புதன், 28 மார்ச், 2018

Google Street View தெருக்களை 3 டி யில் கூகிள் ஸ்ட்ரீட் வியு ... அனுமதிக்க இந்தியா மறுப்பு ... மக்களை இருட்டில் வைத்திருக்கும் கபட நோக்கம் ?


ஏன் அனுமதிக்க மறுக்கிறது இந்திய அரசு?மின்னம்பலம்: கூகுள் நிறுவனத்தின் ‘ஸ்ட்ரீட் வியூ’ என்ற வசதியை இந்தியாவில்
செயல்படுத்த இந்திய அரசாங்கம் அனுமதி தர மீண்டும் மறுத்துள்ளது.
உலகின் முன்னணி தேடுதளமான கூகுள், பல்வேறு தகவல்களைப் பயனர்களுக்கு வழங்குவதில் முதலிடம் பெற்றுள்ளது. ஓர் இடத்தில் இருந்துகொண்டே உலகின் பல்வேறு இடங்களைக் காண்பதற்கும் கூகுளில் வசதிகள் வழங்கப்பட்டுள்ளன. முதலில் புகைப்படங்களாகப் பயனர்களுக்கு பல்வேறு இடங்களைக் காண உதவிபுரிந்த கூகுள் நிறுவனம், கடந்த 2007ஆம் ஆண்டு முதல் ‘ஸ்ட்ரீட் வியூ’ என்ற முறையை அறிமுகம் செய்தது.
ஓர் இடத்தின் 360 டிகிரி புகைப்படத்தையும் பயனர்கள் இதன்மூலம் காண இயலும். அதுமட்டுமின்றி பயனர்கள் தங்களுக்கு விருப்பமான இடங்களை இதன்மூலம் பார்க்க வசதிகள் மேம்படுத்தப்பட்டன. ஸ்ட்ரீட் வியூ வசதிக்காகப் பல்வேறு இடங்களுக்குக் கூகுள் நிறுவனத்தின் 360 டிகிரி கேமரா கொண்ட கார் ஒன்று சென்று புகைப்படங்களை இணையத்தில் பதிவேற்றம் செய்கிறது. அமெரிக்கா மற்றும் ஐரோப்பியா நாடுகளில் மட்டுமல்ல இலங்கையிலும் கூட  இந்தத் தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்த கூகுள் இந்தியாவிலும் செயல்படுத்த கடந்த 2015ஆம் ஆண்டே அனுமதி கோரியது.


ஆனால், அதை நிராகரித்த இந்திய அரசாங்கம் அதன் பின்னர் இரண்டு முறை கூகுள் நிறுவனம் மீண்டும் முயற்சி செய்தும் அதை ஏற்றுக்கொள்ள மறுத்துள்ளது. சமீபத்தில் மீண்டும் முயற்சி செய்த கூகுள் நிறுவனத்துக்கு மீண்டும் ஏமாற்றம்தான் கிட்டியது. உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பயனர்கள் இந்தியாவைப் பற்றி அறிந்துகொள்ள இது ஒரு சிறந்த வாய்ப்பாக இருக்கும் என்றாலும் அதை இந்திய அரசாங்கம் நிராகரிப்பது ஏன் என்று இன்னும் புரியவில்லை.
நமது அண்டை நாடுகளான இலங்கை மற்றும் வங்கதேசம் ஆகியவையும் ஸ்ட்ரீட் வியூ வசதியைக்கொண்டுள்ளன. ஆனால், பல்வேறு இயற்கை வளங்களைக்கொண்ட இந்தியாவில் அவ்வாறான வசதிகள் வழங்கப்படாதது ஏமாற்றம்தான்.

கருத்துகள் இல்லை: