மின்னம்பலம் :மேற்கு
வங்கத்தில் ராமநவமி பேரணியில் ஏற்பட்ட வன்முறைக்குக் கண்டனம்
தெரிவித்துள்ள மம்தா பானர்ஜி, “ஆயுதங்களுடன் பேரணி செல்லுங்கள் என்று ராமர்
யாரிடமாவது கூறியுள்ளாரா?” எனக் கேள்வியெழுப்பியுள்ளார்.
மேற்கு வங்கத்தின் பல்வேறு பகுதிகளில் பாஜக மற்றும் மற்றும் சங் பரிவார் அமைப்பு சார்பில் ராமநவமி ஊர்வலம் கடந்த ஞாயிறன்று நடைபெற்றது. இந்நிலையில், ராமநவமி ஊர்வலத்தில் ஆயுதங்களுடன் பேரணி செல்ல அவர்கள் திட்டமிட்டுள்ளதாகவும் எனவே எச்சரிக்கையுடன் இருக்கும்படியும் காவல் துறைக்கு முதல்வர் மம்தா பானர்ஜி உத்தரவிட்டிருந்தார்.
அதன்படி ஊர்வலத்தில் அந்த அமைப்புகளின் ஆதரவாளர்கள் பலர் தங்களது கைகளில் கத்தி, வாள், துப்பாக்கி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் கலந்துகொண்டனர். புருலியா மாவட்டத்தில் தடையை மீறி ஆயுதங்களுடன் அவர்கள் சென்றபோது போலீஸார் தடுத்துள்ளனர். இதையடுத்து இரு தரப்பினருக்கும் மோதல் வெடித்தது. அப்போது ஏற்பட்ட வன்முறையில் ஷாஜகான் என்பவர் பலியானார். ஐந்து போலீஸார் காயமடைந்தனர்.
இந்தச் சம்பவத்துக்கு முதல்வர் மம்தா பானர்ஜி கடும் கண்டனத்தை வெளிப்படுத்தியுள்ளார். இது தொடர்பாக அதிகாரிகளுடன் மம்தா ஆலோசனை நடத்தியுள்ளார். அப்போதும், “கையில் ஆயுதங்களுடனும் வாளுடனும் பேரணி செல்லும்படி ராமர் யாரிடமாவது கூறியுள்ளாரா? ராமரை அவமதிக்கும் இந்தக் குண்டர்களின் கைகளில் மாநில நிர்வாகம் மற்றும் சட்டம் ஒழுங்கை நாம் விட்டுவிடலாமா? அமைதியான பேரணிகளுக்கு நான் அனுமதி அளித்துள்ளேன். அடுத்தவர்களின் வீட்டுக்குள் துப்பாக்கியுடன் நுழைந்து ராமரின் பெயரில் கொலை செய்வதற்கு நான் அனுமதி வழங்கவில்லை. இதுபோன்ற பேரணி மேற்கொள்வோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒருத்தரையும் தப்பிவிடக் கூடாது” என்று பேசியுள்ளார்.
இத்தகைய பேரணிகளைப் பார்த்து மக்கள் பயந்துள்ளதாகக் குறிப்பிட்ட அவர், “வங்கத்தின் கலாசாரம் இதுவல்ல. இதுபோன்ற சம்பவங்களை சகித்துக்கொள்ள முடியாது. மதத்தின் பெயரால் அவர்கள் வியாபாரம் செய்கிறார்கள். இந்தச் சம்பவம் எதிர்காலத்தில் தொடரக் கூடாது. எனவே இந்த விவகாரத்தைக் கடுமையாக அணுக வேண்டும்” என்றும் அவர் கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக