 IST
எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே....
H நாராயணன் - அக்ரான்,யூ.எஸ்.ஏ
2010-10-11 09:11:27 IST
நான் மறைந்து போன பிறகு, என் மகன், பேரன், பேத்திகள் இந்த இயக்கத்தை காப்பாற்றுவார்கள் என்று கூறியுள்ளது திமுக ஒரு குடும்ப அரசியல் என்பதை பறைசாற்றுகிறது. இதை விட ஒரு அசிங்கம் எதுவும் திராவிட இயக்கத்திற்கு தேவையில்லை. சோனியா வரக்கூடாது என்று மதவாத சக்திகள் முயற்சித்ததாம். இவர் கூறும் அதே மதவாத சக்திகளுடன் இவர் கூட்டு சேர்ந்து சோனியா வரகூடாது என்று முயற்சித்தாரே... அதை மறைக்க முடியுமா இதே சோனியா பதி பக்தி இல்லாதவர் என்று திமுகவும் விமர்சித்ததே... அதை போல இவரும் சோனியாவை விமர்சித்ததை சொல்ல வேண்டியதுதானே கம்யுனிஸ்டுகள் திமுகவுடன் சேரும் காலம் வருமாம்.. அதுவும் யார்.. மாவோயிஸ்டுகளை வளர்த்து விட்டவர்கள் என்று கூறிய கம்யுனிஸ்டுகள் இவர்களுடன் சேருவார்களாம். ஏன் காங்கிரஸ் இவர்களை விட்டு வெளியேறும் என்று முடிவு செய்து விட்டாரா என்ன?...
ப்ளடி பக்கிரி - அரசமரத்தடி,இந்தியா
2010-10-11 08:25:18 IST
கம்யூனிஷ்டுங்க எப்ப திருடணும், சுரண்டணும்னு நினைக்கிறாங்களோ அப்போது உங்களோட கூட்டணி சேருவாங்க தலைவரே. இப்ப அந்த எண்ணம் இல்ல அவுங்களுக்கு....
தமிழரசன் - சென்னை,இந்தியா
2010-10-11 08:17:22 IST
இன்னொரு முறை திமுக வந்தால் நாம் அனைவரும் தற்கொலை செய்து கொள்வது தான் நல்லது. இந்த முறை அதிமுக 210 தொகுதியில் வெற்றிபெறுவது உறுதி, குடும்ப அரசியலுக்கு வேட்டு. குடும்ப கொள்ளைக்கு ஆப்பு. அஞ்சாநெஞ்சனுக்கு முதல் ஆப்பு....
Ethiroli - Chennai,இந்தியா
2010-10-11 07:39:33 IST
அய்யா யோக்கிய சிகாமணி, கம்யூனிஸ வாதிகளும் அதை தானே சொல்கிறார்கள். இப்போது திமுக வேறு திருவாரூர் முத்துவேல் கருணாதி வேறு என்று. அவர்கள் திமுகவை வெறுக்கவில்லை உங்கள் குடும்ப ஆதிக்கத்த்தைதான் எதிர்கிறார்கள். ஏன் நீங்கள் வாரி வாரி வழங்கினாலும் மக்கள் சக்தி மக்கள் கையில் உள்ளது என்பது உங்களுக்கும் தெரியும். என் குடும்பம்தான் திமுக என்றால் எப்படி ஏற்றுகொள்வார்கள். ஏழைகளை உயர்த்துவது என்ற வார்த்தையை எப்படி அய்யா நீங்கள் உச்சரிப்பது. இலவச டிவி வழங்கியது எதற்கு மக்களின் வசிதிக்காகவா அல்லது நீ கொள்ளை யடிக்கவா? உன் இயக்கத்தை காப்பாற்ற இப்போதும் நீ உன் மகன்கள் மகள்கள் பேரன்கள் பேத்திகள் இருக்கிறார்கள் என்று சொல்கிறாயே எப்போது அந்த இயக்கத்தை மக்களிடம் கொடுக்க போகிறாய். இது மக்களாட்சியா அல்லது மன்னராட்சியா?...
sakthi - namakkal,இந்தியா
2010-10-11 07:34:32 IST
ஐயோ ஐயோ இந்த புளுகு மூட்டைங்க தொல்லை தாங்க முடியலையே .......
கே.விஜிகுமார் - villupuram,இந்தியா
2010-10-11 07:16:57 IST
பேஷ், பேஷ் நூத்தல ஒரு வார்த்தை: நான் மறைந்த பிறகு என்னுடைய குழந்தைகள், பேரன், பேத்திகள் இந்த இயக்கத்தை காப்பாற்றுவர் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. - அந்த நம்பிக்கை நனவாகும் என்ற நம்பிக்கை எங்களுக்கும் உண்டு,...
கருணாநிதி - சென்னை,இந்தியா
2010-10-11 07:16:14 IST
இந்த கூட்டம் வழியாக நான் ஒத்துக்கிறேன் குடும்ப அரசியல் நடத்துகிறேன் என்று.... இதை யாராலும் தடுக்க முடியாது .........
கே.ஜீவிதன் - villupuram,இந்தியா
2010-10-11 07:10:18 IST
"ரஷ்யாவில் உருவான கம்யூனிஸ்டுகள் ஏழைகளை, தொழிலாளர் வர்க்கத்தை உயர்த்துவதற்காக பாடுபட்டவர்கள்" அப்ப, அங்கே ஏன் கம்யூனிசம் தோல்வியுற்றது?...
ராஜன்.சு - chennai,இந்தியா
2010-10-11 06:12:40 IST
மதவாத கட்சிகள் நடத்திய ஆட்சியின் போது கூட்டணி வைத்து அமைச்சர வையில் பங்கு பெற்று ஆட்சி சுகத்தை அனுபவித்து சுரண்டியபிறகு மதவாத கட்சிகளை இகழ்வதா?...
ராம் - சிங்கப்பூர்,சிங்கப்பூர்
2010-10-11 05:33:42 IST
தாத்தா உனக்கு என்ன ஆட்சி அடிக்கடி இப்டி சீக்கு வந்த கோழி மாறி எதையாவது பொலம்பிட்டே இருக்க...உன்னைய நெனச்சா சிரிக்கிறதா அழுகுறதா னு தெரில..உன் மனசுல என்ன மகாராஜா பரம்பரை னு நெனப்பா...ஏன் உனக்கு பிறகு வேற யாரும் தமிழ் நாட்ட ஆள கூடாதா ? அது என்ன உன் மகன், பேர புள்ள என்னய்யா அக்கறை...ஒரு ஊர்ல தூக்குனாங்குருவி ஒன்னு மரத்துல ஏறி அது கூட்டுக்குள மல்லாக்க படுத்திட்டு இந்த உலகத்தையே நாம தான் காப்பாத்துறோம் வானத்த கையாள தாங்கி புடிச்சிட்டு இருக்கோம் கொஞ்சம் கண் அசந்திட்டா வானம் கீழ விழுந்து எல்லாரும் செத்திடுவாங்க னு தூங்காம ராத்திரி முழுதும் கொட்ட கொட்ட முழிச்சிட்டு இருந்துச்சாம். அந்த மாறி இருக்கு நீ பேசுறது...நீ ஒரு வாழும் நரகா சூரன்...இலவசத்த கொடுத்து எங்களை அழிக்க வந்த சுனாமி....போதுமா இல்ல இன்னும் சொல்லட்டுமா......
mani - singapore,சிங்கப்பூர்
2010-10-11 05:16:47 IST
தி.மு.க., பொதுக்கூட்டத்தில் முதல்வர் பேச்சை கேட்க வந்த தொண்டர்கள், கூட்டம் நடந்த 3 கி.மீ., தூரத்தில் உள்ள புதுச்சேரி மாநில எல்லையான வாஞ்சூரில் உள்ள, "ஒயின் ஷாப்'களுக்கு படையெடுத்ததால் வாஞ்சூர் பகுதி களைகட்டியது.* வியாபாரிகள் எரிச்சல் : முதல்வர் கருணாநிதி வருகையையொட்டி, நகர் முழுவதும் சாலையின் இருபுறத்திலும் வியாபார கடைகளை மறைத்து சவுக்கு கட்டைகளில் கொடி கம்பங்கள், கட்-அவுட்கள், டியூப் லைட்கள், சாலைகளை ஆக்கிரமித்து அலங்கார வளைவுகளை வைத்ததால் வியாபாரிகள் எரிச்சலடைந்தனர். சிங்கப்பூர் சேகர் உன்கனவு பலிக்காது, கன்னித்தாய், அதுவும் பார்டைம் அரசியல் தலைவர் கனவும் பலிக்காது. 200 தொகுதிகளில் திமுக வெற்றி உறுதி மிஸ்டர் சேகர்....
இராஜா - நியூயார்க்,யூ.எஸ்.ஏ
2010-10-11 05:08:39 IST
காம்ரேடுகளுக்கும் வெட்கமில்லை, கலைஞருக்கும் வெட்கமில்லை. ஒரு நாள் இருவரும் கட்டிபிடித்து உச்சிமுகர்வர், அடுத்த நாளே காறி துப்பிக்கொள்வர். அதையெல்லாம் பார்த்து இரண்டு கட்சியினரும் முட்டாளாக ஆனதுதான் மிச்சம்....
விமல் ஸ்ரீநிவாஸ் - chennai,இந்தியா
2010-10-11 03:22:18 IST
கம்யூனிஸ்டுகளை இழுக்க உங்கள் முதல் முயற்சி. எதிர்க்கட்சியினரை ஒர் அணியில் செர்த்து போராட்ட முயற்சி என்றதும் ரஷ்யா செல்கிறீர்கள். நியாயம் என்பது வேறு,தி.மு.க என்பவர்கள் வேறு என்பது சிசுக்கும் தெரியூம் எதற்கு இன்னும் நிலா சோறு கதைகள் உங்கள்க்கு பிறகு உங்கள் மகன், பேரன் ....என்பது நிங்கள் நேற்று சொல்லி தான் தெரியம்!!! உங்கள்க்கு பிறகுகாவது நங்கள் நிம்மதியாக இருக்ககூடாத?...
ப.சேகர் - சிங்கப்பூர்,சிங்கப்பூர்
2010-10-11 03:08:29 IST
ரொம்பவும் புலம்பறாரே..கூட்டணி வரலாமாம் போகலாமாம்..ஆகா..என்னவோ நடந்துடுச்சு..சுயமரியாதையாம்..தன்மாணமாம்..ஆஹா..புதுசு புதுசா...வசனம் கிளம்பிடுச்சே..சோனியா அம்மையார் வெறும் ஐந்து நிமிடம் மட்டுமே சந்திச்சார்..பொதுக்கூட்டத்திலே கூட திமுக கூட்டணி பற்றி பேசவும் இல்ல..பெருசே..உன் தூக்கம் போச்சா?? இவர் "கம்யூனிஸ்ட்"?? எந்த ஊர்ல பல்லாயிரம் கோடிகளை பதுக்கிவைதவன் கம்யூனிஸ்ட்? இவரு ஏழை பங்காளராம்? உளறல்ன்னு வந்துட்டா அடேங்கப்பா..மஞ்ச துண்டு பெருசு போல "மனம் நொந்து" உளற யாராலுமே சத்தியமா முடியாது.!!ஆனாலும் மவனே இந்த பயங்கர "உளறலில்"கூட மனுஷன் படா "உஷாரா"த்தான் இருக்கார்..இவருக்கப்பரம் இவர் பேரன் பேத்திகள்தான் கட்சிய "காப்பாத்துவாங்கலாம்"..பார்ட் டைம் கம்யூனிஸ்ட் சொல்லற "டைமிங்" பார்த்தீங்களா..அம்மா சொன்னதும்..இவர் புலம்பறதும் கூட்டி கழித்து பார்த்தால் காங்கிரஸ் கூட்டணி மாறுவது "உறுதியோ"? பார்ப்போம் நம்ம வாசகர்கள் என்னோட சந்தேகம் தீர்வதுபோல கருத்து சொல்வதை எதிர்பார்கின்றேன்.....
திரு ஜெய் - கனடா,கனடா
2010-10-11 02:59:13 IST
"""""கம்யூனிசம் என்பது வேறு, கம்யூனிஸ்டுகள் என்பவர்கள் வேறு.""" அதுபோல திமுக என்பது வேறு திமுககாரர்கள் என்பது வேறோ. திமுக காரர்களே திமுகவை ஏற்கும் காலம் வருமா?...
சந்தோஷ்.g - vellore,இந்தியா
2010-10-11 00:57:09 IST
போட்டார் பாரு ஒரு போடு, அன்பழகன், துரை முருகன், மற்றும் கட்சியில் ரொம்ப வருடங்களாக இருந்து, பல் தேய்ந்து பொக்கையாகி போன நிறையபேர் இருக்கையில், நான் மறைந்து போன பிறகு, என் மகன், பேரன், பேத்திகள் இந்த இயக்கத்தை காப்பாற்றுவார்கள் என்று கூறியுள்ளது பெருசு. தமிழ்நாட்டை கூறு போட்டு பிள்ளைகளுக்கு கொடுக்காமல் மறைய மாட்டார் போல. இன்னொரு முறை திமுக வந்தால் நாம் அனைவரும் தற்கொலை செய்து கொள்வது தான் நல்லது. இந்த முறை அதிமுக 200 தொகுதியில் வெற்றிபெறுவது உறுதி, அப்போ இருக்குது குடும்ப அரசியலுக்கு வேட்டு. இப்பொழுதெல்லாம் கம்யுனிஸ்ட் மீது மஞ்சளுக்கு பாசம் பொங்குது, ஏன் என்றால் கம்யுனிஸ்ட் தோழர்கள் யாரை வேட்பாளர்களாக சுட்டி காட்டுகிறார்களோ அவர்களுக்கு தான் வோட்டு போடுவார்கள், அவர்கள் பணம் வாங்கி கொண்டு வாக்களிபவர்கள் இல்லை, கம்யுனிஸ்ட் கட்சிக்கு தொகுதிக்கு மூன்று, நான்காயிரம் வாக்குகள் வரை உள்ளது, அது எங்கே சுளையாக அதிமுகவுக்கு போய்விடுமோ என்ற பயம்....
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக