சனி, 7 நவம்பர், 2026

திரிஷாவும் விஜய்யும் எழுத்தாளர்களா? பெரியார் நூலகம்

May be an image of one or more people and people smiling

 Ancy Bency : Breaking -  சில தினங்களுக்கு முன்பு முதல்வர் விஜயால் திறந்து வைக்கப்பட்ட கோவையில் அமைந்துள்ள பெரியார் நூலகத்தில் புத்தகங்களை வாங்கியதில் பல கோடி ரூபாய் ஊழல்
வெறும் 300 ரூபாய் மதிப்பில் உள்ள புத்தகங்களை 1500 ரூபாய் விலை கொடுத்து வாங்கியிருக்கிறார்கள்
இது தொடர்பாக எழுத்தாளர் பெருமாள் முருகன் பல முக்கியமான குற்றச்சாட்டுகளை முன் வைத்துள்ளார்
முந்தைய திமுக ஆட்சி காலத்தில் ஜனவரி மாதத்தில் புத்தகங்களை வாங்குவதற்கான ஒப்பந்தங்கள் போடப்பட்டது எனவே இதுகுறித்து விசாரணை நடத்தப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் கூறியுள்ளார்
ஆனால் ஜூன் ஜூலை மாதங்களில் ஆய்வுக் கூட்டம் நடத்தி புத்தகப் பரிந்துரை குழுவுடன் பதிப்பக உரிமையாளருடன் கூட்டங்கள் நடந்துள்ளது நிறைய திமுக ஆதரவு பதிப்பகங்கள் நீக்கப்பட்டது குறிப்பாக நக்கீரன் பதிப்பகம் 
ஆனால் வாதத்துக்கு வைத்துக் கொண்டாலும இந்த பினிக்ஸ் பதிப்பகம் திமுக காசு வாங்கியிருந்ததாக இருந்தால் இவர்கள் ஏன் அந்தப் பதிப்பகத்தை நீக்கவில்லை


முந்தைய திமுக ஆட்சியில் போடப்பட்ட பல ஒப்பந்தங்களை ரத்து செய்து வரும் தமிழக வெற்றிக்கழக அரசு ஏன் இந்த ஒப்பந்தங்களை ரத்து செய்யவில்லை என்று கேள்வி எழுகிறது
சந்தை விலையை விட அதிகமாக உள்ளது என்று பரிந்துரை குழு ஜூலை மாதம் எழுதிய கடிதத்திற்கு பதில் அனுப்பாத பள்ளி கல்வித்துறை அமைச்சர் 
ஏழு பேர் கொண்ட புத்தகத் தேர்வு  குழு தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் தான் படித்தவர்கள் தான் எது நல்ல பதிப்பகம் டுபாக்கூர் பதிப்பகம் எது என்று தெரியாமல் இருந்தார்கள்
உண்மையில் இதில் ஊழல் நடந்திருக்குமேயானால் அந்த ஊழலை செய்தது யார் திமுகவா? தமிழக வெற்றிக்கழகமா? அல்லது இருவரும் சேர்ந்தா?
ஊழலை செய்தது யார்? அவர்களுக்கு தண்டனை எப்போது?
முதல்வர் நேரடியாக திறந்து வைத்த ஒரு திட்டத்தில் இப்படியான ஊழல் நடந்திருக்கிறது என்றால் நிச்சயமாக சம்பந்தப்பட்ட துறை அமைச்சருக்கும் அதிகாரிகளுக்கும் தெரியாமல் இருக்க வாய்ப்பே இல்லை!
அதுவும் ஜனவரி மாதமே இறுதி செய்யப்பட்ட ஒப்பந்தம் என்றால் நிச்சயமாக அனைவருக்குமே இது தெரிந்திருக்கும் ஆனாலும் மறைத்திருக்கிறார்கள் என்றால் ஏதோ ஒன்று நடந்திருக்கிறது?
முந்தைய ஆட்சி இறுதி செய்திருந்த சாலை ஒப்பந்தங்கள் கட்டிட ஒப்பந்தங்கள் அனைத்தையும் நிறுத்தி வைத்த வெற்றுக்கழக அரசு இந்தப் பதிப்பகத்தை மட்டும் விட்டு வைத்தது ஏன்
மே மாதம் இவர்கள் ஆட்சிக்கு வந்த பிறகு தான் ஜனவரி மாதம் உறுதி செய்திருந்தாலும் நிறைய பதிப்பகங்களை நீக்கி புது பதிப்பகங்களுக்கு ஆடர் வழங்கியுள்ளனர் இந்த பீனிக்ஸ் டுபாக்கூர் பதிப்பகத்திற்கு திமுகவே ஆதரவு கொடுத்திருந்தாலும் இவர்களும் நீக்காமல் வைத்திருந்த காரணம் என்ன 
இவர்களின் புத்தகங்கள் அனைத்திலும் விஜய் பெயர் சேர்ந்தே உள்ளது எழுத்தாளர் பெயரில் விஜய் இல்லாமல் இல்லை. 
இவர்களை கேவலப்படுத்த எதிர்கட்சிகள் செய்து இருந்தாலும் இந்த சின்ன விஷயத்தை கூட கண்டுபிடிக்க முடியாத தற்குறிகளா அதிகாரத்தில் இருப்பது.
தவறா அனுபவம் இல்லாமல் ஒரு விஷயத்தை செய்து விட்டு அதில் இருந்து தப்பிக்க திமுக திமுக என்றால் 
மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்

கருத்துகள் இல்லை: