புதன், 28 மார்ச், 2018

500 ஆர் எஸ் எஸ் ஆதரவு ஐ ஏ எஸ் அதிகாரிகள் இடமாற்றம் 2019 மக்களவை தேர்தலில் தில்லுமுல்லு செய்ய வசதியாக

.viduthalai.in: நாடு முழுவதும் 500க்கும் மேற்பட்ட முக்கிய துறைகளில் உள்ள க்கிய நகரங்களுக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதில் குறிப்பாக டில்லி, அகமதாபாத், பெங்களூரு, போபால், புவனேஷ்வர், சண்டிகர், கவுஹாத்தி மற்றும் சென்னை உள்ளிட்ட பல முக்கிய நகரங்களுக்கு பணியிட மாற்றம் செய்து ஆணை அனுப்பி வைக்கப்பட உள்ளது. இவர்களில் ஒரு சிலரின் பின்புலத்தை ஆய்வு செய்தபோது இவர்கள் அனைவரும் தீவிர ஆர்.எஸ்.எஸ் ஆதரவளார்கள் மற்றும் பாஜக அனுதாபிகள் என ஈ.நாடு செய்தி நிறுவனம் கூறியுள்ளது. இது குறித்து கடந்த டிசம்பர் மாதம் இந்தியன் எக்ஸ்பிரஸ் ஏட்டில் வந்த கட்டுரையில் விரைவில் நாட்டின் முக்கிய பொறுப்புகளில் தங்களது ஆதரவு அதிகாரிகளை நியமிக்க உள்ளதாக உள்துறை அமைச்சகத்தின் முக்கிய பொறுப்பில் உள்ள ஒருவர் கூறியதாகவும், ஆனால் இது குறித்து வந்த தகவலை தாங்கள் உறுதிப்படுத்த முடியாது என்றும் கூறியிருந்தது.
இந்த நிலையில் தற்போது இந்த அளவில் பெரிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. சுதந்திர இந்தியாவில் இது போன்று அதிக அளவிலான எண்ணிக்கையில் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப் படுவது இதுவே முதல் முறை ஆகும். இதில் கர்நாடகம் மற்றும் தமிழகம் இடம் பெற உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனிடையே இந்த பெரும் மாற்றத்திற்கும், தேர்தலுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று புலனாய்வு அலுவலக வட்டாரம் தெரிவித்துள்ளது. ஆனாலும் இது நம்பத் தகுந்ததாக இல்லை.
புலனாய்வு அதிகாரிகள் ஒரே நேரத்தில் மாற்றப்பட்டுள்ளனர். அப்படி மாற்றப்பட்டு நியமனம் செய்யப்பட்டவர்கள் அனைவரும் பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ் ஆதரவாளர்கள் என்று தெரிய வந்துள்ளது. மக்களவைத்தேர்தலை நினைவில் வைத்தே இந்த நியமனங்கள் நடந்துள்ளன. 2019ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில், மத்திய புலனாய்வு அமைப்பைச் சேர்ந்த அதிகாரிகள் 500 பேர் இந்தியாவின் மு
அடுத்த ஆண்டு மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் 500 அதிகாரிகளை இடம் மாற்றம் செய்ய என்ன காரணம் என்றும் கேள்விகள் எழுந்து வருகின்றன. இணையதள முறைகேடுகள், வாக்குப்பதிவுக் கருவி முறைகேடுகள், வாக்காளர்பட்டியல் முறைகேடுகள் என பாஜகவின் தந்திரங்கள் அம்பலமாகிக்கொண்டு இருக்கும் போது, தாங்கள் செய்யும் முறைகேடுகள் சிறிதும் கசிந்துவிடாதவகையில் செயல்படும் விதமாக இந்த அதிகாரிகளை நியமித்து அதன் மூலம் பெரிய அளவில் முறைகேடுகளை நடத்தும் எண்ணத்தில் மோடி மற்றும் அமித்ஷா கூட்டணி செயல்பாட்டில் இறங்கி இருப்பதாக கணிக்கப்படுகிறது, குஜராத் தேர்தலின் போது இது போன்ற மோசடியை ஹர்திக் படேல் என்பவர் ஊடகவிய லாளர்கள் கூட்டம் ஒன்றில் தெரி வித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
2015ஆம் ஆண்டு அஸ்ஸாம் தேர்தலின் போதும், சமீபத்தில் நடந்து முடிந்த திரிபுரா தேர்தலின் போதும் அம்மாநிலத்தில் முக்கிய பணிகளில் மத்திய அரசு தலையிட்டு தங்களுக்கு வேண்டிய அதிகாரிகளை நியமித்தது.
இத்தகைய மாதிரி சோதனை வெற்றி பெற்றதால் தற்போது நாடு முழுவதும் நடைமுறைப் படுத்தும் விதமாக அதிகாரிகளை நியமனம் செய்துள்ளது. மோடி - அமித்ஷா கூட்டணியின் கடந்த கால நிகழ்வுகளை நன்கறிந்தோர் ஒரேநேரத்தில் 500 புலனாய்வு அதிகாரிகள் மாற்றப்பட்டதற்கான நுட்பத்தை நோக்கத்தை எளிதில் புரிந்து கொள்வார்கள்.
தேவை மக்கள் மத்தியில் விழிப்புணர்வே! மதச்சார்பற்ற கட்சிகள் ஒன்றிணைந்து சிறுசிறு மாச்சரியங்களை தூர எறிந்து, பெரு முயற்சியில் ஈடுபட்டு மக்களைக் காப்பாற்ற வேண்டியது முக்கிய கடமையாகும்.

கருத்துகள் இல்லை: